திருப்பூவணப் புராணம் – பகுதி – (10)
கி.காளைராசன்
உ
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
5. திருப்பூவணப் புராணம்
*****
காப்பு
1 திகழ்வரைமின்னனைவதனச் செங்கமலந்தளையவிழ்க்குந்திவாகரஞ்செய்
மகிழொருவெண்மதி மருப்பின் வயிரகிம்புரி வயங்குமத்தயானை
நிகழுமடியார்க்கன்புநீடுமறம்பொருளின்பம் வீடுநல்கும்
புகழ்தருநற்கற்பகத்தின் பொற்பதத்தையெஞ்ஞான்றும் போற்றல் செய்வாம்
நூற்பயன்
2 தந்திமுகன்றம்பியரு ணந்திதனக்குரைப்பநந்தி சநற்குமாரன்
வெந்துயரமறவெடுத்துவிரித்துரைப்பவவன் வேதவியாதற்கோதப்
புந்தியுணர்ந்தவன்சூதமுநிக்குரைத்த புட்பவனபுராணந்தன்னைச்
சிந்தைமகிழ்வுறப் படிப்போர் கேட்போர் நல்லிகபரங்கள் சேர்வரன்றே
கடவுள் வாழ்த்து
சபாபதி
வேறு
3 பூமேவுதிருமாலும் புண்டரிகத்தயனும்
புரந்தரனும் வானவரும் புங்கவரும் போற்றப்
பாமேவு பண்டருஞ் சொற்பரிவுமையாள் காணப்படர்
தரு செம்பவள நறுஞ் சடை தாழமிலைச்சுந்
தேமேவு செழுங்கொன்றை தேன்றுளிப்ப விருள்
கால்சீக்குமினன் மதிநிலவெண்டிசாமுகஞ் சென்றெறிப்ப
மாமேவு மணிமன்றுணடம்புரியுமெங்கோன்
மன்னுபரிபுரமலர்த்தாள் சென்னிமிசைச் சேர்ப்பாம்
திருப்பூவணநாதர்
வேறு
4 பூமாது மகிழ்துளபப்புயல்வண்ண நெடுமாலும்புகழ்வெண்கஞ்ச
நாமாதுநடனமிடுநான்மறைதேர்நான்முகனுநயப்ப நன்னீர்த்
தேமாது செழும்பவளச் சடையிருப்பத்திங்களிருடுரப்பச்சைல
மாமாது வடிவிலங்கமன்னிய பூவணத்தரன்றாள் சென்னிசேர்ப்பாம்
5 ஒருபொருளாயுயிர்க்குயிரா யுருவநான்கருவநான்குபயமொன்றா
யருள்வடிவாயகண்டிதமாயசஞ்சலமாயாதிநடுவந்தமின்றாய்க்
கருதரிதாய்ச் செல்கதியாய்க் காண்பரிதாய்க்காரணகாரியங்கடந்த
பொருவில்பரிபூரணமாம் பூவணத்தெம்புனிதனை யாம் போற்றுவாமே
6மேவியபல்லுயிர்கட்கும்விண்ணவர்க்கு மிக்ககளைகண்ணாயெண்ணில்
பாவியவணடங்களெலாம் படைத்தளித்துத்துடைத்தருளும்பதியாய் மேலாய்த்
தாவிலருட்சச்சிதாநந்தவடிவாய்திகழ்சங்கரனைநாளும்
பூவுலகும்பணிந்தேத்தும் பூவணநாயகனை நித்தம் போற்றல் செய்வாம்
7 புகலரியபுவனமெலாம் பொருந்துயிர்கட் கிரங்கியருள் பொழிந்துநாளும்
பகர்தருமிப்படர்புவியிற் பலரறியாவகை யொளித்தபரிசு தோன்ற
மகிழுயர்வானெழுபரிதிவானவன் வந்தருச்சித்து வணங்கியேத்துந்
திகழ்தருபூம் பொழில்புடைசூழ் தென்றிருப்பூவணந்தரன்றாள் சிந்தை செய்வாம்
அழகியநாயகர்
8 திங்கடவழ்சடாமௌலித் தென்கூடற் சிவபெருமான் சித்தராகிப்
பங்கமுறு கருந்தாதுபசும்பொன்னாங்குளிகையருள்பான்மையாலே
பொங்கரவவகலல்குற் பொன்னனையாள் கண்டுவந்து போற்றுநீரா
ரங்கணுலகம்புகழுமழகியநாயகர் பாதமகத்துள் வைப்பாம்
மின்னன்னை
9 மன்னுமழைதவழ் குழலுமதி தருநன்முகோதயமுமலர்ப்பூங்கையும்
பன்னுதமிழ்ப்பால் சுரக்கும் பயோதரமுமறைகொழிக்கும் பவளவாயுந்
துன்னுமணிதிகழுடையுந்துடியிடையுந் துலங்குறுமைந் தொழிற் கும் வித்தாய்ப்
பொன்னனையானிடத்தமர்ந்த மின்னனையாள் பொற்பாதம் போற்றல் செய்வாம்
விநாயகக்கடவுள்
10 இகபரந்தந்திடுமிந் நூற்கிலக்கணச் சொல்வழுவாமலிடையூறின்றிப்
பகரவருள் புரிந்தருளப்பனிவரை மின்னனையெனும் பார்ப்பதியைப்பாங்காற்
றிகழ்கலசமுலைமுகட்டிற் றென்றி ருப்பூவணத்தரன்றான் சேர்ந்துநல்கும்
புகர்முகத்துக்கருணை மதம் பொழிகவுட்டுப் போதகத்தைப் போற்றுவாமே
முருகக் கடவுள்
11 தலம்புகழ் வச்சிரத்தடக்கை யிந்திரன் றந்தருள் பாவைதன்னேர்வள்ளி
நலம்புகழ்செவ்வேளரற்கு ஞானவுபதேசமருண்ஞானமைந்தன்
றுலங்குகிரவுஞ்சகிரி துளைபடவெஞ்சூரனுரங்கிழியவேலை
கலங்கவயில்வேல்விடுத்த கந்தனைப்பந்தனைய கற்றிக்கருத்துள் வைப்பாம்
வயிரவக்கடவுள்
12 அரிபிரமரகந்தைகெட வண்டங்களுடைந்துமிகு மங்கிகொண்டே
யுரியபலவுலகமெலா மொழிந்திடு நாளவர்கடமதுடன் மேல்கொண்டு
குருதிவாய் கொப்பளிப்பக்கூரயின்மூவிலைச்சூலங்கொண்ட திண்டோட்
கருவரை நேர்தருவடுகக்கடவுளெமைக் காப்பக் கை கூப்புவாமே
சரசுவதிதேவி
13 அரியசுவைதருமமுதவருவிபாய்ந்தொழுகருணமண்டலஞ்சேர்
விரிகதிர் வெண்மதிக்கற்றை வெண்கமலபீடிகைமேல் வீற்றிருந்து
பரவருநற்கலைகளெலாம் பவளவாய்திறந்துரைக்கும் பனுவலாட்டி
திருவடிகடமையெமதுசிரத்தினிலுங்கருத்தினிலுமிருத்துவாமே
திருநந்திதேவர்
14 திகழ்மகுட சேகரமுஞ்சிறுபிறையுநுதற் கண்ணுஞ் செங்கைநான்கு
மகிழ்சுரிகைப்பிரம்பினுடன் மான்மழுவும்படைத்தந்திவண்ணநண்ணி
யிகபரநல்கெம்பெருமானிணையடிவீழ்ந்தயன் முதலோரெந்தஞான்றும்
புகழ்கயிலைமலைக்காவல்பூண்ட திருநந்திபதம்புந்தி கொள்வாம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
15 திருத்தோணிபுரத்தமர்ந்த சிவனருளானுமைகலசத்திருமுலைப்பால்
விருப்போடுமமுதுசெய்துமிகுசைவத்துறைவிளங்கவேதமோங்கக்
கருக்குழிவீழ்ந்தலறவமண்கையர்கடாங்கழுவேறக்கருதிமாற
னெருப்புறுவெப்பகன்றிடவெண்ணீறெடுத்துச் சாத்தினர் தாணினை தல் செய்வாம்
திருநாவுக்கரசுநாயனார்
16 அருள்பெருகுந்திலகவதி யாரருளாலமண்சமயமகற்றியன்பாற்
கருதரியகற்புணையாற்கடனீந்திக் கருவேலைகடப்பான்போலு
மருவுபுகழ்வாய்மூரில் வைதிகசைவந்தழைப்ப வந்து தோன்றித்
திருவதிகைப் பதிவருஞ் செந்தமிழ் நாவுக்கரையர் பதஞ்சிந்தை செய்வாம்
சுந்தரமூர்த்தி நாயனார்
17 காதலுடன் மிகுமின்பக் கடிமணப்பூம்பந்தரின் கீழ்க்கலைவல்லோர்முன்
மாதவன் போல் வந்திவனம் வழித்தொண்டனென்றிசைக்கும் வழக்கினாலே
பாதிமதிநுதற் பரவையிடையிருளிற் பங்கயப் பொற்பாதஞ்சேப்பச்
சோதிதனைத் தூதுகொண்ட சுந்தரன்றாள் சந்ததமுந் தொழுது வாழ்வாம்
மாணிக்கவாசக சுவாமிகள்
18 மருவார்கடொழுகழற்றென் மதுரைவருதமிழ்வழுதி மன்னர் கோமான்
பொருவாசிகொணர்கெனச் செம்பொன் கொடுத்துவிடுத்திடவச் செம்பொன்னாலே
பெருவாழ்வை யுறவிரைந்து பெருந்துறையின் மேவியதம்பிரானைக் கொண்ட
திருவாதவூரடிகளிரு பாதகமலங்கள் சென்னிவைப்பாம்
மெய்கண்டதேவர்
19 பொய்கண்டவெவையுமெனப் பொல்லாத கணபதிதான்புகன்றுபின்னர்
மைகண்டத்தடக்குமரன் வழங்குசிவஞானநூல்வகுத்துக் காட்டக்
கைகண்டபின்னருளேகண்ணாகக் கண்ட பெண்ணைப் புனல்சூழ்வெண்ணை
மெய்கண்ட தேவனடிகை கொண்டு கூப்பிமுடிமீது சேர்ப்பாம்
திருத்தொண்டர்
20 பார்மேவுசைவதப் பாலோராய்ப்பரசமய நிராகரித்துப்
பேர்மேவு பெருமைதரும் பெறற்கரிய பேரின்பமுத்தி பெற்றோர்
போர்மேவுமழுவேந்தும் பூவணத்தெம் புண்ணியன் பொற்கோயினண்ணுஞ்
சீர்மேவு திருத்தொண்டர் சேவடிகடினம் பணிந்து சிந்தை செய்வாம்
கடவுள் வாழ்த்து முற்றியது
ஆகச் செய்யுள் 20
*****
அவையடக்கம்
வேறு
21 அற்றமில்கலையினுண்ணறிவின் மேலையோர்
பொற்றிருப்பூவணப் புராணமாண்புற
முற்பகர்வடகலை மொழிபெயர்த்துநீ
நற்றமிழான் முறைநவிற்றுகென்னவே
22 பொங்கு வெங்கதிரவன் பூசையாற்றிய
சங்கரன்கதை சொலத்தமிய னெண்ணுத
றுங்கமாமேருவைச் சுமப்பனின்றெனப்
பங்குடையான் கரம்பற்றல் போலுமால்
23 குற்றமிலிரதநற்குளிகை காக்கலும்
பொற்புறத்தாமிரம்புகரில் பைம்பொனா
முற்றவென்பாடலுமுணர்வின்மேதகு
நற்றமிழ் வாணர்முன்னவையுந்தீருமால்
வேறு
24 விடையுகைத்திடுமின்னனைபாகன்மேற்
றொடைநிரம்புசொல்சூடத் தொடங்கல்யா
னடையிடற்கருநல்லெழின்மைந்தர்சூழ்
கடல்கடக்கக்கருதுவதொக்குமால்
25 திருத்தகும் பொழிற்றென்றிருப்பூவண
நிருத்தமாடியநின்மலன் காதையை
யருத்தியாலுலகம் புகழ்காரிகை
விருத்தயாப்பினெடுத்து விளம்புகேன்
அவையடக்க முற்றியது
ஆகச் செய்யுள் 25
*****
நைமிசாரணியச் சருக்கம்
26 பொன்னலந்திகழ்ந்தோங்கிய பூவணக்காதை
தன்னை நான்மறைச்சவுநகாதியமுநிகணங்க
டுன்னுமாதவச் சூதனை வினவிய சூழ
னன்னிலம் புகழ்நைமிசவணிசில நவில்வாம்
27 காரின்மல்கியகந்தரந்தந்த காட்சியினாற்
சீரிணங்கிய சென்னியிற் றிங்கண் மேவுதலா
லேரிணங்கிய மாதவர்க்கின் பமீகையினா
னாரிபாகனை நிகர்ப்பது நைமிசாரணியம்
28 சீரிணங்குறச் சேணிவந்தோங்கலாற் செய்ய
வாரிணங்குநன்மலர்க் கொடிமருவு கண்ணுறலா
லேரிணங்கிய வெண்ணரும்புட் கணண்ணுதலா
னாரணன்றனை யொத்ததுநைமிசாரணியம்
29 நான்முகங்களுநான்மறைநவிற்றுதலானு
நான்முகந்தருநாயகி நண்ணுதலானு
நான்முகங்களுநன்குறப்படைத்திடலானு
நான்முகன்றனை யொத்தது நைமிசாரணியம்
30 பன்னுநான்மறைபயில்பவர் பன்னசாலைகளு
மன்னுகின்ற வட்டாங்கயோகத்தர்வாழிடமு
மின்னருட்கணுற்றிரண்டற நிற்பவரிடமு
நன்னலம்பெற நிறைந்தது நைமிசாரணியம்
31 வண்ணமேவியபூந்தவிசேந்தியவள்ள
லெண்ணிலாதவர்பிறப்புடனிறப்பெலாந்தங்கள்
கண்ணினாற்கண்டுகழிந்தபல்காலங்கள் கடந்தோர்
நண்ணிமாதவம்பயில்வது நைமிசாரணியம்
32 காலனாணையுங்காமனதாணையுங்கஞ்ச
மேலயன்றிருவாணையுமேகவண்ணஞ்சேர்
கோலமாயவன் குலவிய வாணையுமாக
நாலுநண்ணரிதாயது நைமிசாரணியம்
33 பிரமசர்யம் வானப்பிரத்தம் மெழில் பிறங்கு
மரியநான்மறையறைந்திடுமதிவணாச்சிரமம்
பரவுகின்றனயாவையும் பற்றாத்துறந்த
லுரியவாச்சிரமங்கணான் குடையதவ்வனமே
34 புகழ்வினீடுவெண்பூதிசாதனம் புனைமெய்யர்
திகழ்செழுங்கதிரெறித்திடு செஞ்சடாமகுடர்
மகிழ்சிறந்தநல்வற்கலையுடையினர்மாறா
திகழ்தலின்றியே நாடொறுமிருந்தவமிழைப்போர்
35 எண்ணருந்திறலோர் புகழிருபிறப்பாளர்
நண்ணுமுப்பொழுதருச்சனைபுரியுநான்மறையோ
ரண்ணலுண்மகிழைவகைவேள்விகளமைப்போர்
கண்ணுதற்கருமங்கமாறுங்கரைகண்டோர்
36 ஒருமைசேர்ந்த மெய்யுணர்வினரிருவினையொழிந்தோ
ரருமைமும்மலர்நாற்கரணந்தனையயர்த்தோர்
வெருவுமைம்புலப்பகைஞரை வென்றருள்வீரர்
கருதுறாதவெண்ணெண்பெருங்கலைக்கடல்கடந்தோர்
37 சூழ்ந்தவல்வினைத்தொடர்படுகின்ற தொல்பவத்தைப்
போழ்ந்தஞானவாட்படையினர் புரிமுந்நூன்மார்பர்
தாழ்ந்தநல்லுறிதாங்குகுண்டிகைத் தடக்கையர்
வாழ்ந்தவைதிகசைவர்வாழ்நைமிசவனமே
38 பகைகடீர்ந்திடும் பன்னகவயிரியும்பாம்பு
மகிழ்வினோங்கிடும் வாலுளையரியொடுமதமா
மிகுவிலங்கினம் விரும்பியோர் துறையுணீரருந்தி
யிகலதின்றியேயின்புறமருவுமெஞ்ஞான்றும்
வேறு
39 காமாதிகள் விட்டேற்குநர் தண்டோரொருசாரார்
பூமாலை களாற் பூசனை புரிவோரொருசாரா
ரோமாதிகளுக்காவனகொணர்வோரொருசாரார்
பாமாண்புறவே பாடுநராடுநரொருசாரார்
40 யாகாதிகடருமங்களிழைப்போரொரு சாரார்
யோகாதிகள் கருமங்களுழப் போரொரு சாரார்
சாகாமூலபலந்தருகிற்பவரொருசாரார்
மாகாமந்தனை மாற்றிமகிழ்ந்தோரொரு சாரார்
41 வேதாகமநூன்மேதகவோதுநரொருசாரா
ராதாரத்தினடுக்கையறிந்தோரொருசாரார்
நாதாந்தந்தனை நாடிநவிற்றுநரொருசாரா
ரோதாவுண்மைப் பொருளையுணர்ந்தோரொருசாரார்
வேறு
42 உந்தியாரழன்மூளநற்சுழுமுனைதிறந்ததினூடுபோய்
விந்துவாரமுதம்பொழிந்துமெய்விழிசெழுந்துளிவீசவே
யந்தமாதியிலாத செந்தழலண்ட கோளகை மண்டவே
நந்தஞான சுகோதயந்தனை நண்ணுகின்றனர் சிலரரோ
43 தீதினற்றிரி புண்டரத்தொடு செய்ய கண்டிகை மெய்யினர்
காதல்கூர் தருகா மனம் பதுகனவினுந் தெறல் காண்கிலா
ரோதுநற்சுகதுக்கம் வெம்பகையுறவு நன்றொடு தீதிலா
ராதியந்தமிலாதவன்றனையன் பினான் மிக நம்பினோர்
44 நாக்கினான் மறைபோற்று வோரிவர் நண்ணுசாலை கண்முன்னரே
மூக்கினாற் பிணி முகமெடுத்தென முள்ளெயிற்றரவள்ளவே
