சான் டியாகோ மாநகரக் கேளிக்கை நிகழ்ச்சிகள்

0

அண்ணாகண்ணன்

அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில், சீ வேர்ல்டு (SeaWorld) என்ற பெயரிலான பொழுதுபோக்கு வளாகம் அமைந்துள்ளது. விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரிகள் உள்ளிட்ட பலவும் இந்த வளாகத்தை அலங்கரிக்கின்றன. இந்த வளாகத்தில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை இங்கே நீங்கள் கண்டுகளிக்கலாம்.

படப்பிடிப்பு: ஹேமமாலினி லோகநாதன்

Dolphin Show at San Diego

என் மனைவி ஹேமமாலினி, 2004இல் அமெரிக்காவில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது அங்கே அவர் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் சிலவற்றைத் தனது கேம்கார்டரில் படம் பிடித்தார். அவரது படப்பிடிப்பில், சான்டியாகோ மாநகரில் நடந்த டால்பின் காட்சிகள் இரண்டை இங்கே நீங்கள் பார்க்கலாம். பல வகையான டால்பின்கள் துள்ளிக் குதிப்பதும் உயரம் தாண்டுவதும் தலைகீழாகப் படுப்பதும் பார்வையாளர்கள் மீது தண்ணீரை வாரி அடிப்பதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் பயிற்சியாளர்கள் அவற்றின் மீது படுத்தும் அமர்ந்தும் நின்றும் பயணிப்பதும் மிகச் சுவையான காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

Penguins | Sea Cows | White Whales at SeaWorld, San Diego

அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில், சீ வேர்ல்டு (Seaworld) பொழுதுபோக்கு வளாகத்தில் பென்குயின்கள், கடல் பசுக்கள், வெள்ளைத் திமிங்கலங்களைக் கண்டுகளியுங்கள்.

Pets Rule Show at SeaWorld, San Diego

சீ வேர்ல்டு வளாகத்தில் பெட்ஸ் ரூல் (Pets Rule) என்ற பெயரில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சி புகழ்பெற்றது. இதில் நாய்கள், பூனைகள், பன்றிகள், பறவைகள் உள்ளிட்ட பலவும் பல்வகை சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும். நாய்கள் இரு கால்களால் நடப்பதும் பறக்கும் தட்டுகளைத் தாவிச் சென்று பிடிப்பதும் உயரம் தாண்டுவதும் பார்க்க வியப்பளிப்பவை. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றை இங்கே பார்த்து மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *