கலியுக அசுரப்படைகள்

சி. ஜெயபாரதன், கனடா

இருப தாண்டுப் போர்
இருபது நாட்களில் முடிந்தது.
தோற்றவை சூப்பர்
வல்லரசுகள் !
ரஷ்யப் படையால்
வெல்ல முடிய வில்லை !
அணு ஆயுத
அமெரிக்கா, பிரிட்டன்
படை கொடுத்து, பணம் கொடுத்து,
ஆயுதம் ஈந்து
பயிற்சி அளித்துப்
பலனின்றிப், பல்லுயிர்
பலி கொடுத்து,
வலுவிழந்து,
ஓய்ந்து போய்ப்
பின்வாங்கின
வென்றவர்
துப்பாக்கி மூர்க்கர்,
கொள்ளை அடிப்போர்,
கொலைகாரர்,
பள்ளிக்குப் போகும்
பாவையர் முகத்தில்,
ஆசிடை வீசும்
அசுரர் கூட்டம் !
பெண்டிரை
அடிமை ஆக்கும்,
ஆப்கானிஸ் தானின்
அரக்கர் கூட்டம் !

COVER IMAGE: WAR PAINTINGS BY PABLO PICASSO 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க