சமயம்

அன்னை தெரேசாவின் அருள்வாக்கு -1

சி. ஜெயபாரதன், கனடா

இறைவழிபாடு

பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
படைப்பு உறுதியில் கிறித்துவப் பணிமாது.

             –     அன்னை தெரேசா [1910-1997]

இறைவா, நீ  அமைதி நிலவும் ஒரு கருவியாக என்னை
ஆக்குவிப்பாய்;
எங்கே மானிட வெறுப்புள்ளதோ அங்கே நான் அன்பை விதைக்க விடு.
எங்கே காயங்கள் உண்டாக்கப் பட்டுள்ளதோ, அங்கே மன்னிப்பு அளி.
எங்கே ஐயம் உள்ளதோ, அங்கு உறுதி நிலைநாட்டு.
எங்கே மனமுறிவு உள்ளதோ அங்கு நம்பிக்கை கொடு.
எங்கே இருள் சூழ்ந்துள்ளதோ, அங்கு விளக்கொளி காட்டு.
எங்கே சோகம் குடிகொண்டுள்ளதோ, அங்கு மன மகிழ்வு உண்டாக்கு.

இறைவா, எனக்கு ஆறுதல் பெற வேண்டேன்,   பிறர்க்கு ஆறுதல் தருவதைத் தவிர.
என்னைப் புரிந்து கொள்ள வேண்டேன், பிறரைப் புரிந்து கொள்வதைத் தவிர.
என்னை நேசிக்க வேண்டேன், பிறரை நான் நேசிப்பதைத்  தவிர.
ஏனெனில் கொடுப்பதில்தான் நாம் பெறுகிறோம்.
மன்னிப்பதில்தான் நாம் மன்னிக்கப் படுகிறோம்.

இறைவழிபாடு ஒரு வேண்டுதல் இல்லை.  நம்மைப் பணிபுரிய இறைவன் கைகளில் அர்ப்பணம் செய்வதும், நம் ஆழ்மனதில் அவன் குரலைக் கேட்பதும் தான் நமது இறைவழிபாடு.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க