சென்னையிலிருந்து கோவைக்கு விமானப் பயணம்

சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்து சேர்ந்தோம். ஹரி நாராயணனின் முதல் விமானப் பயணம் இது. எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.
இதில் தமிழகத்தை ஒரு பறவைப் பார்வையில் நீங்கள் காணலாம். கீழே காணும் அனைத்தும் தமிழ் மண், மேலே காணும் யாவும் தமிழ் வான். தமிழகத்தின் வளங்கள், வயல்கள், ஆறுகள், காடுகள், ஆலைகள், மனைகள், வீடுகள், மக்கள் அடர்த்தி… என அனைத்தையும் ஒரே வீச்சில் கண்டு மகிழுங்கள்.
Indigo image courtesy: Wikimedia.org
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
வணக்கம்!
எனக்கு அகவை 76. இன்றும் விமானங்கள் விண்ணேறுவதையும் தரையிறங்குவதையும வீடியோவில் ரசித்துப் பார்ப்பேன். நான் பல முறை விமானப் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அது சாளர இருக்கையாக இருப்பினும் இதுபோன்ற காட்சிகளை ரசிக்க முடிவதில்லை.
பலரும் விமானத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே பறக்கலாம் என்றே இன்றைக்கும் எண்ணுகிறார்கள். அவர்கள் ;விருப்பம் அது. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை என்பதை அவர்கள் 98 விழுக்காடு பயணமும் மேகங்களின் மேல்தான் என்பதைப் புரிந்து கொள்ளும் போது தெரிந்து கொள்கிறார்கள்.
குழந்தைகளுக்கு விமானம் ஏறுகிறபோதும் இறங்குகிறபோதும் சில நிமிடங்கள் தரைவழிக்காட்சிகள் தருகின்ற இன்பம் ஒருவகை அச்சத்தையும் ஆர்வத்தையும் வியப்பையும் தருகின்றனஇ அவை சொல்லில் வடிக்க முடியாத அனுபவம்!
நான் வெளிநாட்டுப் பயணங்களில் விமானத்தில் காட்டப்படும் சாட்டிலைட் வழியை நோக்கித் தரையில் பாகிஸ்தான் வருமா? ஈரான் வருமா? தாஜ்மகால் வருமா? என்றெல்லாம் ஆர்வத்தோடு கண்டு வெறும் மேகத்தைக் கண்டு பேதலித்த நேரமும் உண்டு.
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலனவற்றில் கடற்கரை ஓரமாகவே விமானங்களின் ஓடு பாதை அமைக்கப்பட்டிருப்பதால் விமானத்தின் இறக்கைகள் நிழல்கள் தண்ணீரில் விழுகிற காட்சி அற்புதம்! அருமை!
இண்டிகோ பயணம் இனிய பயணம்!
நானும் குழந்தைகளோடு குழநதையான தருணம்!
செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்!
ச.சுப்பிரமணியன்