கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(324)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(324) ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு. – திருக்குறள் – 190 (புறங்கூறாமை) புதுக் கவிதையில்... புறங்கூறல் பொருட்டு பிறரிடமுள்ள குற்றங்களை அறிந்து ஆராய்தல் போலத் தம்மிடமுள்ள குற்றங்களையும் கண்டு தெளிந்தால் நிலை நின்று வாழும் உயிர் வாழ்க்கைக்குத் தீது ஏதுமில்லை…! குறும்பாவில்... புறங்கூறிட பிறர் குற்றங்களைக் கண்டறிதல்போல் தம்குற்றங்களைக் கண்டுதெளிந்தால், நிலைபெறும் வாழ்வில் தீதிலையே…! மரபுக் கவிதையில்... அறமிலாச் செய்கையாம் புறங்கூறிட அடுத்தவர் குற்றம் அறிந்திடல்போல் கறையாம் தமது குற்றங்களைக் கண்டே தெளிந்து விட்டதனால் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(323)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(323) பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேதம் பலவுந் தரும். – திருக்குறள் – 275 (கூடாவொழுக்கம்) புதுக் கவிதையில்... பிறர் தம்மைப் பெரிதும் மதித்திடவேண்டி பற்றை விட்டுவிட்டோம் எனப் பொய் சொல்வோரது மறைந்த ஒழுக்கம், இனிது போலத் தோன்றினும் அப்போது, என்செய்தோம் என்பதறியாதவர்கள் பின்னர் வருந்தும் வகையில் பலதுன்பம் வந்திடுமே…! குறும்பாவில்... தற்காலிகமாய் இன்பம்பெற பெருமைக்காய்ப் பற்றறுத்தோமெனப் பேசும் பொய்யொழுக்கம் கொண்டோர்க்குப் பின்னர் வந்திடும் வருந்தும்நிலையே…! மரபுக் கவிதையில்... தம்மைப் பிறரெலாம் மதித்திடவே தாமே பற்றெலாம் விட்டதாக இம்மியும் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(322)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(322) இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. – திருக்குறள் – 310 (வெகுளாமை) புதுக் கவிதையில்... அளவோடு சினமிருந்தால் ஆபத்தில்லை, அளவைக் கடந்தவன் அழிந்து இறந்தவனுக்கு ஒப்பாவான்.. சினத்தைத் துறந்தவன் சிறந்த ஞானமுடைய துறவி போன்ற பெருமை பெறுகிறான்…! குறும்பாவில்... அளவுகடந்த கோபமுடையவன் இருந்தும் இறந்தவன் போலாகிறான், சினமடக்கி வாழ்பவன் சிறப்பு பெறுகிறான் துறவியாக…! மரபுக் கவிதையில்... இருக்கும் சினம தளவுகடந்தால் இறந்தவன் போல்தான் மனிதனுமே, பெருகும் கோப மடக்காமல் பெயரில் வாழ்கிறான் பிணமாக, பெருமை ...

Read More »

குறளின் கதிர்களாய்…(321)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(321) யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. – திருக்குறள் – 397 (கல்வி) புதுக் கவிதையில்... கற்றவனுக்கு எந்த நாடும் எந்த ஊரும் சொந்த நாடாய் ஊராய் ஆகிவிடும்.. அவ்வாறிருக்க, அத்துணைச் சிறப்புமிக்கக் கல்வியை ஒருவன் இறக்கும் காலம் வரைக் கற்காமல் காலத்தை வீணே கழிப்பதும் ஏனோ…! குறும்பாவில்... கல்வியில் சிறந்தவனுக்கு எந்நாடும் எவ்வூரும் தனதாகிவிடுகிறது, அத்தகு கல்வியைச் சாகும்வரை யொருவன் கல்லாததேனோ…! மரபுக் கவிதையில்... கல்விச் செல்வம் கையிருந்தால் காணு முலகில் எந்நாடும் எல்லா ...

Read More »

மகராசர் காமராசர்

அண்ணாகண்ணன்   பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.   மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.       (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

முழுவாழ்வில் நானிருப்பேன்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண், ஆஸ்திரேலியா விழுந்தால் விதையாவேன் எழுந்தால் மரமாவேன் வளைந்தால் வில்லாவேன் நிமிர்ந்தால் கணையாவேன்  பிடித்தால் காலாவேன் எடுத்தால் கோலாவேன் வலித்தால் துடுப்பாவேன் மாக்கடலில் படகாவேன்  காவலில் கதவாவேன்  கடும்வெயில் நிழலாவேன் முதுமையில்  துணையாவேன்    முழுவாழ்வில் நானிருப்பேன் 

Read More »

குறளின் கதிர்களாய்…(320)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(320) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென். – திருக்குறள் – 420 (கேள்வி) புதுக் கவிதையில்... காதால் நுகரப்படும் கேள்விச் செல்வத்தை நுகராமல் விட்டுவிட்டு, வாயால் உண்ணும் உணவு வகைகளின் சுவை தேடி நுகரும் மாக்கள் மாண்டாலென்ன, உயிரோடிருந்தால் என்ன.. ஒன்றுதான் எல்லாம்…! குறும்பாவில்... செவியால் கேள்விச்செல்வம் நுகராமல் வாய்க்கு ருசியாய் உணவுநாடி நுகர்வோர், வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்றுதான்…! மரபுக் கவிதையில்... கற்றோ ருரைக்கும் செவிச்செல்வம் காதால் கேட்டே நுகராமல், பெற்றே யுணவு பலவகையாய் பேணிக் ...

Read More »

ஐயா, பாலு ஐயா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா      ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது    பாலுவே நீயும் பாட  வருவாயா?    தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு    நீயெழுந்து வாராயோ நெஞ்சமெலாம் அழுகிறதே!     மூச்சுவிடாது பாடியே சாதனையைக் காட்டினாய்   மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே   காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே   கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது?     சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று   இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்   ...

Read More »

வாழ்த்தும் மனமே வாழும்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா  இறைத்த கிணறு ஊறும் இறையாக் கிணறு  நாறும் நடக்கும் கால்கள் வலுக்கும் நடவாக் கால்கள் முடக்கும் படிக்கும் காலம் சிறக்கும் படியாக் காலம் இழக்கும்! உழைக்கும் கரங்கள் வலுக்கும் உழையாக் கரங்கள் படுக்கும் கொடுக்கும் குணமே சிறக்கும் கொடுக்கா குணமே குறுக்கும் தாழ்த்தும் தலையே நிமிரும் தாழாத் தலையே குனியும் வாழ்த்தும் மனமே வாழும் வாழா மனமே வீழும்!

Read More »

குறளின் கதிர்களாய்…(319)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(319) உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு. – திருக்குறள் – 425 (அறிவுடைமை) புதுக் கவிதையில்... உலக மாந்தரில் உயர்ந்தோரை நட்பாக்கிடல் ஒருவனுக்கு உயர்ந்த அறிவுடைமையாகும்.. இந் நட்பில் முதலில் முகம்மலர்தலும், பின்னர் வருந்தி வாடுதலுமிலாமல் ஒன்றாய் வைத்துக்கொள்வதுதான் சிறந்த அறிவுடைமை…! குறும்பாவில்... உயர்ந்தோரை நட்பாக்கிடல் அறிவுடைமை, நட்பதில் முகம்மலர்தல் வாடுதலொன்றாய் வைத்திருத்தல் மிகவும் சிறந்த அறிவாம்…! மரபுக் கவிதையில்... உலகி லுயர்ந்த குணத்தோரை உற்ற நட்பாய்க் கொள்ளுதலே பலமே மிக்க அறிவுடைமை, பார்க்கு மிந்த ...

Read More »

பக்குவம் வாழ்வே!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா  அணைத்தால் இன்பம்      அளித்தால் பேரின்பம்   பொறுத்தால் விடிவு      பொங்கினால் முடிவு   வெறுத்தால் காரிருள்       விரும்பினால் வெளிச்சம்   நிலைத்தால் நிம்மதி       குலைத்தால் பாதாளம்!   சுமந்தால் சுகம்      அமைந்தால் ஆனந்தம்   பிறந்தால் மகிழ்வு      பிரிந்தால் கலக்கம்   தேடினால் செல்வம்      வாடினால் முடக்கம்   ஓடினால் உவகை     ...

Read More »

குறளின் கதிர்களாய்…(318)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(318) ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். – திருக்குறள் -468 (தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்... நிறைவேறும் வழியை நன்றாய் அறிந்தபின் தகுந்த வழியில் முயற்சி செய்யாமல் கண்டபடி செய்யும் முயற்சி, உதவிக்குப் பலர் கூடி அழிவு வராமல் பாதுகாத்தாலும் நிறைவேறாமல் அது குறைபட்டு அழிந்திடும்…! குறும்பாவில்... தகுந்த வழியறிந்து அதன்படி முயலாத முயற்சி, பலர்நின்று பாதுகாத்தாலும் பலனின்றி நிறைவேறாது அழியும்…! மரபுக் கவிதையில்... செயலைச் செய்யு முன்னதாக செய்யும் வழிமுறை நன்கறிந்தே முயற்சி செய்வ ...

Read More »

பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண், ஆஸ்திரேலியா நாலும் தெரியாது இரண்டும் தெரியாது  காலம் பறிபோகும் கணக்கும் புரியாது  ஆழந் தெரியாது அகலம் விளங்காது காலை விடும்வேளை கணக்கு மழிந்துவிடும் உறவும் தெரியாது பகையும் தெரியாது வரவும் தெரியாது செலவும் புரியாது குறைவும் தெரியாது நிறைவும் தெரியாது முடிவு வரும்வேளை முழுதும் இருளாகும் பக்தி உணராது புத்தி தெளியாது சக்தி எதுவென்று சலனம் மிகுவாகும் சித்தம் நிலைகுலைந்து செய்கை சிதைந்தோட கத்தி முனையாகக் காலன் வருவானே பிறந்த பிறப்பை பேறாய் எண்ணு குறைந்த செயலைக் குழியிட்டு மூடு நிறைந்த மனத்தை ...

Read More »

குறளின் கதிர்களாய்…(317)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(317) ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை. -திருக்குறள் – 478 (வலியறிதல்) புதுக் கவிதையில்... செல்வம் செலவாகும் வழி பெரிதாகாமல் சிறிதாகவே வைத்திருந்தால், அரசர்க்கு அச்செல்வம் வரும்வழி சிறிதானாலும் அதனால் பெருந்தீமை ஏதும் வந்திடாதே…! குறும்பாவில்... பெரிதாகாமல் பார்த்துக்கொண்டால் பொருள் செலவாகும் வழி, தீதில்லை சேரும்வழி சின்னதானாலும் மன்னர்க்கு…! மரபுக் கவிதையில்... சேர்த்து வைக்கும் செல்வமதைச் செலவு செய்யும் வழியதனைப் பார்த்தால் பெரிதாய் ஆகாமல், பக்கம் நிலைக்கும் பொருளதுவே, மார்க்க மிதனைச் செயல்படுத்தும் மன்னர் தமக்குத் ...

Read More »

மயக்கம் எனது தாயகம்

பாஸ்கர் சேஷாத்ரி காலையில் எழுந்து அழகான பெண்கள் முகத்தைப் பார் தாயோ, மகளோ, மனைவியோ யாராக இருப்பினும் சரி ஒரு குழந்தையின் சிறு கைப்பிடியில் உன் ஆள்காட்டி விரலைச் செருகு அதன் கட்டில் சில விநாடிகள் இரு. சிரிப்பை ரசி விரலை எடுக்கமாட்டாய். ஓங்கி வளர்ந்த மரத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடு பூவைக் கிள்ளாமல் விரல் ஸ்பரிசத்தில் மேலும் மலரச்செய். பச்சைத் தண்ணீரில் தலை நனையக் குளி. வானம் பார்த்துக் கண்களை விரி. முடிந்தால் ஒரு பூனைக்குட்டியை மடியில் கிடத்தி அதன் ரோமம் தடவு. வசதியிருப்பின் திண்ணையில் அடங்கு. உன் கண்கள் தானாய் மூடிக்கொண்டால் ...

Read More »