காணொலி

திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

திருப்பாவை 11 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | ஸ்வேதா குரலில் ஆளன் – ஆட்டி என அழைப்பது தமிழ் மரபு. ஆளன் என்பவன் ஆளுகின்றவன். ஆட்டி என்பவள் ...

Read More »

திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

திருவெம்பாவை – 10 மாணிக்கவாசகர் பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். இறைவனுக்கு உருவம் கொடுத்தாலும் அது ஓர் அடையாளமே. அதுவே முழுமையான உருவம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் அவனை எப்படி ஓர் எல்லைக்குள் சுருக்க முடியும்? ...

Read More »

திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

திருப்பாவை – 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய். திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | சேகர் முத்துராமன் குரலில் பாடியவர்: சேகர் முத்துராமன் விளக்கம்: பிரபா ஸ்ரீதர் மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் ...

Read More »

திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

திருவெம்பாவை – 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். மரபில் வேர்விட்டு, நவீனத்தில் கிளைவிரித்தலை இன்று பல துறைகளில் பேசுகிறோம். ஆனால், இதை முதலில் காட்சிப்படுத்தியவர், மாணிக்கவாசகர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் ...

Read More »

திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

திருப்பாவை – 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | ஸ்வேதா குரலில் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், ஆண்டாள். தூய மணிமாடத்தில் சுற்றும் விளக்கு எரிகிறது. ...

Read More »

திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

திருவெம்பாவை – 8 கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். தமிழர்களிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. ஒருவரைச் சற்றே குறைசொல்லும் முன், முதலில் அவரை வாழ்த்திவிட்டு, பிறகே அதைச் சொல்வார்கள். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், இதை நயமாகச் சொல்கிறார். கேழில் பரஞ்சோதி ...

Read More »

திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

திருப்பாவை – 8 கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில் எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ...

Read More »

அண்ணாகண்ணன் காணொலிகள் 10

அண்ணாகண்ணன் இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள். சண்டைச் சேவலின் கூவலும் எதிர்க்கூவலும் செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்திற்கு நேற்று சென்றேன். அழகிய காட்சிகள் பலவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்தச் சண்டைச் சேவல் கூவ, பதிலுக்கு எங்கிருந்தோ வேறொரு சேவல் கூவியது. வழக்கமாக, நாய் ஒன்று குரைக்க, பல இடங்களில் உள்ள நாய்கள் குரைக்கும். இங்கே சேவல்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகின்றன. தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன் திருப்பாவையின் 7ஆவது பாடலில் ஆனைச்சாத்தன் இடம்பெற்று, உலகமெங்கும் இந்தப் பாடல் ...

Read More »

கணித மேதை ராமானுஜன் 133ஆவது பிறந்த நாள்

இன்று கணித மேதை ராமானுஜனின் 133ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.  படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா By India Post, Government of India – ...

Read More »

கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை நான் பல முறைகள் பதிவு செய்துள்ளேன். ஆனைச்சாத்தனின் குரலை இங்கே கேளுங்கள். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தனின் கீசுகீசு எனும் குரல் இங்கே ஆண்டாள் ரசித்த ஆனைச்சாத்தன் பறவைக்காகவே தனி இழை தொடங்கியுள்ளேன். இதில் 18 பதிவுகள் உள்ளன. பார்த்து மகிழுங்கள். படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா ...

Read More »

திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில் அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் ...

Read More »

2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன்

2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இடர்கள் தீருமா? மகிழ்ச்சி கிட்டுமா? நினைத்தது நடக்குமா? 2021ஆம் வருடத்துக்கான ஆண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்கள், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஒஹாயோ பறவைகள்

அமெரிக்காவின் பல பகுதிகளில் இப்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. ஒஹாயோ மாகாணத்தின் பனி படர்ந்த ஏரிக்கரையில், பறவைக் கூட்டம் ஒரே தாளகதியில் கீழிறங்குவதும் சிறகடித்து மேலேறிப் பறப்பதும் மிக ரம்மியமாக இருக்கிறது. இந்த வசீகரக் காட்சியை ஒஹாயோவிலிருந்து படமெடுத்து அனுப்பியிருக்கும் திலகா சுந்தருக்கு நம் நன்றிகள்.  

Read More »

திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

திருப்பாவை வெளியிட்ட போது, திருவெம்பாவை எங்கே என்று அன்பர்கள் கேட்டார்கள். இதோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரிலிருந்து நமக்காகப் பாடுகிறார், திருமதி ஸ்ருதி நடராஜன். இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமதி சுதா மாதவன் அவர்களுக்கு நன்றி. திருவெம்பாவை பாடல் 6 இயற்றியவர்: மாணிக்கவாசகர் பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ், அமெரிக்கா ராகம்: கமாஸ் மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ...

Read More »

திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண்

திருப்பாவை 6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பினகாண் | ஸ்வேதா குரலில் மார்கழியின் குளிரை நாம் அறிவோம். திருப்பாவையில் ஆண்டாள், இரண்டு இடங்களில் குளிர் பற்றிப் பேசுகிறார். 6ஆவது பாடலில் அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் ...

Read More »