மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++
உள்ளத்தை மூடி விட்டு சற்று
ஓய்வெடு !
ஓடும் ஆற்றில் மிதந்து விடு !
மரிப்ப தில்லை அது ! மரிப்ப தில்லை அது !
சிந்தனை யாவும் சமர்ப்பணம்
செய்திடு
வெட்ட வெளிப் பாதத்தில் !
ஒளி வீசும் அது ! ஒளி வீசும் அது !
உள்ளத்திலே காண்பாய்
உலக வாழ்வின் மெய்ப் பொருளை !
உன்னுடன் பேசும் அது ! உன்னுடன் பேசும் அது !
அன்பு மயமே உலகம்,
அனைத்தும் அன்பில் தழைக்கும்.
அறிவே அது ! அறிவே அது !
அறியா மையும் ஆத்திரக் குணமும்
கடந்ததை எண்ணி, எண்ணிக்
கண்ணீர் விடும் !
நம்பிக்கை அது ! நம்பிக்கை அது !
ஆயின் கூர்ந்து நோக்கு உந்தன்
வண்ணக் கனவுகளை !
வாழ்வா அது ? வாழ்வா அது ?
இறுதிவரைச் சதுரங்க ஆட்டம் ஆடி விட்டு
பிறவிதனை முடித்து விடு !
ஆரம்பம் அது ! ஆரம்பம் அது !

Leave a Reply