எழுத்து – 5
முன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்கில் நுழைந்து
மென்னீல எழுத்து நதியில் கரைகிறேன்.
என்னவெல்லாமோ எழுத்தில் பகிர ஆசை
பன்மையாய் உந்துகிறது மழைத் துளிகளாக
உன்னுது எண்ணங்கள் எழுத்தாயுதிர்ந்திட ஆயினும்
முன்னேறும் அக்னியுறங்கும் காடு எழுத்துலகம்.
மென்னகை மென்னடை வன்மையாகவும் விழுந்து
முன்மாதிரியாக முரண்டுடன் முன்னோடியாகிற நல்லெழுத்து.
மூச்சாக, பேச்சாக, வீச்சாகும் எழுத்து
பூச்சான உலகில் உண்மையான உயர்வு.
நீச்சல் நீட்சியான நீன்மை (பழைமை) நீரதி(கடல்).
தீச்சொல்லற்ற நேர் பயண நினைவு.
அச்சமற்றுத் தகுதியாய் வாழ்வதின் முனைவு.
உச்சமான வாழ்வு மேன்மை நிறைந்தது.
பச்சை உண்மைகளே பதியப் படுகிறது.
துச்சமின்றி நிலைக்க வேண்டுமென் இச்சை.
நாள்தோறும் புதிய புரிதல்கள் பாடங்கள்
ஆள்கை முயற்சியடிப்படை கோவை(கோப்பாய்) மண்ணே
தோள் கொடுத்துத் துணை வருகிறது
நாள் கிழமை பார்க்காத உலா.
நீள்வது அமாவாசையிலும் மாணிக்க ஒளியன்றோ!
வேள்வி எழுத்தால் விளையும் நூல்கள்
தாள் திறக்கும் மனித மனக்கதவுகளை.
கேள்விச் செல்வத்தோடன்றோ மனிதன் பிறக்கிறான்!
கவிதைப் பிரசுரத்திற்கு மிக்க நன்றி.
மகிழ்ச்சி.
சகோதரி ஒரு உதவி செய்யுங்கள் ..எழுத்து 5 என்பதற்குப் பதிலாக 6 என்று எழுதியுள்ளேன் .இதைத் திருத்திவிடுங்கள்.
சிரமத்திற்கு மன்னிப்புடன்.