கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
பாபா வழிசென்று, பாமா உதவியில்
தீபா வளிகாண் தினம்”….கிரேசி மோகன்….!
மோதக மூக்கனவர், சாதக வாக்கனவர்
தீதற போக்கிடும் தேஹனவர்-மாதவர்,
பாபா வழிசெல்வாய், பாமா உதவியில்
தீபா வளிகாண் தினம்”….!
விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிந்து
பாபா வழிசெல்வாய், பாமா உதவியில்
தீபா வளிகாண் தினம்”….!