எதைக் கொடுத்து, எதை வாங்க
ரா.பார்த்தசாரதி
நாடகமே உலகம் என்று கவிஞன் சொல்வதுண்டு
நாமெல்லாம் அதிலே நடிக்கும் பொம்மைகளாய் இருப்பதுண்டு
இன்று வியாபாரிகள் கையில் பொம்மையாக சுழல்வதுண்டு
இன்று எதுவுமே சும்மா கிடைப்பதில்லை !
இலவசம் என்றாலே மக்களுக்கு பரவசம்
ஏமாறாமல் இருப்பதே நம் வசம்
எதை வாங்க, எதை விலையாய் கொடுக்கின்றாய்
இலவசப் பொருளின் விலையும் இதில் அடங்குமே
வேலியே பயிரை மேய்வது தெரிகின்றது
அரசும் வரிகளால் மக்களை பிழிகின்றது
பாதிக்கப் படுவதோ நடுத்தர வர்க்கமானதே
மக்கள் அவதியுறுவது வரிச்சுமை என தெரிந்ததே!
மகிழ்ச்சியை தொலைத்து சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம்
ஆடம்பரத்தில் வீழ்ந்து மடிகின்றது ஒரு கூட்டம்
ஆடையையும், ஆபரணத்தையும் குவிக்கின்றது ஒரு கூட்டம்
பொன்னிலும்,மண்ணிலும் பற்று கொண்டு அலையுது ஒரு கூட்டம் !
தொலைக்காட்சியில், வியாபார முறையில் ஆயிரம் விளம்பரம்,
வேண்டாததை, வாங்கி குவிக்கும் இளைய தலைமுறை கூட்டம்,
அன்பை ஆராதிக்கவும், வளர்க்கவும் இவர்களுக்கு தெரியவில்லை
பாசம், மனித நேயம், இவைகளை பொருட்படுத்தவில்லை !
உண்மையான பாசத்தையும், நேசத்தையும் அடைய பார்
அதற்காக அன்பையும், நல்லதையும் செய்து பார்
மனமகிழ்ச்சியும், நிம்மதியுமே உன் வரவு
உன் மேன்மையையும், புகழினையும் வளப்படுத்தும் உறவு !