பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்(பாகம்-7)
தொகுப்பு: புவனா கோவிந்த்
கிட்னியைக் கவனியுங்கள்
கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி, இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள். எச்சரிக்கையாக இருக்கவும்!
நிறையத் தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னிக் கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகைக் கீரைகள், காய்கள், மற்றும் வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது.
அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்கு வாட்டில் கீறல்களைப் போட்டு விட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்தி வர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்.
உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி எனச் சாப்பாட்டின் அளவை திடீரெனக் குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
காய்கறிகளை நிறையச் சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
Hope this compilation will be of use to someone.. .thanks Vallamai for publishing it in readable grouped format