செண்பக ஜெகதீசன்
குடிக்கத் தண்ணீர் வைத்தால்
கிடக்குது ஆகாசம்
குடத்துக்குள்ளே,
கூடக் கிடக்கும்
குட்டிக் குட்டியாய் நட்சத்திரங்கள்..
கொட்டிப் பார்த்தது குழந்தை-
குடித்தது பூமி..
குழந்தைக்கு வந்தது
குதூகலமா..
ஏமாற்றமா?
பெரும்பாலும் நம்மில்
பலரும் பிள்ளைகளாய்…!
படத்திற்கு நன்றி
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
.கவிதைக்கு புதிய கோணமும், பூமிக்கு நீரும், மனதுக்கு சந்தோஷமும் தந்த கவிஞருக்கு நன்றி.
An encouraging comment by Baagampiriyal…!
Nantriyudan,
-SJ…