கல்வி

-கவிஞர் பூராம்

பிஞ்சு விரல்கள்
வலி தாங்காமல் மனம்

கண்களில் குளம்
வலிந்தோடும் கன்னத்தி்ன் நீா்
சுட்டது என்னை

கூன்விழுந்த முதுகு
கவிழ்ந்த தலை
நம்பிக்கையில்லாக் கண்கள்

பேச மறுக்கும் வாய்
ஓலமிடும் மௌனம்
அவமானத்தில்  நான்

உண்ண பசியில்லை உண்கிறேன்
சிந்திக்க மனமில்லை படிக்கிறேன்

எழுத்துக்களோடு ஓயாத போராட்டம்
சொற்களோடு முடிவில்லா தொல்லை

அன்பாய் சில பேச
பாசமாய் பகிர்ந்துண்ண
ஏது நேரம்
படிக்கிறார்கள் பிஞ்சுகள்

அம்மாவின் ஆசைக்காக
அப்பாவின் அன்புக்காக

About ம. இராமச் சந்திரன்

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க