யாக்குநற்பகுவாய்கள் கக்கிடு மலகில் செம்மணியிலகறான்
றூக்கு சோதி விளக்கினுக்கிணை சொல்லலாமலதில்லையே
45 நித்தமாதவரைத்தினந்தொறு நீங்கிடாதருளோங்கநற்
பத்தியான்மிகு பன்னகத் தொடு பல்பொறிப்புலி சேர்தறான்
சித்திமுத்திகள் சேரநல்குறுதில்லையம்பலவெல்லைசார்ந்
தத்தனாடலருட்கணாடிடவிருதபோதனரமர்தல் போன்ம்
46 தூய மாதவமே பயின்றிடு சுத்தர் நித்தர் சுகோதயர்
நேயநீடநு போகமல்லது நெஞ்சின் வேறு நினைக்கிலார்
மேயநைமிசகானகந்தனின் மேன்மையாவர்விளம்புவா
ராயிரம் பகுவாயனந்தனுநாவிசைத்திடலாவதோ
நைமிசாரணியச் சருக்க முற்றியது
ஆகச்செய்யுள் 46
*****
சவுநகர்சூதரை வினவியசருக்கம்
47 நவில்கின்ற நைமிசாராணியந்தன்னி னற்றவத்தின் மிக்க சிவஞானவேட்கைச்
சவுநகாதியமுனிவர் கணங்களானோர்தர்க்கமோடுத்தரங்கள் சாற்றித் தாபித்
துவமனிலாமாதவன்றன் மைந்தன் மைந்தரொருமையுடனிருண் மலந்தீர்ந்திருந்தங்கோர்நாட்
சிவனடியை யடையும் வகை தெரிக்குங் காதை சேர்ந்தவர் கடாந்தம் மிற்றேருங்காலை
வேறு
48 பின்னியபின்னல் பிறங்கவிரித்தோன்
மன்னியநல்லரைவற்கலையாத்தோ
னன்னியமத்தொழினாளுமிழைப்போன்
பன்னியதீவினை பற்றாவிட்டோன்
49 பாயதலம்பெறுபல்லுயிருக்குந்
தாயினுமன்புதழைத்திடுமேலோ
னேயமிகுந்தவநீங்கலிலாதோன்
றூயவெணீறு துதைந்திடுமெய்யோன்
50 புண்டரமீது பொருந்திவிளங்குங்
கண்டிகைகொண்டகவின்றருமார்ப
னெண்டருமெண்கலையாவுமுணர்ந்தோன்
பண்டருவேதபராயணர்சூழல்
51 அங்கணிலம்புகழங்கணுதற்சேர்
சங்கரனன் புதழைத்துறன்மானச்
செங்கைகடாங்கிய சென்னியன்மன்னுந்
துங்கமிகுந்தவசூதனடைந்தான்
52 கட்டமும்வெம்பிணியுங்களைகட்ட
சிட்டர்கடாமெதிர்செங்கைகுவித்துச்
சட்டெனவாயிடைசார்ந்திடநாப்ப
ணிட்டதொராதனமேறியிருந்தான்
53 இருந்தருள்காலையிருந்தவவாணர்
சுரந்தருண்மாதவசூதனை நோக்காப்
பொருந்தியகை நனிகூப்பினர் போற்றித்
திருந்துரையின்னன செப்புதலுற்றார்
54 நாடியகாலையினானில மெங்குந்
தேடியபூடடிசேர்ந்ததையொக்குங்
கேடிலருந்தவகேட்குதியெம்பா
னீடருளாலிவணீவரலாலே
55 மாதவமேபுரிமாதவனான
மேதகுவேதவியாதனவன்பா
லாதரவிற் கொளருங்கலையாவு
மோதியுணர்ந்தவுனக்கிணையுண்டோ
56 உன்னையலாதினியோர் கதியின்றா
னின்னருளைப் பெற நேர்ந்தவன்யானென்
றென்னை முனிட்டவிருந்தவர் முன்னென்
புன்மொழி நன்மை பொருந்தவுணர்ந்தே
57 முன்பொர்தினந்தனின் மூதறிவாலே
மன்பயில்புட்பவனத்தது காதை
மின்பயில்கின்ற சுவேதவனத்தி
னன்கதை நாப்பணவின்றிடுகாலை
58 அப்பரிசங்கணறைந்தசுருக்க
மெய்ப்படநாடிவிளங்கவிரித்துத்
திப்பியமான செழுங்கதை மேன்மை
யிப்பரிசென்னவியம்பிட வேண்டும்
59 என்றிவைசவுநகனேத்தியிசைப்ப
நன்றிதுநன்றிதெனாநனிநாடிப்
பொன்றிகழ்மாமுனிபுங்கவவென்னாத்
துன்றியவன் பொடுசூதனுரைப்பான்
வேறு
60 கந்தநறும்பொகுட்டுடைவெண் கதிர்நிலாக்கற்றைக் கமலமலர்ப்பீடிகை சேர்கலைமடந்தைதனையு
முந்தமறைநான்கினொடு புராண மூவாறுமுழுதுலகமிறைஞ்சவன்பின் மொழிந்த வியாதனையுஞ்
சுந்தரநற்கவுட்டுமதசலமருவி தூங்குந் தூங்கியகைத் தூங்கன்முகபடாந்துலங்குமொற்றைத்
தந்தமுறுமடிகடிருவடிகளையும் போற்றிச் சந்ததமு மருள் புரிவான்சிந்தனை தான் செய்தே
61 வேதமொடாறங்கமாகமபுராணங்கண் மேதகுநற்கலையாவுமோதியுணர்ந்தவனீ
யாதலதற்கையமிலையாயினுமென்றன்னை யவையகத்துநன்குணர்ந்தோனாக்குதற்குநினைந்தே
யோதுகவிக்காதைதனை யெனவுரைத்தியதனாலுவந்துரைப்பன் சவுநகமாமுனிவரனேயென்னாச்
சூதனருள்வியாதனுரைத்திட்ட வணமோர்ந்து தொல்கயிலைவளஞ்சிறிது சொல்லலுற்றான்மாதோ
சவுநகர் சூதரை வினவியசருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 61
*****
திருக்கைலாயச் சருக்கம்
62 பங்கயன்முகுந்தன் பாகசாதனனே பரவருமிருடிகளுரகர்
புங்கவர்யாரும்புடைபரந்தீண்டிப் போற்றியே நாத்தழும்பேறத்
தங்குறையிரந்து தலைத்தலை சார்ந்து சந்ததமிடைதரத் தயங்குந்
திங்களங்கண்ணி மிலைச்சியசடிலசேகரன் றிருக்கயிலாயம்
63 மன்னியசென்னிவானுறநிமிர்ந்துமருவிய கொடுமுடிபலவா
யுன்னத நூறாயிரமியோசனை யாயுரைக்கு மவ்வளவைகீழுடைத்தாய்ப்
பன்னருமகலப் பான்மையுமமூதாயப்பயின்று சூழ்படரிருவிசும்பிற்
றுன்னுபொன்மணிகள் சுடர்விடநிவக்குந் தொல்கயிலாயநீள்சிலம்பு
64 மகரகேதனனைமருவு போனகமாய்வாரியுண்கண்ணுதற்பெருமான்
றகுமுலகனைத் துஞ்சார்ந்துயிர்க்குயிராந்தம்பிரானானவெம்பிரான்சேர்
ககனகூடத்தின் முகட்டினுஞ்சென்று கனகமாமணிவெயில்பரப்புஞ்
சிகரகோபுரங்கள் சேண்டிகழ்ந்தோங்குந் திருக்கைலாயநீள்பொருப்பு
65 பிரமன்மான்முதலோர் பெயர்ந்திடவெழுந்தபிரளயத்தினும்புடைபெயரா
துரியவானந்த வுருவமாயோங்குமுண்மையாயசலமாயொன்றாக்
கருதருமுயிர்க்குக்களை கணாய்க் கதியாங்கண்ணுதலண்ணலெஞ்ஞான்றும்
பரிவின்வீற்றிருக்கும் பதியதாய் மேலாய்ப் பயில்வதுகயிலையஞ்சயிலம்
66 வெங்கதிரவனுமீதுநண்ணுறலால் வெண்சுடராயினனென்றா
லங்கண்மாஞாலத்தாருயிர்புனிதமாவதையறைதல்வேண்டின்றே
துங்கமேவியநற்சவுநகமுனிவசொல்லுதிநன்குநீதுணிவாற்
செங்கண்மால்விடையான்றிருவருளுருவாய்த்திகழ்வதுகயிலையாமெனவே
67 அன்றியும் வெய்யோனணைதருகாலையலர்தருமருணமண்டலம்போய்த்
துன்றியகிரணமேற்படவந்தச்சுவேதவண்ணந்துதைந்ததனா
லொன்றியவுணர்வினும்பர்தாங்கீழ்வந்து ற்றிடினவ்வியல்பாவ
ரென்றமூதுணர்த்திநின்றதும்போலாமெழிறிகழ்கயிலை மால்வரையே
68 சந்திரன்றிகழுஞ்சடிலசேகரமுந்தடக்கை கணான்குமரன் மழுவுஞ்
சுந்தரப்பிரம்புஞ்சுரிகையுநுதலிற் றுலங்கியகண்ணும் வெண்ணீறு
மந்தவான் மடவார்கண்டமங்கலநாணறாது றவாலமுண்டிருண்ட
கந்தரனருளுநந்தியம்பெருமான் கைக்கொடு காப்பதக்கயிலை
வேறு
69 அடிமுடியறிதலின்றாகிநிற்றலான்
முடிவறமுகிழ்மதிமுடியிற் சேர்தலாற்
படர்புகழ்பரப்பியபால் வெண்ணீறணி
கடவுளை நிகர்ப்பது கயிலை மால்வரை
70 அரியயனமரர்களடிவந்தேத்தலா
லிருமையுமருளியே யென்றுமேவலாற்
பரனுமையொடுகலந்தருளும் பான்மையாற்
கரிமுகனனையது கயிலைமால்வரை
71 சுந்தரக்கண்ணுதறுலங்கிச் சேர்தலால்
வந்திடுஞ்சூருரமாற்றமேவலாற்
சந்ததங்குன்றமாய்த்தயங்குகாட்சியாற்
கந்தவேளனையதுகயிலைமால்வரை
72 உரியவானுறவளர்ந்தோங்கிநிற்றலால்
வரியளிமுரன்றபூமடந்தைமேவலா
லரியநான்மறைவிரித்தருளுநீர்மையாற்
கரியமாலனையது கயிலைமால்வரை
73 தோற்றியே நிற்றலாற் சுருதிபோற்றலா
னாற்றிசைமுகங்களுநண்ணுமாண்பினாற்
போற்றுநற்கலைமகள்பொருந்தலாற் புழற்
காற்சரோருகனிகர்கயிலைமால்வரை
74 தினமிகு செல்வங்கடிளைக்குஞ் செய்கையால்
வனமுறுநெடியமான்மருவுமாண்பினாற்
றனைநிகர்தாமரைத்தாளின்மன்னுகோ
கனதையைநிகர்ப்பது கயிலை மால்வரை
75 அலரும்வெண்டாமரையணைந்தபொற்பினாற்
பலகலையாகமம் பன்னும் பான்மையா
னலமிகுநான்முகனண்ணலாற்செழுங்
கலைமகளனையதுகயிலை மால்வரை
76 எண்டிசாமுகங்களுமிருளைத்தள்ளியே
பண்புறுபாலொளிபரப்புகின்றது
கண்களாலளப்பருங்கவின் கொண்டோங்கிய
வெண்படாம்போர்த்ததாம் வெள்ளியங்கிரி
77 எள்ளதரிதாயபேரின்பமீந்திடுங்
கள்ளவிழ்கடுக்கைநற்கண்ணியஞ்சடை
வள்ளனாடோறுமேல்வதிந்துதோன்றலால்
வெள்ளைமால்விடைநிகர்வெள்ளியங்கிரி
78 நாற்றிசையெங்கணுநன்னிலாத்திர
டோற்றமோடெழுந்துவான்றுருவச்செல்வது
பாற்கடறிரண்டுருப்படைத்துவிண்டொட
மேற்கிளர்ந்தனையது வெள்ளியங்கிரி
79 ஒழுகியநிலாவுலகுந்தியங்கியாற்
சுழுமுனைதிறந்துநற்றுவாதசாந்தத்திற்
பொழிதருமமுதமேபொங்கியெங்கணும்
விழுவதுபோன்றது வெள்ளியங்கிரி
80 நிரந்தரமெங்கணுநீடுபேரொளி
கரந்துயிர்க்குயிருமாய்க்கலந்து மேவிய
பரஞ்சுடர்திருவுருக் கொண்டபண்புமேல்
விரிந்தது போன்றது வெள்ளியங்கிரி
81 எண்ணருமகலிருள்விசும்பினெங்கணுந்
தண்ணருடவழநன்னிலாத்தழைப்பது
கண்ணருமமுதத்தைக் ககனங்கான்றிடும்
வெண்ணிலாத்தாரை நேர் வெள்ளியங்கிரி
82 திக்குடன் விதிக்கெனுந்திசைகளெட்டினு
மிக்குயர்முடியினும் வேறிடத்தினுந்
தக்கநற்கழைசொரிதரளமின்னுதன்
மிக்கதாரகைநிகர்வெள்ளியங்கிரி
83 கண்ணுதலண்ணலைக்காலைமாலையி
னண்ணியே வானவர் நாளும் போற்றிடப்
பண்ணு கண்ணேணி போற்பாரினின்று நீள்
விண்ணிலவுதலுறும் வெள்ளியங்கிரி
84 துந்துபியோசையுந்தூயநான்மறை
நந்தியதும்புருநாரதாதியர்
கந்தருவத்தவர்கானவோசையும்
விந்துநாதத்தருமிக்கவோசையும்
85 எண்ணரிதாயபாரிடங்களோசையுங்
கண்ணருநந்திமுன்கணங்களோசையும்
விண்ணவரோசையும் வேதவோசையும்
பண்ணவரோசையும் பயிலுமெங்கணும்
86 காமரமருச்சுநங்காகதுண்டநீள்
பூமிகுகுங்குமம் புன்னைவன்னிபொற்
றேமருவேலநற்றிகிரிகூவிள
மாமலகங்கடம்பாரமாதுளம்
87 வண்பலவரம்பைமாவகுளந்தாடிமம்
பிண்டிமந்தாரமாம்பிரநற்பிப்பிலஞ்
சண்பகந்தமரநீள்சாலஞ்சந்தனம்
விண்டிகழ்பராரைமாமரங்கண்மேவுமால்
88 பொற்புறுமணிமுடிப்புரந்தராதியர்
செற்றலுநந்திதன்செங்கை தாங்கிய
நற்பிரம்படிபடநண்ணுமாரங்க
ளற்றுதிர்குப்பைகளளப்பிலாதன
89 விரவியமாதவர் வேள்வித்தூமமுஞ்
சுரர்மடவார்கடஞ்சுரியற் சூட்டிய
பொருவருகற்பகப்பூவுமேவிய
பரிமளந்திசைதொறும் பரந்துநாறுமால்
90 காழிருங்கூந்தல் சேர் கௌரிநாயகன்
வாழிருங்கயிலைமால்வரையை மானவே
சூழிருங்கடற்புவிதுதிக்கநீண்டிடு
மேழிருபுவனத்து மெங்குமில்லையே
வேறு
91 அந்தநன்கயிலைதன்னிலன் புள்ளவரியயனமரர்களவுணர்
சந்திராதித்தர்கின்னரர்வசுக்கள்சாரணரெண்டிசாமுகத்தர்
கந்தருவத்தர் காரிமாகாளிகருடர் வித்தியாதரர்சித்தர்
முந்துறுநிகமாகமமுணர்முனிவர்முறை முறை தொழுதுநின்றேத்த
வேறு
92 சென்னிவான்றொடுசெம்பொற்கடிமதி
றுன்னுமோர் செஞ்சுடர் மணிமண்டபந்
தன்னனல்லரியாசனத்திற்றக
மின்னுவேற்கந்தன் வீற்றிருந்தானரோ
93 அந்தவேலையிலாறுமுகங்கொளுங்
கந்தவேளிருகஞ்சமலர்ப்பதம்
வந்தியாநன்மறைமுறைவாழ்த்தியே
நந்திகேசனவிலுதன்மேயினான்
94 ஈறுறாதநலெண்ணில்சிவாலயங்
கூறுகின்றதிற்கோதிலறம்பொருள்
வீறுசேரின்பவீடருளுந்தல
மாறுமாமுகத்தண்ணலருளென்றான்
95 என்றகாலையெழின்மிகுகந்தவே
ணன்றுநன்றெனநந்தியை நோக்குறா
வொன்றுகாதலினுண்மைப் பொருட்கதை
மன்றகேளெனவாய் மலர்ந்தானரோ
96 கண்ணுதல் பெறவந்தருள் கந்தவேள்
விண்ணவர்க்குவிடை கொடுத்தேகியே
யெண்ணுதற்கருமின்பத்தலத்திருந்
தண்ணறன்னையகத்தினிருத்தியே
97 தனைநிகர்க்குமத்தாணுவருளினாற்
புனிதமேவிய பூவணமான்மிய
நினையுமெந்தைநிகழ்த்த நிகழ்த்துகே
னனிமகிழ்ந்தருணந்தியந்தேவுகேள்
98 என்றுகந்தனிசைத்திடவந்நந்தி
தன்றனிச் சொல்சநற்குமரன் கொடே
வென்றிவேதவியாதற்குரைக்கவமூ
தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்
99 ஈதுமுன்னரிசைந்தசோபானமென்
றோதுநீதிச்சவுநகற்கோதியே
காதலாலக்கதையைவிரித்துயர்
சூதமாமுனிசொல்லத் தொடங்கினான்
திருக்கைலாயச்சருக்க முற்றியது
ஆகச்செய்யுள் 99
*****
ஆற்றுச்சருக்கம்
100 முன்னவனருளினாலேமுக்குறும்போட்டிமேலாந்
தன்னிகரருந்தவத்துச் சவுநகமுனிவகேண்மோ
பன்னுசெந்தமிழ்சேர்சங்கப்பாண்டிநன்னாடுசூழ்ந்த
தொன்மைசால் பொருநைவைகை வளஞ்சில தொகுத்துரைப்பாம்
101 பன்னிறங்களினுஞ் சென்றுபடிகந்தான்பற்றுகின்ற
வந்நிலைபோல்வெண்மேகமார்கலிபடிந்தருந்தித்
துன்னியெம்மருங்குமார்த்துச் சூன்முதிர்ந்திடித்துமின்னி
மைந்நிறங்கவர்ந்து கொண்டுவானகத்தெழுந்ததன்றே
102 இகம்பரமிரண்டுஞ் சேரவெடுத்ததநூற்கடன்மடுத்திட்
டகந்தெளிந்துணர்ந்த மேலாமறிவுடைக்குரவரானோர்
பகர்ந்தமாணாக்கர் தம்பாற் பரிந்து நல்லருந்தமிழ்ச் சொற்
புகன்ற போற்பொதியவெற்பிற் பொழிந்தனபுனலின்றாரை
103 மருவியவரசன்றன் பால்வண்கொடைக்கடலையுண்டு
பரவருமகிழ்விற்றத்தம்பதியிடைப்புலமைமிக்கோர்
விரைவொடுபடர்வதென்னமிகுவனங்கவர்ந்துவிண்டோய்
தருமுயர்மலயவெற்பிற்றண்முகில் பொழிந்தமாதோ
104 கிளர்தருபொதிய வெற்பிற் கேழுறு பொருநை நீத்தந்
தளையவிழ்ந்துயர்பூங்கொம்பர்த்தருக்குலஞ் சாய்த்துருட்டி
யளவில் பல்கால் கடோறுமடைத்தநெட்டணையுடைத்து
நெளிதிரைக்கடலைநாடி நெறிக் கொடு சென்றதன்றே
105 பொருவரும்பொருநைமன்னும் புனிதநீர்குடையுமாதர்
குருமணிக்கலசக் கொங்கைக்குங்குமமளைந்து சேறாங்
கருதுநல்லறிவின் மேலோர் பேதையர்க்கலந்தகாலை
மருவுதன்னிலை கலங்கும் வண்ணமே போலமாதோ
106 மகிழ்சிறந்தியாவர்க்கேனும் வழங்கிடும் வள்ளலேபோன்
மிகுநலமணியும் பொன்னும் வீசுந் தெண்டிரைக்கரத்தா
லகமலர்ந்தங்கண் ஞாலத்தாருயிர்க்கருள வேண்டிப்
புகழ்தருபொருநைநீத்தம் பொருந்து கால் பரந்ததன்றே
107 கொலைகெழுகூர் வேற்றாங்குங் குமரவேள் பதமேல்கொண்டு
கலைவரு கன்னிதாள்கை கூப்பி மால் கழலிறைஞ்சி
வலனைவென்றவன்றாள் கண்டு வருணனை வணங்கி நீத்தம்
பலசமயத்துளோரும் பரவுற வொழுகுமன்றே
108 பருப்பதந்தன்னினோங்கும் பராரைமாமரஞ் சாய்த்தீர்த்துப்
பொருக்கெனப் பொருநைசெல்லப் பொந்தில் வாழ்புட்கள் போத
லுரைக்கரும்பகைஞர் வெம்போர்க்குடைந்திடுமரசனோடு
தருக்கறச் சூழ்ந்து நீங்காத்தானையை மானுமன்றே
109 வான்முகங்கிழிய வோங்குமலயநீர்ப்பொருநைமண்மேற்
றான்முகங்கொடுநடந்துதலைத்தலைமயங்கிமள்ளர்
கான்முகம்பரந்து மிக்ககருங்கடல்படியுந்தன்மை
நான்முகன்படைப்ப நண்ணிநானிலமொடுங்கல்போலும்
110 பொருதிருப்பொருநையோடு புரிசடைப்பெருமான்றன்னான்
மருவியமகிழ்வினீடும் வைகைமாநதியையுந்தான்
றருணவெண்ணிலாக் கொழிக்குந் தரளமாலிகை போற்றாங்குந்
திருமிகுவண்மைசான்றசெந்தமிழ்ப்பாண்டிநாடு
ஆற்றுச் சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 110
*****
திருநாட்டுச் சருக்கம்
111 பூண்டதண்பொருநையின்சீர்புகன்றன
நீண்டிலகுஞ்சடைநிமலர்மேவிய
வேண்டிகழ்பதிகளேழிரண்டியைந்திடு
பாண்டிநாட்டணிசில பகர்கிற்பாமரோ
வேறு
112 புரங்குன்றச்சிலைகுனித்துப் பொறியரவுநாணாகப் பூட்டி மூவர்
தரங்குன்றக்கருதாதுதழலெழவேநகைசெய்துதரைமேற்றூங்குங்
கரங்குன்றம்படைத்தனையகரடமதகரியுரி போர்த்தருளுங்காமர்
பரங்குன்றஞ்சார் கூடற் பரமனருளாலோங்கும் பாண்டிநாடு
113 பன்னுமலயத்துவச பாண்டியன் பண்டிழைத்ததவப்பயத்தினாலே
முன்னொருகாலவதரித்து மும்முலையாண்முடிதுலங்கமுறையிற்காக்கு
மந்நிலையிலமர்புரிந்தங்கவளை மணம்புணர்ந்தருளியங்கணாளன்
மன்னுநற்சுந்தரமாறனெனவரசுபுரிந்துளதுவழுதிநாடு
114 கொண்டலுறழ்மின்கூந்தற் கொண்டமணங்கொங்குதேரென்றெடுத்து
மண்டலமெண்மாகீர்த்தி வழுதி பெற வெழுது திருமுகமாம் வண்டீந்
தண்டமிழின்பொருள்விளங்கச் சங்கத்தின் கீழ் நின்று பரனுஞ் சாற்றும்
பண்டருமத்தமிழ்ச் சங்கப்பாடன் மணங் கொழித்திடுந் தென்பாண்டிநாடு
115 குலவுவடவேங்கடந்தென்குமரியெனத்தமிழெல்லைகூறுகின்ற
தலமதனிற்றலைமை பெறு தலமீரேழ்தயங்குறுசெந்தமிழ் நாடென்றே
யிலகுமரியயனமரரிந்திரன் வந்திறைஞ்சவருளேற்பநல்கு
மலைமகணல்லரசினறம்வளர்க்கவளஞ்சுரந்தளிக்கும் வைகைநாடு
116 தவலறவேயொருநான்கு தலையிட்டவறுபமூதுதந்தலீலை
