காணொலி

நவி மும்பை நகர்வலம்

எப்போதும் பரபரப்பாக இயங்கும் நவி மும்பை, ஊரடங்கின்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இதை நமக்காகப் படமெடுத்து அனுப்பிய சாந்தி மாரியப்பனுக்கு நன்றி. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

குயிலின் அமுத கானம் – 8

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குயிலின் அமுத கானத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. நம் ஜன்னலோரத்து வேப்ப மரத்தில் அமர்ந்த குயில், குரலெடுத்துப் பாடுவதையும் வேப்பங்கொட்டையைத் துப்புவதையும் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஆலயம் அருளாலயம் – தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

சித்திரா பவுர்ணமியில் குருவை வணங்குவது மரபு. அந்த வகையில், தபோவனம் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, ஜி.எஸ்.மணி இயற்றிய ‘ஆலயம் அருளாலயம்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள். ராகம் – திலங் தாளம் – ஆதி (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

சந்திப்பு: அண்ணாகண்ணன் திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

எதில் முதலீடு செய்யலாம்? – ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 1

சந்திப்பு: அண்ணாகண்ணன் பரவலாக வட்டி விகிதங்கள் குறைந்துவிட்ட நிலையில், இனி வட்டி வருவாயை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வட்டி வருவாயை மட்டுமே நம்பி இருந்த ஏழை, நடுத்தர மக்கள், சிறு முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது நிற்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இப்போது நாம் என்ன செய்வது? நமக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்னென்ன? அமெரிக்கவாழ் நண்பரும் இந்திய நிதிச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து எழுதி வருபவருமான ஸ்ரீராம் நாராயணன், நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் ...

Read More »

பிரமிடு விளையாட்டு

அடுக்குகளை வைத்து எப்படி விதவிதமாகப் பிரமிடு கட்டுவது என்று ஒரு விளையாட்டு. இங்கே நமக்காகப் பிரமிடுகளை உருவாக்கிக் காட்டுகிறார், சகஸ்ரா அஜய். இதைப் பார்த்த பிறகு ஒரு யோசனை. இப்படியான அடுக்குகளை வைத்து எப்படிக் கோவில் கட்டுவது என்பதை ஒரு விளையாட்டாகச் சொல்லித் தரலாமே. நம் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலை, திருவரங்கம் கோவிலை, திருவில்லிபுத்தூர்க் கோவிலைச் சீனாவிலும் ஜப்பானிலும் கொரியாவிலும் கட்டி எழுப்பிக் குழந்தைகள் விளையாடினால் எப்படி இருக்கும்? (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஜெயகாந்தனின் 87ஆவது பிறந்த நாள்

தன் எழுத்துகளால் சமூகத்தில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியர், ஞானபீட விருது பெற்றவர், கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர், எந்தக் கருத்தையும் துணிவுடன் உரைக்கும் ஆளுமை படைத்தவர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஜெயகாந்தன். அவருடைய 87ஆவது பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்

பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்குள் ஒரு சிறு உலா. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ராம நாமமே துதி மனமே!

தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய ராம நாமமே துதி மனமே என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். ராம நாமத்தை ஜபியுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

சந்திப்பு: அண்ணாகண்ணன் இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர் தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் ...

Read More »

வால்மீகியின் இராம காதை – எளிய பாடலாக

மூல வடிவமான வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழ்ப் பாடலாக நமக்கு வழங்குகிறார், கான பிரம்மம் கிருஷ்ணகுமார். கேட்டு மகிழுங்கள். இந்த இராம நவமியில் அண்ணல் இராமபிரான் அருள் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாணம்

இந்த ஸ்ரீ ராம நவமியில், சீர்காழிச் சீராம விண்ணகரம் – ஸ்ரீ கோதண்டராமர் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு களியுங்கள். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால் எனக் கம்பநாடன் கூற்றுக்கு அமைய, உங்களுக்கு எல்லா நலன்களும் பெருகட்டும். உங்கள் இல்லத்தில் மங்கலமும் மகிழ்ச்சியும் திகழட்டும். அர்ச்சகர் – சாரங்கன் பட்டாச்சாரியார் ஒருங்கிணைப்பு – ராம்குமார் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சீதம்மா மாயம்மா | தியாகராஜர் கிருதி | கிருஷ்ணகுமார் குரலில்

இராம நவமியை முன்னிட்டு, தியாகராஜர் கிருதியான ‘சீதம்மா மாயம்மா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இராமபிரான் அருள் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சிங்கப்பூர் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும்

சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடுத்த கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இவை திகழ்கின்றன. இந்தக் கிருஷ்ணன் கோவில், 1870இல் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மிகப் பழைமையான கோவில்களுள் ஒன்றான இது, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. இராம நவமியை முன்னிட்டு, இந்தக் கோவில்களைக் கண்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

ஞானானந்தகிரி சுவாமிகள், ஓர் அத்வைத வேதாந்தி. ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்றான ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாக விளங்கியவர். இமயமலையில் தவமியற்றி, கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடு, திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்று வந்தார். திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு வழிகாட்டினார். நாம சங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் இவர்தம் சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவரைப் பற்றிய ‘அன்பே ஆரமுதே அருட்கடலே’ என்ற பாடலை, ...

Read More »