-கவிஞர் இடக்கரத்தான்

வானுக்குக் துணைசெய்யும் நிலவின் தோற்றம்
   வயலுக்குத் துணைதானே வரப்பின் ஏற்றம்
ஆணுக்குத் துணைசெய்வாள் அழகுப் பாவை
   அரசுக்குத் துணைஆற்றும் நல்லோர் சேவை
மானுக்குத் துணைசெய்யும் குட்டைக் கால்கள்
   மாந்தர்தம் துணையன்றோ நீதி நூல்கள்
தேனுக்காய் அலையும்சிறு வண்டி னுக்கோ
   தேன்சிந்தும் மலர்க்கூட்டம் துணையே ஆகும்!

ஊருக்குத் துணைசெய்யும் நதியின் ஓட்டம்
   உயர்வுக்குத் துணைசெய்வார் நல்லோர் கூட்டம்
நாருக்குத் துணைசெய்யும் மலரின் வாசம்
   நன்மைக்குத் துணையாற்றும் நல்லோர் நேசம்
வேருக்கு வலுசேர்க்கும் மண்ணின் ஈரம்
   வெற்றிக்குத் துணையாற்றும் நெஞ்சின் வீரம்
யாருக்கும் பயனில்லா உயிரும் ஓர்நாள்
   யமனுலகு போகையிலும் துணைதான் யாரோ?

10.12.2018

1 thought on “துணைதான் யாரோ?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க