திருப்பூவணப் புராணம் – பகுதி – (9)

கி.காளைராசன்

4.திருமுறைகளில் திருப்பூவணம்

 

 

 

கி.காளைராசன்


 

 

 

 

 

 

 

 

திருமுறைத் திரட்டுக்களான மூவர்-தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா போன்ற பக்தி இலக்கியங்களிலும்,  திருப்புகழிலும்  திருப்பூவணத்து இறைவன் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளார்.

 

தேவாரத்தில் திருப்பூவணம்

சைவத்தையும் தமிழையும் தழைக்கச் செய்தவர்கள் சமயகுரவர் நால்வராவர்.  இவர்கள் முறையே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனத் திருக்கோயில்களில் வரிசைப்  படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது சிறப்புக்களையும், இவர்கள் திருப்பூவணநாதரை வணங்கிய வரலாற்றையும், இவர்களது பாடல்களில் காணப்படும் திருப்பூவணத் திருத்தலத்தின் அழகையும், பூவணநாதரின் அருளையு[ம் தொகுத்து விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பெற்றுள்ளது.

இந் நால்வருள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் இறைவனை வணங்கிப் பாடிய பாடல்கள் தேவாரத் திரட்டாக உள்ளன.

தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான்கு ஆகும்.          தேவாரம் பாடிய சமயகுரவர்களும் வைகை ஆற்றின் வடகரையிலிருந்தே தென்கரையில் உள்ள திருப்பூவண நாதரை வணங்கி வழிபட்டுள்ளனர் என்று “புட்பவனநாதர் வண்ணம்” என்ற நூலில் கந்தசாமிப் புலவர் கூறுகிறார்.

“செப்பு மூவர்சொல் தமிழ்த்துதிக்க விருப்பமொடுவந்து வையை

மணற்சிவ லிங்கமென மனத்தோணி முன்பு வடகரைக்கவர்

நின்று தமிழ்பாடு பொழுதேயிடப மாமுதுகு சாயும்வகையே

செய்துமுன் மூவர் தரிசிக்க மகிழ்நேசணு்

-(புட்பவனநாதர் வண்ணம்)

 

திருஞானசம்பந்தர்

சமயகுரவர்களுள் முதல்வராகிய இவ்வருளாளர் சோழநாட்டில் சீர்காழியில்  சிவபாத இருதயருக்கு மகனாக அவதரித்தார்.  தமது மூன்றாவது வயதில்  “தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகம் பாடித் தமக்குப் பால் கொடுத்தருளிய அம்மையையும் அப்பனையும் சுட்டிக் காட்டினான்.   அதுமுதல் பல திருத்தலங்களுக்கும் சென்று பதிகம் பாடிப்பரவிப் பல அருட்செயல்கள் புரிந்து சைவத்தைத் தழைக்கச் செய்தார்.

திருஞானசம்பந்தர் திருப்புத்தூரில் ஈசனை வழிபட்டுத் திருப்பூவணத்து  வைகையாற்றின் வடகரையை வந்தடைந்தார்.  ஆற்றினைக் கடக்க எத்தனித்த போது ஆற்றின் மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன.

எனவே திருஞானசம்பந்தர் ஆற்றின் அக்கரையிலிருந்தே மறுகரையில் உள்ள திருப்பூவணநாதரைப் பதிகம் பாடிப் பணிந்து வணங்கினான்.  திருஞானசம்பந்தருக்குக் காட்சியளிக்க விரும்பிய ஈசன் நந்தியை மறைக்காமல்  இருக்கும்படிக் கட்டளையிட்டார்,   நந்தி வலதுபுறமாகச் சற்று சாய்ந்துகொள்ள ஞானசம்பந்தர் இறைவனைத் தரிசித்து வழிபட்டார்.  இதனால் திருப்பூவணம் கோயிலில் நந்தி மறைப்பதில்லை. வைகை ஆற்றின் தென்கரையில் இருந்து  திருஞானசம்பந்தர் வழிபட்ட இடத்தை ஆடித்தபசு மண்டபம் என்று அழைக்கின்றனர்.  இப்போதும் இம்மண்டபத்திலிருந்து திருப்பூவணநாதரை வழிபடலாம்.   நந்தி மறைக்காது.

 

 

ஈசனை மறைக்காமல் வலதுபுறம் சாய்ந்திருக்கும்  நந்திதேவர் 

 

 

திருஞானசம்பந்தர் திருப்பூவணம் மீது இருபத்திரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார்.  இவர் இயற்றிய  முதல் பதினொரு பாடல்களும் ஒன்றாம் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளன.  இப்பாடல்கள் “தென்றிருப்பூவணமே” என்று முடியுமாறு பாடப் பெற்றுள்ளன.  அடுத்த பதினொரு பாடல்களும் மூன்றாம் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளன.  இப்பதிகத்தில் உள்ள பாடல்களில் ஐந்து பாடல்கள் “அடிதொழ நன்மை யாகுமே” என்று முடியுமாறு பாடப் பெற்றுள்ளன.

ஒன்றாம் திருமுறையில் உள்ள முதல் பத்துப் பாடல்களில் “தென்திருப்பூவணமே” என்று முடியும்படிப் பாடப்பட்டுள்ளன.  எனவே, இப்பாடல்கள் ஆற்றின் மறுகரையில் இருந்து பாடப் பெற்றிருக்க வேண்டும்.   மேலும் மூன்றாம் திருமுறையில் உள்ள பாடல்களில் “அடிதொழ நன்மை யாகுமே” என்றும் “அடிதொழப் பீடை இல்லையே” என்றும் பூவண நாதரின் திருவடியைப் பாடியுள் ளதால்,  இப்பாடல்கள் அனைத்தும் திருப்பூவணம் திருக்கோயிலில் பாடப் பெற்றிருக்கவேண்டும்.

 

*****

 

கணபதி துணை

திருச்சிற்றம்பலம்

 

5. திருப்பூவணப் புராணம்

*****

 

காப்பு

1          திகழ்வரைமின்னனைவதனச் செங்கமலந்தளையவிழ்க்குந்திவாகரஞ்செய்

மகிழொருவெண்மதி மருப்பின் வயிரகிம்புரி வயங்குமத்தயானை

நிகழுமடியார்க்கன்புநீடுமறம்பொருளின்பம் வீடுநல்கும்

புகழ்தருநற்கற்பகத்தின் பொற்பதத்தையெஞ்ஞான்றும் போற்றல் செய்வாம்

 

நூற்பயன்

2          தந்திமுகன்றம்பியரு ணந்திதனக்குரைப்பநந்தி சநற்குமாரன்

வெந்துயரமறவெடுத்துவிரித்துரைப்பவவன் வேதவியாதற்கோதப்

புந்தியுணர்ந்தவன்சூதமுநிக்குரைத்த புட்பவனபுராணந்தன்னைச்

சிந்தைமகிழ்வுறப் படிப்போர் கேட்போர் நல்லிகபரங்கள் சேர்வரன்றே

 

கடவுள் வாழ்த்து

சபாபதி

வேறு

3          பூமேவுதிருமாலும் புண்டரிகத்தயனும்

புரந்தரனும் வானவரும் புங்கவரும் போற்றப்

பாமேவு பண்டருஞ் சொற்பரிவுமையாள் காணப்படர்

தரு செம்பவள நறுஞ் சடை தாழமிலைச்சுந்

தேமேவு செழுங்கொன்றை தேன்றுளிப்ப விருள்

கால்சீக்குமினன் மதிநிலவெண்டிசாமுகஞ் சென்​றெறிப்ப

மாமேவு மணிமன்றுணடம்புரியுமெங்கோன்

மன்னுபரிபுரமலர்த்தாள் சென்னிமிசைச் சேர்ப்பாம்

 

திருப்பூவணநாதர்

வேறு

 

4          பூமாது மகிழ்துளபப்புயல்வண்ண நெடுமாலும்புகழ்வெண்கஞ்ச

நாமாதுநடனமிடுநான்மறைதேர்நான்முகனுநயப்ப நன்னீர்த்

தேமாது செழும்பவளச் சடையிருப்பத்திங்களிருடுரப்பச்சைல

மாமாது வடிவிலங்கமன்னிய பூவணத்தரன்றாள் சென்னிசேர்ப்பாம்

 

5          ஒருபொருளாயுயிர்க்குயிரா யுருவநான்கருவநான்குபயமொன்றா

யருள்வடிவாயகண்டிதமாயசஞ்சலமாயாதிநடுவந்தமின்றாய்க்

கருதரிதாய்ச் செல்கதியாய்க் காண்பரிதாய்க்காரணகாரியங்கடந்த

பொருவில்பரிபூரணமாம் பூவணத்தெம்புனிதனை யாம் போற்றுவாமே

 

6மேவியபல்லுயிர்கட்கும்விண்ணவர்க்கு மிக்ககளைகண்ணாயெண்ணில்

பாவியவணடங்களெலாம் படைத்தளித்துத்துடைத்தருளும்பதியாய் மேலாய்த்

தாவிலருட்சச்சிதாநந்தவடிவாய்திகழ்சங்கரனைநாளும்

பூவுலகும்பணிந்தேத்தும் பூவணநாயகனை நித்தம் போற்றல் செய்வாம்

 

7          புகலரியபுவனமெலாம் பொருந்துயிர்கட் கிரங்கியருள் பொழிந்துநாளும்

பகர்தருமிப்படர்புவியிற் பலரறியாவகை யொளித்தபரிசு தோன்ற

மகிழுயர்வானெழுபரிதிவானவன் வந்தருச்சித்து வணங்கியேத்துந்

திகழ்தருபூம் பொழில்புடைசூழ் தென்றிருப்பூவணந்தரன்றாள் சிந்தை செய்வாம்

 

அழகியநாயகர்

8          திங்கடவழ்சடாமௌலித் தென்கூடற் சிவபெருமான் சித்தராகிப்

பங்கமுறு கருந்தாதுபசும்பொன்னாங்குளிகையருள்பான்மையாலே

பொங்கரவவகலல்குற் பொன்னனையாள் கண்டுவந்து போற்றுநீரா

ரங்கணுலகம்புகழுமழகியநாயகர் பாதமகத்துள் வைப்பாம்

 

மின்னன்னை

9          மன்னுமழைதவழ் குழலுமதி தருநன்முகோதயமுமலர்ப்பூங்கையும்

பன்னுதமிழ்ப்பால் சுரக்கும் பயோதரமுமறைகொழிக்கும் பவளவாயுந்

துன்னுமணிதிகழுடையுந்துடியிடையுந் துலங்குறுமைந் தொழிற் கும் வித்தாய்ப்

பொன்னனையானிடத்தமர்ந்த மின்னனையாள் பொற்பாதம் போற்றல் செய்வாம்

 

விநாயகக்கடவுள்

10        இகபரந்தந்திடுமிந் நூற்கிலக்கணச் சொல்வழுவாமலிடையூறின்றிப்

பகரவருள் புரிந்தருளப்பனிவரை மின்னனையெனும் பார்ப்பதியைப்பாங்காற்

றிகழ்கலசமுலைமுகட்டிற் றென்றி ருப்பூவணத்தரன்றான் சேர்ந்துநல்கும்

புகர்முகத்துக்கருணை மதம் பொழிகவுட்டுப் போதகத்தைப் போற்றுவாமே

 

முருகக் கடவுள்

11        தலம்புகழ் வச்சிரத்தடக்கை யிந்திரன் றந்தருள் பாவைதன்னேர்வள்ளி

நலம்புகழ்செவ்வேளரற்கு ஞானவுபதேசமருண்ஞானமைந்தன்

றுலங்குகிரவுஞ்சகிரி துளைபடவெஞ்சூரனுரங்கிழியவேலை

கலங்கவயில்வேல்விடுத்த கந்தனைப்பந்தனைய கற்றிக்கருத்துள் வைப்பாம்

 

வயிரவக்கடவுள்

12        அரிபிரமரகந்தைகெட வண்டங்களுடைந்துமிகு மங்கிகொண்டே

யுரியபலவுலகமெலா மொழிந்திடு நாளவர்கடமதுடன் மேல்கொண்டு

குருதிவாய் கொப்பளிப்பக்கூரயின்மூவிலைச்சூலங்கொண்ட திண்டோட்

கருவரை நேர்தருவடுகக்கடவுளெமைக் காப்பக் கை கூப்புவாமே

 

சரசுவதிதேவி

13        அரியசுவைதருமமுதவருவிபாய்ந்தொழுகருணமண்டலஞ்சேர்

விரிகதிர் வெண்மதிக்கற்றை வெண்கமலபீடிகைமேல் வீற்றிருந்து

பரவருநற்கலைகளெலாம் பவளவாய்திறந்துரைக்கும் பனுவலாட்டி

திருவடிகடமையெமதுசிரத்தினிலுங்கருத்தினிலுமிருத்துவாமே

 

திருநந்திதேவர்

14        திகழ்மகுட சேகரமுஞ்சிறுபிறையுநுதற் கண்ணுஞ் செங்கைநான்கு

மகிழ்சுரிகைப்பிரம்பினுடன் மான்மழுவும்படைத்தந்திவண்ணநண்ணி

யிகபரநல்கெம்பெருமானிணையடிவீழ்ந்தயன் முதலோரெந்தஞான்றும்

புகழ்கயிலைமலைக்காவல்பூண்ட திருநந்திபதம்புந்தி கொள்வாம்

 

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

15        திருத்தோணிபுரத்தமர்ந்த சிவனருளானுமைகலசத்திருமுலைப்பால்

விருப்போடுமமுதுசெய்துமிகுசைவத்துறைவிளங்கவேதமோங்கக்

கருக்குழிவீழ்ந்தலறவமண்கையர்கடாங்கழுவேறக்கருதிமாற

னெருப்புறுவெப்பகன்றிடவெண்ணீறெடுத்துச் சாத்தினர் தாணினை தல் செய்வாம்

 

திருநாவுக்கரசுநாயனார்

16        அருள்பெருகுந்திலகவதி யாரருளாலமண்சமயமகற்றியன்பாற்

கருதரியகற்புணையாற்கடனீந்திக் கருவேலைகடப்பான்போலு

மருவுபுகழ்வாய்மூரில் வைதிகசைவந்தழைப்ப வந்து தோன்றித்

திருவதிகைப் பதிவருஞ் செந்தமிழ் நாவுக்கரையர் பதஞ்சிந்தை செய்வாம்

 

சுந்தரமூர்த்தி நாயனார்

17        காதலுடன் மிகுமின்பக் கடிமணப்பூம்பந்தரின் கீழ்க்கலைவல்லோர்முன்

மாதவன் போல் வந்திவனம் வழித்தொண்டனென்றிசைக்கும் வழக்கினாலே

பாதிமதிநுதற் பரவையிடையிருளிற் பங்கயப் பொற்பாதஞ்சேப்பச்

சோதிதனைத் தூதுகொண்ட சுந்தரன்றாள் சந்ததமுந் தொழுது வாழ்வாம்

 

மாணிக்கவாசக சுவாமிகள்

18        மருவார்கடொழுகழற்றென் மதுரைவருதமிழ்வழுதி மன்னர் கோமான்

பொருவாசிகொணர்கெனச் செம்பொன் கொடுத்துவிடுத்திடவச் செம்பொன்னாலே

பெருவாழ்வை யுறவிரைந்து பெருந்துறையின் மேவியதம்பிரானைக் கொண்ட

திருவாதவூரடிகளிரு பாதகமலங்கள் சென்னிவைப்பாம்

 

மெய்கண்டதேவர்

19        பொய்கண்டவெவையுமெனப் பொல்லாத கணபதிதான்புகன்றுபின்னர்

மைகண்டத்தடக்குமரன் வழங்குசிவஞானநூல்வகுத்துக் காட்டக்

கைகண்டபின்னருளேகண்ணாகக் கண்ட பெண்ணைப் புனல்சூழ்வெண்ணை

மெய்கண்ட தேவனடிகை கொண்டு கூப்பிமுடிமீது சேர்ப்பாம்

 

திருத்தொண்டர்

20        பார்மேவுசைவதப் பாலோராய்ப்பரசமய நிராகரித்துப்

பேர்மேவு பெருமைதரும் ​பெறற்கரிய பேரின்பமுத்தி பெற்றோர்

போர்மேவுமழுவேந்தும் பூவணத்தெம் புண்ணியன் பொற்கோயினண்ணுஞ்

சீர்மேவு திருத்தொண்டர் சேவடிகடினம் பணிந்து சிந்தை செய்வாம்

கடவுள் வாழ்த்து முற்றியது

ஆகச் செய்யுள் 20

*****

 

அவையடக்கம்

வேறு

21        அற்றமில்கலையினுண்ணறிவின் மேலையோர்

பொற்றிருப்பூவணப் புராணமாண்புற

முற்பகர்வடகலை மொழிபெயர்த்துநீ

நற்றமிழான் முறைநவிற்றுகென்னவே

 

22        பொங்கு வெங்கதிரவன் பூசையாற்றிய

சங்கரன்கதை சொலத்தமிய னெண்ணுத

றுங்கமாமேருவைச் சுமப்பனின்றெனப்

பங்குடையான் கரம்பற்றல் போலுமால்

 

23        குற்றமிலிரதநற்குளிகை காக்கலும்

பொற்புறத்தாமிரம்புகரில் பைம்பொனா

முற்றவென்பாடலுமுணர்வின்மேதகு

நற்றமிழ் வாணர்முன்னவையுந்தீருமால்

 

வேறு

24        விடையுகைத்திடுமின்னனைபாகன்மேற்

றொடைநிரம்புசொல்சூடத் தொடங்கல்யா

னடையிடற்கருநல்லெழின்மைந்தர்சூழ்

கடல்கடக்கக்கருதுவதொக்குமால்

 

25        திருத்தகும் பொழிற்றென்றிருப்பூவண

நிருத்தமாடியநின்மலன் காதையை

யருத்தியாலுலகம் புகழ்காரிகை

விருத்தயாப்பினெடுத்து விளம்புகேன்

அவையடக்க முற்றியது

ஆகச் செய்யுள் 25

*****

 

நைமிசாரணியச் சருக்கம்

26        பொன்னலந்திகழ்ந்தோங்கிய பூவணக்காதை

தன்னை நான்மறைச்சவுநகாதியமுநிகணங்க

டுன்னுமாதவச் சூதனை வினவிய சூழ

னன்னிலம் புகழ்நைமிசவணிசில நவில்வாம்

 

27        காரின்மல்கியகந்தரந்தந்த காட்சியினாற்

சீரிணங்கிய சென்னியிற் றிங்கண் மேவுதலா

லேரிணங்கிய மாதவர்க்கின் பமீகையினா

னாரிபாகனை நிகர்ப்பது நைமிசாரணியம்

 

28        சீரிணங்குறச் சேணிவந்தோங்கலாற் செய்ய

வாரிணங்குநன்மலர்க் கொடிமருவு கண்ணுறலா

லேரிணங்கிய வெண்ணரும்புட் கணண்ணுதலா

னாரணன்றனை யொத்ததுநைமிசாரணியம்

 

29        நான்முகங்களுநான்மறைநவிற்றுதலானு

நான்முகந்தருநாயகி நண்ணுதலானு

நான்முகங்களுநன்குறப்படைத்திடலானு

நான்முகன்றனை யொத்தது நைமிசாரணியம்

 

30        பன்னுநான்மறைபயில்பவர் பன்னசாலைகளு

மன்னுகின்ற வட்டாங்கயோகத்தர்வாழிடமு

மின்னருட்கணுற்றிரண்டற நிற்பவரிடமு

நன்னலம்பெற நிறைந்தது நைமிசாரணியம்

 

31        வண்ணமேவியபூந்தவிசேந்தியவள்ள

லெண்ணிலாதவர்பிறப்புடனிறப்பெலாந்தங்கள்

கண்ணினாற்கண்டுகழிந்தபல்காலங்கள் கடந்தோர்

நண்ணிமாதவம்பயில்வது நைமிசாரணியம்

 

32        காலனாணையுங்காமனதாணையுங்கஞ்ச

மேலயன்றிருவாணையுமேகவண்ணஞ்சேர்

கோலமாயவன் குலவிய வாணையுமாக

நாலுநண்ணரிதாயது நைமிசாரணியம்

 

33        பிரமசர்யம் வானப்பிரத்தம் மெழில் பிறங்கு

மரியநான்மறையறைந்திடுமதிவணாச்சிரமம்

பரவுகின்றனயாவையும் பற்றாத்துறந்த

லுரியவாச்சிரமங்கணான் குடையதவ்வனமே

 

34        புகழ்வினீடுவெண்பூதிசாதனம் புனைமெய்யர்

திகழ்செழுங்கதிரெறித்திடு செஞ்சடாமகுடர்

மகிழ்சிறந்தநல்வற்கலையுடையினர்மாறா

திகழ்தலின்றியே நாடொறுமிருந்தவமிழைப்போர்

 

35        எண்ணருந்திறலோர் புகழிருபிறப்பாளர்

நண்ணுமுப்பொழுதருச்சனைபுரியுநான்மறையோ

ரண்ணலுண்மகிழைவகைவேள்விகளமைப்போர்

கண்ணுதற்கருமங்கமாறுங்கரைகண்டோர்

 

36        ஒருமைசேர்ந்த மெய்யுணர்வினரிருவினையொழிந்தோ

ரருமைமும்மலர்நாற்கரணந்தனையயர்த்தோர்

வெருவுமைம்புலப்பகைஞரை வென்றருள்வீரர்

கருதுறாதவெண்ணெண்பெருங்கலைக்கடல்கடந்தோர்

 

37        சூழ்ந்தவல்வினைத்தொடர்படுகின்ற தொல்பவத்தைப்

போழ்ந்தஞானவாட்படையினர் புரிமுந்நூன்மார்பர்

தாழ்ந்தநல்லுறிதாங்குகுண்டிகைத் தடக்கையர்

வாழ்ந்தவைதிகசைவர்வாழ்நைமிசவனமே

 

38        பகைகடீர்ந்திடும் பன்னகவயிரியும்பாம்பு

மகிழ்வினோங்கிடும் வாலுளையரியொடுமதமா

மிகுவிலங்கினம் விரும்பியோர் துறையுணீரருந்தி

யிகலதின்றியேயின்புறமருவுமெஞ்ஞான்றும்

 

வேறு

39        காமாதிகள் விட்டேற்குநர் தண்டோரொருசாரார்

பூமாலை களாற் பூசனை புரிவோரொருசாரா

ரோமாதிகளுக்காவனகொணர்வோரொருசாரார்

பாமாண்புறவே பாடுநராடுநரொருசாரார்

 

40        யாகாதிகடருமங்களிழைப்போரொரு சாரார்

யோகாதிகள் கருமங்களுழப் போரொரு சாரார்

சாகாமூலபலந்தருகிற்பவரொருசாரார்

மாகாமந்தனை மாற்றிமகிழ்ந்தோரொரு சாரார்

 

41        வேதாகமநூன்மேதகவோதுநரொருசாரா

ராதாரத்தினடுக்கையறிந்தோரொருசாரார்

நாதாந்தந்தனை நாடிநவிற்றுநரொருசாரா

ரோதாவுண்மைப் பொருளையுணர்ந்தோரொருசாரார்

 

வேறு

42        உந்தியாரழன்மூளநற்சுழுமுனைதிறந்ததினூடுபோய்

விந்துவாரமுதம்பொழிந்துமெய்விழிசெழுந்துளிவீசவே

யந்தமாதியிலாத செந்தழலண்ட கோளகை மண்டவே

நந்தஞான சுகோதயந்தனை நண்ணுகின்றனர் சிலரரோ

 

43        தீதினற்றிரி புண்டரத்தொடு செய்ய கண்டிகை மெய்யினர்

காதல்கூர் தருகா மனம் பதுகனவினுந் தெறல் காண்கிலா

ரோதுநற்சுகதுக்கம் வெம்பகையுறவு நன்றொடு தீதிலா

ராதியந்தமிலாதவன்றனையன் பினான் மிக நம்பினோர்

 

44        நாக்கினான் மறைபோற்று வோரிவர் நண்ணுசாலை கண்முன்னரே

மூக்கினாற் பிணி முகமெடுத்தென முள்ளெயிற்றரவள்ளவே

யாக்குநற்பகுவாய்கள் கக்கிடு மலகில் செம்மணியிலகறான்

றூக்கு சோதி விளக்கினுக்கிணை சொல்லலாமலதில்லையே

 

45        நித்தமாதவரைத்தினந்தொறு நீங்கிடாதருளோங்கநற்

பத்தியான்மிகு பன்னகத் தொடு பல்பொறிப்புலி சேர்தறான்

சித்திமுத்திகள் சேரநல்குறுதில்லையம்பலவெல்லைசார்ந்

தத்தனாடலருட்கணாடிடவிருதபோதனரமர்தல் போன்ம்

 

46        தூய மாதவமே பயின்றிடு சுத்தர் நித்தர் சுகோதயர்

நேயநீடநு போகமல்லது நெஞ்சின் வேறு நினைக்கிலார்

மேயநைமிசகானகந்தனின் மேன்மையாவர்விளம்புவா

ராயிரம் பகுவாயனந்தனுநாவிசைத்திடலாவதோ

நைமிசாரணியச் சருக்க முற்றியது

ஆகச்செய்யுள்  46

*****

 

சவுநகர்சூதரை வினவியசருக்கம்

47        நவில்கின்ற நைமிசாராணியந்தன்னி னற்றவத்தின் மிக்க சிவஞானவேட்கைச்

சவுநகாதியமுனிவர் கணங்களானோர்தர்க்கமோடுத்தரங்கள் சாற்றித் தாபித்

துவமனிலாமாதவன்றன் மைந்தன் மைந்தரொருமையுடனிருண் மலந்தீர்ந்திருந்தங்கோர்நாட்

சிவனடியை யடையும் வகை தெரிக்குங் காதை சேர்ந்தவர் கடாந்தம் மிற்றேருங்காலை

 

வேறு

48        பின்னியபின்னல் பிறங்கவிரித்தோன்

மன்னியநல்லரைவற்கலையாத்தோ

னன்னியமத்தொழினாளுமிழைப்போன்

பன்னியதீவினை பற்றாவிட்டோன்

 

49        பாயதலம்பெறுபல்லுயிருக்குந்

தாயினுமன்புதழைத்திடுமேலோ

னேயமிகுந்தவநீங்கலிலாதோன்

றூயவெணீறு துதைந்திடுமெய்யோன்

 

50        புண்டரமீது பொருந்திவிளங்குங்

கண்டிகைகொண்டகவின்றருமார்ப

னெண்டருமெண்கலையாவுமுணர்ந்தோன்

பண்டருவேதபராயணர்சூழல்

 

51        அங்கணிலம்புகழங்கணுதற்சேர்

சங்கரனன் புதழைத்துறன்மானச்

செங்கைகடாங்கிய சென்னியன்மன்னுந்

துங்கமிகுந்தவசூதனடைந்தான்

 

52        கட்டமும்வெம்பிணியுங்களைகட்ட

சிட்டர்கடாமெதிர்செங்கைகுவித்துச்

சட்டெனவாயிடைசார்ந்திடநாப்ப

ணிட்டதொராதனமேறியிருந்தான்

 

53        இருந்தருள்காலையிருந்தவவாணர்

சுரந்தருண்மாதவசூதனை நோக்காப்

பொருந்தியகை நனிகூப்பினர் போற்றித்

திருந்துரையின்னன செப்புதலுற்றார்

 

54        நாடியகாலையினானில மெங்குந்

தேடியபூடடிசேர்ந்ததையொக்குங்

கேடிலருந்தவகேட்குதியெம்பா

னீடருளாலிவணீவரலாலே

 

55        மாதவமேபுரிமாதவனான

மேதகுவேதவியாதனவன்பா

லாதரவிற் கொளருங்கலையாவு

மோதியுணர்ந்தவுனக்கிணையுண்டோ

 

56        உன்னையலாதினியோர் கதியின்றா

னின்னருளைப் பெற நேர்ந்தவன்யானென்

றென்னை முனிட்டவிருந்தவர் முன்னென்

புன்மொழி நன்மை பொருந்தவுணர்ந்தே

 

57        முன்பொர்தினந்தனின் மூதறிவாலே

மன்பயில்புட்பவனத்தது காதை

மின்பயில்கின்ற சுவேதவனத்தி

னன்கதை நாப்பணவின்றிடுகாலை

 

58        அப்பரிசங்கணறைந்தசுருக்க

மெய்ப்படநாடிவிளங்கவிரித்துத்

திப்பியமான செழுங்கதை மேன்மை

யிப்பரிசென்னவியம்பிட வேண்டும்

 

59        என்றிவைசவுநகனேத்தியிசைப்ப

நன்றிதுநன்றிதெனாநனிநாடிப்

பொன்றிகழ்மாமுனிபுங்கவவென்னாத்

துன்றியவன் பொடுசூதனுரைப்பான்

 

வேறு

60            கந்தநறும்பொகுட்டுடைவெண் கதிர்நிலாக்கற்றைக் கமலமலர்ப்பீடிகை சேர்கலைமடந்தைதனையு

முந்தமறைநான்கினொடு புராண மூவாறுமுழுதுலகமிறைஞ்சவன்பின் மொழிந்த வியாதனையுஞ்

சுந்தரநற்கவுட்டுமதசலமருவி தூங்குந் தூங்கியகைத் தூங்கன்முகபடாந்துலங்குமொற்றைத்

தந்தமுறுமடிகடிருவடிகளையும் போற்றிச் சந்ததமு மருள் புரிவான்சிந்தனை தான் செய்தே

 

61            வேதமொடாறங்கமாகமபுராணங்கண் மேதகுநற்கலையாவுமோதியுணர்ந்தவனீ

யாதலதற்கையமிலையாயினுமென்றன்னை யவையகத்துநன்குணர்ந்தோனாக்குதற்குநினைந்தே

யோதுகவிக்காதைதனை யெனவுரைத்தியதனாலுவந்துரைப்பன் சவுநகமாமுனிவரனேயென்னாச்

சூதனருள்வியாதனுரைத்திட்ட வணமோர்ந்து தொல்கயிலைவளஞ்சிறிது சொல்லலுற்றான்மாதோ

சவுநகர் சூதரை வினவியசருக்க முற்றியது

ஆகச் செய்யுள் 61

*****

 

திருக்கைலாயச் சருக்கம்

62        பங்கயன்முகுந்தன் பாகசாதனனே பரவருமிருடிகளுரகர்

புங்கவர்யாரும்புடைபரந்தீண்டிப் போற்றியே நாத்தழும்பேறத்

தங்குறையிரந்து தலைத்தலை சார்ந்து சந்ததமிடைதரத் தயங்குந்

திங்களங்கண்ணி மிலைச்சியசடிலசேகரன் றிருக்கயிலாயம்

 

63        மன்னியசென்னிவானுறநிமிர்ந்துமருவிய கொடுமுடிபலவா

யுன்னத நூறாயிரமியோசனை யாயுரைக்கு மவ்வளவைகீழுடைத்தாய்ப்

பன்னருமகலப் பான்மையுமமூதாயப்பயின்று சூழ்படரிருவிசும்பிற்

றுன்னுபொன்மணிகள் சுடர்விடநிவக்குந் தொல்கயிலாயநீள்சிலம்பு

 

64        மகரகேதனனைமருவு போனகமாய்வாரியுண்கண்ணுதற்பெருமான்

றகுமுலகனைத் துஞ்சார்ந்துயிர்க்குயிராந்தம்பிரானானவெம்பிரான்சேர்

ககனகூடத்தின் முகட்டினுஞ்சென்று கனகமாமணிவெயில்பரப்புஞ்

சிகரகோபுரங்கள் சேண்டிகழ்ந்தோங்குந் திருக்கைலாயநீள்பொருப்பு

 

65        பிரமன்மான்முதலோர் பெயர்ந்திடவெழுந்தபிரளயத்தினும்புடைபெயரா

துரியவானந்த வுருவமாயோங்குமுண்மையாயசலமாயொன்றாக்

கருதருமுயிர்க்குக்களை கணாய்க் கதியாங்கண்ணுதலண்ணலெஞ்ஞான்றும்

பரிவின்வீற்றிருக்கும் பதியதாய் மேலாய்ப் பயில்வதுகயிலையஞ்சயிலம்

 

66        வெங்கதிரவனுமீதுநண்ணுறலால் வெண்சுடராயினனென்றா

லங்கண்மாஞாலத்தாருயிர்புனிதமாவதையறைதல்வேண்டின்றே

துங்கமேவியநற்சவுநகமுனிவசொல்லுதிநன்குநீதுணிவாற்

செங்கண்மால்விடையான்றிருவருளுருவாய்த்திகழ்வதுகயிலையாமெனவே

 

67        அன்றியும் வெய்யோனணைதருகாலையலர்தருமருணமண்டலம்போய்த்

துன்றியகிரணமேற்படவந்தச்சுவேதவண்ணந்துதைந்ததனா

லொன்றியவுணர்வினும்பர்தாங்கீழ்வந்து ற்றிடினவ்வியல்பாவ

ரென்றமூதுணர்த்திநின்றதும்போலாமெழிறிகழ்கயிலை மால்வரையே

 

68        சந்திரன்றிகழுஞ்சடிலசேகரமுந்தடக்கை கணான்குமரன் மழுவுஞ்

சுந்தரப்பிரம்புஞ்சுரிகையுநுதலிற் றுலங்கியகண்ணும் வெண்ணீறு

மந்தவான் மடவார்கண்டமங்கலநாணறாது றவாலமுண்டிருண்ட

கந்தரனருளுநந்தியம்பெருமான் கைக்கொடு காப்பதக்கயிலை

 

வேறு

69        அடிமுடியறிதலின்றாகிநிற்றலான்

முடிவறமுகிழ்மதிமுடியிற் சேர்தலாற்

படர்புகழ்பரப்பியபால் வெண்ணீறணி

கடவுளை நிகர்ப்பது கயிலை மால்வரை

 

70        அரியயனமரர்களடிவந்தேத்தலா

லிருமையுமருளியே யென்றுமேவலாற்

பரனுமையொடுகலந்தருளும் பான்மையாற்

கரிமுகனனையது கயிலைமால்வரை

 

71        சுந்தரக்கண்ணுதறுலங்கிச் சேர்தலால்

வந்திடுஞ்சூருரமாற்றமேவலாற்

சந்ததங்குன்றமாய்த்தயங்குகாட்சியாற்

கந்தவேளனையதுகயிலைமால்வரை

 

72        உரியவானுறவளர்ந்தோங்கிநிற்றலால்

வரியளிமுரன்றபூமடந்தைமேவலா

லரியநான்மறைவிரித்தருளுநீர்மையாற்

கரியமாலனையது கயிலைமால்வரை

 

73        தோற்றியே நிற்றலாற் சுருதிபோற்றலா

னாற்றிசைமுகங்களுநண்ணுமாண்பினாற்

போற்றுநற்கலைமகள்பொருந்தலாற் புழற்

காற்சரோருகனிகர்கயிலைமால்வரை

 

74        தினமிகு செல்வங்கடிளைக்குஞ் செய்கையால்

வனமுறுநெடியமான்மருவுமாண்பினாற்

றனைநிகர்தாமரைத்தாளின்மன்னுகோ

கனதையைநிகர்ப்பது கயிலை மால்வரை

 

75        அலரும்வெண்டாமரையணைந்தபொற்பினாற்

பலகலையாகமம் பன்னும் பான்மையா

னலமிகுநான்முகனண்ணலாற்செழுங்

கலைமகளனையதுகயிலை மால்வரை

 

76        எண்டிசாமுகங்களுமிருளைத்தள்ளியே

பண்புறுபாலொளிபரப்புகின்றது

கண்களாலளப்பருங்கவின் கொண்டோங்கிய

வெண்படாம்போர்த்ததாம் வெள்ளியங்கிரி

 

77        எள்ளதரிதாயபேரின்பமீந்திடுங்

கள்ளவிழ்கடுக்கைநற்கண்ணியஞ்சடை

வள்ளனாடோறுமேல்வதிந்துதோன்றலால்

வெள்ளைமால்விடைநிகர்வெள்ளியங்கிரி

 

78        நாற்றிசையெங்கணுநன்னிலாத்திர

டோற்றமோடெழுந்துவான்றுருவச்செல்வது

பாற்கடறிரண்டுருப்படைத்துவிண்டொட

மேற்கிளர்ந்தனையது வெள்ளியங்கிரி

 

79        ஒழுகியநிலாவுலகுந்தியங்கியாற்

சுழுமுனைதிறந்துநற்றுவாதசாந்தத்திற்

பொழிதருமமுதமேபொங்கியெங்கணும்

விழுவதுபோன்றது வெள்ளியங்கிரி

 

80        நிரந்தரமெங்கணுநீடுபேரொளி

கரந்துயிர்க்குயிருமாய்க்கலந்து மேவிய

பரஞ்சுடர்திருவுருக் கொண்டபண்புமேல்

விரிந்தது போன்றது வெள்ளியங்கிரி

 

81        எண்ணருமகலிருள்விசும்பினெங்கணுந்

தண்ணருடவழநன்னிலாத்தழைப்பது

கண்ணருமமுதத்தைக் ககனங்கான்றிடும்

வெண்ணிலாத்தாரை நேர் வெள்ளியங்கிரி

 

82        திக்குடன் விதிக்கெனுந்திசைகளெட்டினு

மிக்குயர்முடியினும் வேறிடத்தினுந்

தக்கநற்கழைசொரிதரளமின்னுதன்

மிக்கதாரகைநிகர்வெள்ளியங்கிரி

 

83        கண்ணுதலண்ணலைக்காலைமாலையி

னண்ணியே வானவர் நாளும் போற்றிடப்

பண்ணு கண்ணேணி போற்பாரினின்று நீள்

விண்ணிலவுதலுறும் வெள்ளியங்கிரி

 

84        துந்துபியோசையுந்தூயநான்மறை

நந்தியதும்புருநாரதாதியர்

கந்தருவத்தவர்கானவோசையும்

விந்துநாதத்தருமிக்கவோசையும்

 

85        எண்ணரிதாயபாரிடங்களோசையுங்

கண்ணருநந்திமுன்கணங்களோசையும்

விண்ணவரோசையும் வேதவோசையும்

பண்ணவரோசையும் பயிலுமெங்கணும்

 

86        காமரமருச்சுநங்காகதுண்டநீள்

பூமிகுகுங்குமம் புன்னைவன்னிபொற்

றேமருவேலநற்றிகிரிகூவிள

மாமலகங்கடம்பாரமாதுளம்

 

87        வண்பலவரம்பைமாவகுளந்தாடிமம்

பிண்டிமந்தாரமாம்பிரநற்பிப்பிலஞ்

சண்பகந்தமரநீள்சாலஞ்சந்தனம்

விண்டிகழ்பராரைமாமரங்கண்மேவுமால்

 

88        பொற்புறுமணிமுடிப்புரந்தராதியர்

செற்றலுநந்திதன்செங்கை தாங்கிய

நற்பிரம்படிபடநண்ணுமாரங்க

ளற்றுதிர்குப்பைகளளப்பிலாதன

 

89        விரவியமாதவர் வேள்வித்தூமமுஞ்

சுரர்மடவார்கடஞ்சுரியற் சூட்டிய

பொருவருகற்பகப்பூவுமேவிய

பரிமளந்திசைதொறும் பரந்துநாறுமால்

 

90        காழிருங்கூந்தல் சேர் கௌரிநாயகன்

வாழிருங்கயிலைமால்வரையை மானவே

சூழிருங்கடற்புவிதுதிக்கநீண்டிடு

மேழிருபுவனத்து மெங்குமில்லையே

 

வேறு

91        அந்தநன்கயிலைதன்னிலன் புள்ளவரியயனமரர்களவுணர்

சந்திராதித்தர்கின்னரர்வசுக்கள்சாரணரெண்டிசாமுகத்தர்

கந்தருவத்தர் காரிமாகாளிகருடர் வித்தியாதரர்சித்தர்

முந்துறுநிகமாகமமுணர்முனிவர்முறை முறை தொழுதுநின்றேத்த

 

வேறு

92        சென்னிவான்றொடுசெம்பொற்கடிமதி

றுன்னுமோர் செஞ்சுடர் மணிமண்டபந்

தன்னனல்லரியாசனத்திற்றக

மின்னுவேற்கந்தன் வீற்றிருந்தானரோ

 

93        அந்தவேலையிலாறுமுகங்கொளுங்

கந்தவேளிருகஞ்சமலர்ப்பதம்

வந்தியாநன்மறைமுறைவாழ்த்தியே

நந்திகேசனவிலுதன்மேயினான்

 

94        ஈறுறாதநலெண்ணில்சிவாலயங்

கூறுகின்றதிற்கோதிலறம்பொருள்

வீறுசேரின்பவீடருளுந்தல

மாறுமாமுகத்தண்ணலருளென்றான்

 

95        என்றகாலையெழின்மிகுகந்தவே

ணன்றுநன்றெனநந்தியை நோக்குறா

வொன்றுகாதலினுண்மைப் பொருட்கதை

மன்றகேளெனவாய் மலர்ந்தானரோ

 

96        கண்ணுதல் பெறவந்தருள் கந்தவேள்

விண்ணவர்க்குவிடை கொடுத்தேகியே

யெண்ணுதற்கருமின்பத்தலத்திருந்

தண்ணறன்னையகத்தினிருத்தியே

 

97        தனைநிகர்க்குமத்தாணுவருளினாற்

புனிதமேவிய பூவணமான்மிய

நினையுமெந்தைநிகழ்த்த நிகழ்த்துகே

னனிமகிழ்ந்தருணந்தியந்தேவுகேள்

 

98        என்றுகந்தனிசைத்திடவந்நந்தி

தன்றனிச் சொல்சநற்குமரன் கொடே

வென்றிவேதவியாதற்குரைக்கவமூ

தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்

 

99        ஈதுமுன்னரிசைந்தசோபானமென்

றோதுநீதிச்சவுநகற்கோதியே

காதலாலக்கதையைவிரித்துயர்

சூதமாமுனிசொல்லத் தொடங்கினான்

திருக்கைலாயச்சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 99

*****

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.