அழைப்பு
தி.சுபாஷிணி
அவ்வெண் பகலில்,
பல்கலைக்கழக வளாகத்தில்
பரந்த தருநீழலில்,
முத்தான எழுத்துக்களில் உன்
காதலை வரைந்தளித்தாய்..
அதன் அழகை ரசித்தேன்!
அறிவால் அணுகிய உன்
அணுகலை வியந்தேன்,
உணர்வை உணர மறந்தேன்.
வறுமை என்னை
வறட்சியாக்கியது,
காலம் காட்சியை
மாற்றியது,
அன்று நீ..
இன்று நான்.
ஆனால்,
என்னை உணர்கிறாய்
அறிகிறாய்,
அழைக்கிறாய்
விட்ட வாழ்வைத் தொடருவோமென்று
அறிந்தும்,
நிற்கின்றேன்
நின்ற இடத்திலேயே..
அன்றும்
இன்றும்
இயலாமைதான்.
இலகுவான, உணர்வுபூர்வமான கவிதை. வாழ்த்துக்கள்.