படக்கவிதைப் போட்டி – 258

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
தலைப்பு : இந்திய விவசாயின் நிலைமை
இறைவனுக்கு அடுத்து விவசாயியே என
முறைபடுத்தினான் அறத்தை வள்ளுவன்
வள்ளுவன் போற்றிய உழவுத் தொழிலுக்கு
மூடுவிழா நட்த்தி விட்டு விட்டு
அடிமைத் தொழிலுக்கு பெருநகரம் வந்த
குடிசை வாழ் என் எஜமானரைத் தேடுகிறேன்
விவசாயி விலாசத்தை தொலைக்க வைக்க
வகை செய்த பெரியோரே கண்டீர்களா
அவரும் நானும் வானும் நிலவும் போல
நானில்லாது இருளாகிப் போனார்
மண்ணில் ஏர் நின்றால்
என் துணைக் கைக்கொண்டால்
மண்வளம் செழிக்கும்
மக்கள் நலம் ஜொலிக்கும்
என்று எங்களைத் துறந்து விளைநிலத்தில்
இயந்திரத்தை இயக்கிய நாள் …அன்றே
இந்திய விவசாயம் கீழ் இறங்கிய நாள்
விவசாயியை நீங்கள் மறந்த நாள்
பசுமையோ மண்ணை துறந்த நாள்
விவசாயியின் உயர்வை கறந்த நாள்
மானிடா கேள்
நான் சாணி போட்டால் உரமாகி
விவசாயத்திற்க்கோ அச் சாணி அச்சாணி
என் சாணி மறந்த்தால் அச்சாணி முறிந்தது
எண் சாண் உடம்புக்குள் விதவிதமாய் நோயினில்
என் சாணியாய் காய்கிறாயே……பயிர்கள்
காய்க்க வேண்டிய விளைநிலமோ மருத்துவமனைகளாய்
மும்மலத்தின் ஏகபோக பிரதிநிதியே
நிம் மலமோ துர்நாற்றம்
எம் மலமோ மலர்சூடும்….நீ என்னை
பிள்ளையார் பிடிக்கும்போது
சிந்திக்க மறந்தாயே என்ன பிள்ளையப்பா நீ
ஆமாம்
யாரப்பா சொன்னா உனக்கு
ஓர ரறிவு அதிகமாமே என்னை விட
அதுவும் பகுத்தறிவாமே…
வெளியில் சொல்லாதே
ஓர ரறிவும் எள்ளி நகையாடும்….
சீ.காந்திமதிநாதன்
கோவில்பட்டி
Postal Address
S,Kanthimathinathan M.COM MBA
59B Upstairs
M.R.S.Compound
Vakkil Street
Kovilpatti 628 501
Tutiocorin District
Mob 94435 54012
பசுவின் கேள்வி ?
பிறந்து வளர் சிறு மழலைகள் – அறிவு
சிறந்து ஒளிர் பெரியீர் இப்பாரில் பலரும்
ருசித்துப் பருகிடப் பால் சுரக்கும் எமக்கு
புசிக்க நற்பசும்புற்கள் அருகி நிலமெங்கும்
நெகிழி சூழ் உலகாக்கி முப்பொழுதும்
மகிழ்ந்தே மிகு கேளிக்கையால் குலவி
மனம் போன போக்கதனில் நிதம் உழலும்
மானிடப் பதர்களே இன்றியமையாதது
நீரும் உழவுமென நெஞ்சில் நிலைநிறுத்தி
நீவிர் மனம் மாறுவது எப்போது ?
ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்
கோவை
விடியுமா…
கெட்டும்
பட்டணம் சேர் என்றார்கள்..
இவர்கள்
கெடாமலே கெடுவதற்காகப்
பட்டணம் வந்தவர்கள்,
பசுமாடும் கூடப்
பயணம் வந்தது..
பட்டண வாழ்க்கை
வழக்கம்போல் ஓடியது
வேகமாய்,
வந்தது கொரோனா
வாழ்வுமுறை மாறியது,
வீட்டுக்குள் மனிதர்கள்
வெறிச்சோடியது வீதி..
விதியை எண்ணி
வீதியில் பசுமாடு,
காட்டில் மேய்ந்த
கடந்த காலத்தை அசைபோட்டு..
விடியுமா
இவர்கள் வாழ்க்கை…!
செண்பக ஜெகதீசன்…
தலைப்பு : நீதிக்கு வீதி
என் தொழுவத்தில் பிறந்தவர்
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தை காட்டு என்றார்
அதை ஏன் மறந்தீர் என்றேன்
குழல் ஊதிய வண்ணமே கறுநீறக்
குழலாள் ராதைக் கண்ணன் பாரதக்
குலம் பாரினுக்குத் பரிசளித்த கீதை
வலம் வராதது ஏன் என்றேன்
மன்னனின் மகனால் தேர்க்காலில்
என் இனச் செல்வம் மாண்டதை
மன்னராட்சியிலே நீதி கேட்டதை
மன்னவனே மணி ஓசை கேட்டு
மணி கட்டி வைத்து நீதியை
மக்களுக்கும் மாக்களுக்கும்
சமம் என்ற திருநாட்டில்
நீதி கேட்டால் தெரு வீதியில்
மன்னராட்சி மணி நீதிக்கு
மக்களாட்சி MONEY அநீதிக்கோ??????
சீ.காந்திமதிநாதன்
கோவில்பட்டி
அடிமாடு
மேய்ச்சல் நிலம் காய்ந்ததென்று
விளைநிலம் சீர்கெட்டுப் போனதென்று
வயக்காடு வீட்டுமனையானதென்று
ஊரைவிட்டு புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்…
வந்தயிடம் தந்தமிச்சம் உண்டு வாழ்ந்தோம்
சொந்தமென்று ஏதுமின்றி சுற்றி வந்தோம்
பந்துபோல அடிபட்டு ஓடிநின்றோம்
சொந்தமண்ணே சொர்கமென்று திரும்புகின்றோம்….
உழைப்பதனை உறிஞ்ச விட்டு
உயிர் மட்டும் மிச்சம் கொண்டு
வீடு நோக்கி செல்கின்றோம் – இங்கு
அடிமாடாய் வாழுகின்றோம்…
படக்கவிதைப் போட்டி எண் 258
கன்றினை தேடும் உன் பார்வை
கனிவு மட்டுமே அதன் போர்வை
உனையேத் தான் தேடிவரும் உன் கன்று
சாலையில் நீ நிற்பது நல்லதன்று
கொடிய நோய் உனையும் கொன்றிடாது
தொழுவத்தில் தனித்திருந்து காத்துக் கொள்
சாலைகளில் திரிந்தலைந்து நிற்பதனால்
நீ சாதிக்கப் போவது என்னஎன்ன?
பதறிப் போய் உன் எஜமானர் தேடுகின்றார்
பதுவிசாய் அவருடனே சென்று விடு
கால்கடுக்க சாலைதனில் நின்றிடாதே
பசுவதையை தடுத்திடவே விதி செய்தோம்
பாரெங்கும் மேனிதனில் உனைக் காப்போம்
கோமாதா எங்கள் குலமாதா
என்றுமே நீ ஜகன்மாதா
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
பாசுரங்கள் உனை பாடித் துதிட்டிடவே
காமதேனு வடிவினிலே எமைக் காப்பாய்
உலகில் பால் வளமும் ஆறாகப் பெருகச் செய்வாய்
சுதா மாதவன்