வண்ணத்துப் பூச்சி!
எஸ். நெடுஞ்செழியன்
வாழும் நாள் பதினைந்துதான்
என்றாலும் வருத்தப்படாமல் ..
வலம் வந்துகொண்டு இருக்கிறது
வண்ணக் கோலம் கொண்ட சிறகுகளோடு .
உறவாடுவதோ …
ஒருநாளில் வாடிவிடும் மலர்களோடு .
வாழ் நாள் … வருடக்கணக்கில் இருந்தாலும்
வருத்தம் ,வஞ்சம் ,வெறி ,ஆற்றாமை
இவைகளின் குவியல்களோடு வாழும் மனிதா …
எண்ணத்தில் வண்ணத்துப் பூச்சியை
நிறுத்தி வாழ்ந்து பார் .
வாழ்க்கை இனிக்கும் ….
வாழ்க்கை வாழ்வதற்கே …
வாழ்ந்துதான் பாரேன் !
அன்புடன் .செழியன்
* மகிழ்ச்சியாய் இரு ! மற்றவர்களை மகிழ்ச்சியாக்கி !!*