கதவைத் தட்டி விட்டு உள்ளே வரவும்!
சில நேரங்களில், அலுத்து விட்டது என்பதற்காக,
என் முகமூடிகளை கழட்டி வைத்திருப்பேன்.
இல்லையெனில், அதீத மகிழ்ச்சியின் வெளிப்பாடாய்,
அதிக சாயத்தை என் முகமெங்கும் பூசியிருப்பேன்.
இவையெல்லாம் உங்களுக்கு முரண்பாடாய் தோன்றும்.
வேண்டாத நினைவுகள் மக்கிப்போவதற்கு ஏதுவாய்
அவற்றை கொடிகளில் காய வைத்திருப்பேன்.
வேண்டிய உறவுகள் சொல்லாமல் விலகியதால்,
வேதனையின் வெளிப்பாடாய் கண்ணீர் சிந்தியிருப்பேன்.
இவையெல்லாம் உங்களுக்கு வேண்டாத விஷயமாய் இருக்கும்.
ஆகவே கதவைத் தட்டி விட்டு உள்ளே வரவும்.
நான் சாவி துவாரத்தின் வழியே எட்டிப்பார்த்து விட்டு,
நீங்கள் விரும்பும் வண்ணம் வந்து நிற்பதற்கு!
படத்திற்கு நன்றி
http://vi.sualize.us/the_cool_hunter_welcome_pop_design_art_face_picture_tRA2.html