காத்திரு ! வருகிறேன் !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
நீண்ட காலம் கடந்த பிறகு,
மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !
தற்போது நான்
வெகு தூரம் போய் விட்டேன் !
தனிமையில்
தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?
காத்திருப்பாய் எனக்கு
மறுபடி உன்னருகே வரும்வரை ;
மறப்போம் நாம்
கண்ணீர் விட்டழுத காட்சியை !
காத்திருக் காதே,
உன்னிதயம் உடைந்தி ருந்தால் !
என்னை விட்டுப்
போய்விடு !
உறுதியாய் இதயம் இருந்தால்
பொறுத்திரு !
தாமதிக்க மாட்டேன் !
காத்திரு நான்
திரும்பி உன் பக்கம் வரும்வரை !
மறப்போம் நாம்
கண்ணீர் விட்டழுத காட்சியை !
உணர்கிறேன் நான்,
உனக்கும் தெரிய வேண்டும்
நல்லவனாய்
நானிருந்தேன் கூடிய வரை;
நீயும் உணர்ந்தால்
நானும் உன்னை நம்பிடுவேன்,
காத்திருப் பாய் நீ யெனக்கென
களிப்படைவேன்;
நீண்ட காலம் கடந்து, இன்று
மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் !
வெகு தூரம் போய் விட்டேன் !
தனிமையில்
தவிக்கிறேன் எப்படி தெரியுமா ?
+++++++++++++++


Leave a Reply