உயிர்த் துளி
மதியழகன்
மழைத் துளியாக இருந்தது
கடலாக உருமாறுகிறது
சமுத்திரத்தில் சங்கமமானவுடன்
மழையில் நனைந்த
ஆடைகளை அவிழ்க்க
மனம் வரவில்லை
மரங்கள் கையேந்துகின்றன
தயவுசெய்து பெய்து விடு
எத்தனை விதைகள்
காத்திருக்கின்றன
வந்து உயிர்கொடு
ஜீவன்களின் தாகம் தீர்க்க
கார்மேகமே கருணை கொள்
நாற்றுகள் களையிழந்து
நிற்பதைப் பார்
மனித இனத்தின் மீது ஏன்
மாற்றாந்தாய் மனப்பான்மை
எல்லாவற்றையும் விலை பேசும்
மனிதா,
ஐம்பூதங்களை உனது அடிமையாக்க
முயலாதே.
இயற்கை மனிதனுக்கு மட்டுமானதல்ல
என்பதை மறந்துவிடாதே.
nice