சாந்தி மாரியப்பன்

வெங்கோடையின் பின்னிரவில்

மழை வரம் வேண்டி

மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு

பன்னீர்த் துளிகளை

தட்சிணையாய்த் தெளிக்கின்றன,

மலை முகட்டில்

சற்று இளைப்பாறி விட்டு,

நீர்க்கர்ப்பம் தாங்கிப் பறக்கும்

மடி கனத்த மஞ்சுகள்..

 

தவளைகளின்

நாராச ‘கொர்கொர்’ சத்தத்திலும்,

சில்வண்டுகளின் ரீங்காரத்திலும்,

உணர்கிறான் விவசாயி..

அவன் மட்டுமே அறிந்து மயங்கும்

தெய்வீக சங்கீதத்தை..

 

மற்றோருக்கெல்லாம் அவதியையும்

சேர்த்துத் தரும் மழை..

பயிர்க்ளையும் உயிர்களையும்,

எப்படியும் காப்பாற்றி விடலாமென்ற

நிம்மதியையும், நம்பிக்கையையும்

மட்டுமே தருகிறது

ஏர் பூட்டும் உழவனுக்கு..

 

படத்திற்கு நன்றி

 

2 thoughts on “தெய்வீக சங்கீதம்

  1. மழை கொட்டித் தீர்த்ததது சென்னையில் சாரல்.
    உங்கள் வயல் தவளைகளும் ஏரு பூட்டிப் போகும்
    அண்ணனும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க