2026இல் இந்திய மக்கள் தொகை, 140 கோடி!

இந்திய மக்கள் தொகை 2026ஆம் ஆண்டில் 140 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்-பெண் சராசரி ஆயுள் காலமும் அதிகரிக்கும் என்று தெரிய வருகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 102.86 கோடியாகும். இதில் ஆண்கள் 53.22 கோடி, பெண்கள் 49.86 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரியாக 1.6 கோடி அதிகமாகிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பரப்பு 2.4 சதவீதம். ஆனால், மக்கள் தொகையை பொறுத்தவரை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர். இதனால், ஒவ்வோர் ஆண்டும் உணவு, உறைவிடம், உடை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளைக் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கணக்கிட்டால் 2011ஆம் இந்திய மக்கள் தொகை 119.3 கோடி, 2016இல் 126.9 கோடி, 2021இல் 134 கோடி என உயர்ந்து 2026இல் 140 கோடியை எட்டும். மொத்த மக்கள் தொகையில் 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை 2001இல் 35.4 சதவீதம். இது படிப்படியாகக் குறைந்து 2026இல் 23.4 சதவீதமாகக் குறையும். அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை போகப் போக அதிகரிக்கும். 15 – 59 வயதினர் எண்ணிக்கை 57.7 சதவீதத்தில் இருந்து 64.3 சதவீதமாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 6.9 சதவீதத்தில் இருந்து 12.4 சதவீதமாகவும் அதிகரிக்கும்.

குழந்தைகள் இறப்பு 2001இல் 61.3 சதவீதம். 2021-25இல் இது 40.2 சதவீதமாகக் குறையும்.

ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 2001-05இல் 63.8 வயது. பெண்களின் வயது 66.1. 2021-25இம் ஆண்டில் சராசரி வயது ஆண்களுக்கு 67.8 ஆகவும், பெண்களுக்கு 72.3 ஆகவும் இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *