இன்னம்பூரான்
ஜூன் 20, 2017

unnamed (5)
புலவர் ராமசுப்ரமண்ய நாவலரின் அணுகுமுறை ஒரு பழங்கால ஐதீக கதை ஒன்றை நினைவூட்டுகிறது. சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், மறுபக்கத்திலிருந்து சம்ஸ்கிருதமும் ஒலித்தனவாம். சிலர் இதை கட்டுக்கதை என்பர். சிலர் இது அருமையான கற்பனை என்பர். நமக்கு வேண்டியதெல்லாம், சிந்தனை தானே. இரு மொழிகளும், சொல்லப்போனால், எல்லா மொழிகளிலும் நற்சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் நமது கலாச்சாரம் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளது, தமிழிலும், தெலுங்கிலும் போல. ஸலபசாஸ்திரம், உபநிஷத், பிரம்மசூத்ரம், யோகவாசிஷ்டம்,மஹாபாரதம், ராமாயணம், பாகவதம், சரகஸ்ம்ஹிதா, ஸுஷ்ருதசம்ஹிதா போன்றவை கருவூலங்கள். பழமையும், நவீனம் காண்கிறது, சம்ஸ்கிருதம். கணினி உலகத்தினர் அதை பெரிதும் வரவேற்கின்றனர். சொல்லப்போனால், விஞ்ஞானிகள் பெரிதும் போற்றும் மொழி அது. ஐன்ஸ்டீன் அவர்கள் பி.என்.குப்தா என்ற அறிஞரிடம் அந்த மொழி தன் ஆய்வுக்கு பயன்பட்டதாகச் சொன்னார் என்று கூறப்படுகிறது. ராபர்ட் ஆப்பன்ஹீமரும் அவ்வாறே. சம்ஸ்கிருத சொற்கள் பல மொழிகளின் பண்பாட்டில் இருக்கிறது, முக்கியமாக தமிழில். தமிழ் சொற்களும் அம்மொழியில் பயன்பாட்டில் இருப்பதாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு:

http://blogs.timesofindia.indiatimes.com/tracking-indian-communities/tamil-wouldnt-be-as-sweet-sans-sanskrit-let-our-children-learn-it

சித்திரத்துக்கு நன்றி:
http://photos1.blogger.com/blogger/7688/1730/1600/Rudrathaandavar-Pullamangai.0.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *