அனைத்துத் தமிழர் நலம் பேணும் ஆற்றலர் இவரே

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

தமிழ் தேசியத்தின் இலக்கைத் தெளிவாகத் தெரிந்தவர். அந்த இலக்கை அடையும் வழி முறைகளையும் நன்றாக அறிந்தவர். சாத்தியமான வழிமுறைகளை எடுத்துச்செல்லும் திறமையாளர். அனைத்து தரப்பினருடனும் நல்லுறவைப் பேணுபவர். அதற்காகத் தேசிய நிலைப்பாட்டிலிருந்து கிஞ்சித்தும் விலகாதவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்துக்குச் சொல்லவேண்டும். தமிழர் தரப்பு இணந்து இதைச் சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்தார். அனைத்து தரப்பினரையும் இணைத்தார்.

தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களையும் அழைத்தார். சிறந்த வரைவை உருவாக்கினார். ஒன்றிணைந்த தமிழர் கோரிக்கையை உருவாக்கினார்.

மன வேறுபாடுகள், மாச்சரியங்கள், விரிசல்கள் இவைக்கு அப்பால் ஈழத் தமிழர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை இதுவே என உலகநாடுகளுக்கு எடுத்துச் சொன்னவர்.

திருவள்ளுவர் காட்டிய ஒழுக்க நெறிகளை வாழ்வின் தலையாய நெறிகளாக கொண்ட பகுத்தறிவாளர்.

தமிழர் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்.

இன்றைய சூழ்நிலையில் அனைத்துத் தமிழ் அரசியல் அமைப்புகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் தலைமை தாங்கக் கூடிய தகுதி உடையவர் அவரே.

அவரே மன்னாரின் மணியான முத்தான மனிதர் சுப்பிரமணியம் சிவகரன். ஒருங்கிணைந்த அரசியல் அமைப்புக்குத் தலைவராகும் தகுதியர்.

அரசியல் களத்தில் அவர் நின்றாலும் மக்கள் நலம் அவர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழ் மக்கள் நலனை முன்னெடுப்பதில் ஆட்சித் திறமையை அவர் வளர்க்க வட மாகாண முதலமைச்சராகவும் அவரைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்புகளைக் கொடுத்தால் சிறப்பாகப் பணியாற்றக் கூடியவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்காக அவர் இந்த ஆண்டில் ஆற்றிய பணிகளை மனதில் கொண்டு நான் சொல்லவில்லை .

கடந்த பல ஆண்டுகளாகவே அவரை அறிவேன், அவரது தேசியம் சார் முன்னெடுப்புகளையும், மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளையும், அரசியல் முன்னெடுப்புகளையும், அறிவார்ந்த செய்தித் தொகுப்பு முன்னெடுகளையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

மன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.