மயக்கம் எனது தாயகம்!

Head Gears Face Movement Clock Time Of Time Work
பாஸ்கர் சேஷாத்ரி
பழங்கதை எல்லாம் பேசியாச்சு
ஆரவார நாட்களை அசை போட்டாச்சு
செய்த தியாகங்களை எல்லாம் பட்டியல் செய்தாயிற்று
வஞ்சம் பேசி வீழ்த்தியவர்கள் கணக்கில் அடங்கா
பெருமை என நினைத்ததெல்லாம் மண்ணோடு போயிற்று
சுயமே தான் வாழ்க்கையெனச் சுழன்று வந்து சுட்டாலும்.
உதறத்தான் முடியவில்லை – உயிர் தான் பாரமிங்கே
தத்துவங்கள் தவறில்லை – தாத்பர்யம் தவறில்லை
கற்றவன் தான் மூடனிங்கே, காலத்தை தொலைத்த பின்னே!
Photo courtesy: https://www.maxpixels.net