குடிமகன்
மதியழகன்
துழாவிக் கொண்டே
இருந்தன..
தவறவிட்ட சாவியை,
மறதியாய் எங்கோ வைத்த
கண் கண்ணாடியை,
ஒளிந்து கொண்டு
சிணுங்கிக் கொண்டிருக்கும்
கைபேசியை.
எதற்காகவோ தேடப் போய்
ஏதோ அகப்படுவது உண்டு..
மாயமான கோப்புகளை
கணினியில் தேடி எடுப்பது
போலல்ல இது.
பேருந்தில் டிக்கெட் எடுக்க
சில்லறையைத் துழாவும் போது
வேறு என்னென்னவோ அகப்படும்
வங்கிக் கணக்கில்
பணமிருந்தாலும்
தூக்கம் வருவதற்கு
தூக்க மாத்திரையை தேடி
ஓடத்தான் வேண்டியிருக்கிறது
கவலையை மறக்க
மதுவை அருந்தி விட்டு
அவன் வீதியில் கிடக்க
மது அவனுக்கு
போதையை அளிக்கிறது
ஆனால் ஆயுளைக்
குறைக்கிறது.
மதுவின் கொடுமையை கவிதை நன்கு படம்
பிடித்துக் காட்டுகிறது. குடிமகன்கள் புரிந்து
கொண்டால் சரி. வள்ளுவர் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கள்ளின் கொடுமையை
விளக்கியுள்ளார். தன்னை மறக்கும் நிலைக்கு
தன்னை ஆட்படுத்த தன் கைப்பொருளையே
செலவு செய்வது எவ்வளவு அறியாமை என்கிறார்.
“கையறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல்”- திருக்குறள் – 925
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.