கொண்டு செலுத்திடுவேன் – 2

அண்ணாகண்ணன் இயற்றி இசையமைத்த ‘கொண்டு செலுத்திடுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

இந்தப் பாடல், அண்ணாகண்ணன் குரலில்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

One response to “கொண்டு செலுத்திடுவேன் – 2”

  1. S.SUBRAMANIAN

    வணக்கம்!

    ‘கொண்டு செலுததிடுவேன்’ எனத் தொடங்கிய சிந்தில் மயங்கியது என் சிந்தை. தம்பி கிருஷ்ணகுமார் அவர்களும் தாங்களும் சுருதி தாளம் என்னும் வரம்புகளைப் புறந்தள்ளி இறையுணர்வோடு பாடியது கேட்டு நெகிழ்ந்து போனேன். கீர்த்தனைகள் இல்லாத வசை இதனால் நீங்கியதோ? இந்தச் சிந்தினை ரெட்டியார் 23 காவடிச் சிந்துகள் மெட்டில் ஏதேனும் ஒன்றிலோ ‘கண்ணன் வருகின்ற நேரம்’ என்னும் ஊத்துக்காடு வேங்கடசுப்ப ஐயர் பாட்டுப் போலவோ அமைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும் என்பது என் கருத்து.

    மேலும் பாடலைப் பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அளவில் அமைத்துக் கொண்டும் வினைச்சொற்களைப் பொருத்தமாக மாற்றியும் அமைத்திருக்க வேண்டும்.

    முழுமையான சொற்களைவிட சீர் பிரிப்பு (யாப்பில் இது வகையுளி எனப்படும்) இன்னும் சுவைதரும். சிந்துக்கு அதுதான் இனிமை. சென்னி குளநகர் வாசன் – தமிழ் தேரும் அண் ணாமலை தாசன்’ என்பது போல.

    மாலையில் மதியம் தான் இனிமை என்பார் அப்பர் தம்பி அன்னா கண்ணனின் இசையும் கீர்த்தனையும் கூட இனிமைதான்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்களுடன்

    ச.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *