சாந்தி மாரியப்பன்

வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ! இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.

 

 

 

 

 

 

 

பிங்க் நிறத்துக்கு கோபத்தைக் குறைக்கும் சக்தி உண்டாம். கோபப்படும்போது இந்த நிறம் நம்ம ஆற்றலை கிரகிச்சுக் கொள்கிறது. அதனால நம்ம இதயத்தோட தசைகள் வேகமாக செயல்படுவது குறையுது. இதனால கோபமும் கட்டுக்குள்ள வருது. ரொம்பவும் முரட்டுத்தனம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தணும்ன்னா, அவர்கள் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ். அடிக்கடி மே(லி)டத்திடம் ‘பாட்டுக் கேக்கும்’ நிலையில் இருப்பவர்கள் இதை முயற்சி செஞ்சு பார்த்து முடிவைச் சொல்லலாம் 🙂

 

 

 

 

 

 

மங்களகரமான மஞ்சள் நிறம் ஆற்றல், விழிப்புணர்வு, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. காலையில் உதிக்கும் மஞ்சள் நிறச் சூரியனை பார்க்கிறப்பவும், அந்த ஒளியில் நனையுறப்பவும் நமக்கு ஏற்படும் புத்துணர்ச்சியும் உற்சாகமுமே இதுக்கு சான்று. இந்த நிறத்தால், அது சுவருக்கு பூசப்பட்ட வண்ணமா இருந்தாலும் சரி, பூக்களா இருந்தாலும் சரி, நாம் சூழப்பட்டிருந்தால் நம்முடைய நரம்பு மண்டலம் ஒழுங்கா இயங்குதாம், அதே போல் நம்ம உடம்பின் வளர்சிதை மாற்றங்களும் சரியா நடக்குமாறு தூண்டப்படுதாம். நிறங்களிலேயே ஆளுமை மிக்க நிறமாவும் இது கருதப் படுகிறது.

 

1 thought on “நிறங்களும் குணங்களும்

 1. “வண்ணங்களின் குணங்கள் ” செய்தி படித்தேன். வெள்ளை நிறத்திற்கு
  வேறு நல்ல குணங்களும் இருக்கின்றன. வெள்ளை நிறம் ஒளியைத்
  திருப்பிவிடும்(Reflect ) குணமும் உஷ்ணத்தைத் திருப்பிவிடும் குணமும்
  உண்டு. எனவே தான் கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை உடை உடுத்தி
  விளையாடுகின்றனர். நம் நாட்டில் விதவைகளுக்கு வெள்ளை உடை
  உடுத்தச் சொன்னதற்குக் காரணமும் அதுவே. அது இக்காலத்திற்குப்
  பொருந்தாது. கல்விக் கடவுளாகிய சரஸ்வதிதேவி வெள்ளைத் தாமரைப்
  பூவில் தானே இருப்பதாகச் சொல்லுகிறார்கள். வெள்ளைக் கதருக்கு
  ஒரு மரியாதை இருந்தது. நம் கருத்தமனம் படைத்த அரசியல்வாதிகளால்
  அந்த வெள்ளைக்கு இருந்த மரியாதை குறைந்துள்ளது.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published.