சிவபொருமான் செய்தருளிச் செங்கயற்கண் மங்கையொடுஞ் சேர்ந்தநாடு
கவுணியர்தங்குலத்துதித்தகாளையமண்கையர் தமைக்கழுவிலேற்ற
மவுலிதிகழ் வழுதிமகிழ் வண்டமிழேடெதிரேறும் வைகை நாடு
117 தென்மதுரைபரங்குன்றந்திருவிராமேச்சுரமாடானைபுத்தூர்
பன்னுதமிழேடகநெல்வேலி பகர்குற்றாலமாப்பனூர்பார்
மன்னுபுனற்சுழியல்புனவாயில் கொடுங்குன்றமெழின் மருவுகானை
பொன்மதில் சூழ் பூவணமும் பொருந்துகின்ற புகழ்ப் பொதியப் பொருப்பனாடு
வேறு
118 மண்டுகின்றவன்மள்ளர்தம்மோசையும்
வெண்டிரைப்புனல்வெள்ளத்தினோசையும்
பண்டருங்கிளைப்பாடலினோசையு
மண்டகோளகைக்கப்புறஞ்சாருமால்
119 கொண்டலொன்றைமின்கூறுசெய்தென்னவே
மண்டுமோரிருவன்பகட்டின்பிடர்த்
திண்டிறன்மள்ளர் பொன்னுகஞ் சேர்த்தியே
கண்டுவைரக்கலப்பை தொடுத்தனர்
120 வேண்டுநீர்கொடுமேவநிரப்பியே
கீண்டுழுஞ்சாற்கிளர்மணிக்குப் பையைப்
பூண்டநல்வரம்பின்புறம் போக்குவார்
பாண்டிநாட்டுறும் பண்ணையின் பாங்கெலாம்
121 தக்கநற்றசும்பின்றதியென்னவே
நெக்குநெக்குநிறைநறுஞ்சேற்றின்முன்
றிக்கினிந்திர தெய்வதம் போற்றியே
மிக்கமள்ளர்விதைத்தனர் வித்தையே
122 மறுவிலாதுயர்மாதருமைந்தருஞ்
சிறுவர்தம்மைவளர்த்திடுசெய்கைடோ
லுறுமிகழ்ச்சியினோங்குமுழுநர்தா
நறியசெந்நெலினாறு வளர்த்தனர்
123 பொய்யின்ஞானப்புகலிப்பிரானமண்
கையர்தம் மைக்கழுவினிலேற்றுவான்
கொய்து சேர்த்தகுவான்முடியென்னவே
செய்யநாறுபறித்தவை சேர்த்தினார்
124 வள்ளத்தேயுறவாக்குமதுநுகர்ந்
துள்ளத்தேயுணர்வோடிடவோடிவீழ்ந்
தள்ளற்பள்ளத்தழுந்தினர் மள்ளர்தாங்
கள்ளுண்பார்க்குக்கதியுமுண்டாங்கொலோ
125 மள்ளரானவர் வான்மதிவள்ளத்திற்
றெள்ளிதாநறவுண்டு தெவிட்டியே
யுள்ளநாடியுழத்தியர்க்கூட்டுவார்
கள்ளின்மிக்ககளிப்புமுண்டாங்கொலோ
126 ஓடிமீளுவருண்டிடுகள்ளினைத்
தேடியோடித்தியங்கி மயங்குவார்
பாடியாடுவர் பண்ணைகளெங்கணுங்
கூடுமள்ளர் குழாத் தொடுங்கூடியே
127 மாறின்மைந்தரைமாதருமைந்தரு
மீறில் செல்வமொடில்லறஞ் சேர்த்தல்போல்
வேறுவேறு விளம்பிக் கடைசியர்
நாறுசேறுநடுவான்றொடங்கினார்
128 கந்தவார்குழற்கள்ளுண்கடைசியர்
சிந்தைநொந்துதியங்கித் தெளிந்துவந்
திந்திரன்றனை யேத்தியிறைஞ்சியே
நந்து நென்முடிநாட்செய்து நாட்டுவார்
129 எண்களோடிய லெண்டிசையெங்கணுங்
கண்களோடிக்கடைகள் சிவப்பவே
யுண்களோடியுழத்தியருண்டுதாம்
பண்களோடிசைபாடிநடுவரால்
130 உற்ற பண்ணையுலாவுமுழத்தியர்
மற்றையாரொடுமதுவுண்மயக்கினா
லற்றம்யாவையுமங்கைகள் கொட்டியே
குற்றமீதென்று கூறிநகைப்பரே
131 துள்ளுசேலினந்தூம்புடைக்கும்புனல்
வெள்ளமாமருதந்திகழ்வேலிசூழ்
மள்ளர்தந்தவளவயனாறெலாங்
கள்ளுண்காமக்கடைசியர் நாட்டினார்
வேறு
132 மிடைபடுசெஞ்சாலிதிகழ்மிகுந்தபுனற்பண்ணைதொறும்
புடைபெயர்ந்துபுனனிறுவிப்புகழ்பெறு செந்நெற்சாலி
தடைபடுந்தாட்டடங்கமலந்தன்னாலென்றுளந்தளர்ந்து
கடைஞர்கடைக்கண்காட்டக்கடைசியர் பூங்களைகளைவார்
வேறு
133 அங்கணுழத்திய ரள்ளியகழ்ந்த
செங்கமலங்கள் செழுங்கதிர்கண்டு
பொங்குதணீரிடைப் போந்தனசேரத்
தங்கிளை கண்டனர் தம்முகமொக்கும்
134 மங்கையர் தம்முகமானுவவென்றே
செங்கமலங்கடெரிந்து தெரிந்தே
யங்கண்மிகுந்தலமந்தமர்வுற்றே
தங்கவரிற்சிலர் தாங்களையாரால்
135 விட்டிடுகாமன்வியன்கணையொன்றே
யுட்கொடுமேவுமுழத்தியர் சில்லோர்
மட்டவிழ் செங்கமலத்தொடு காவி
கட்டனர்மிக்ககடுங்களையெல்லாம்
136 பந்தவிலங்குபரிந்தவர்தம்பால்
வந்துநன்ஞானம்வளர்ந்திடுமாபோற்
கந்தமலர்க்களை கட்டலினோங்கிற்
றந்தவியன்பணையார்தருபைங்கூழ்
137 செந்நெல்வளர்ந்துசெழுங்கதிர்சாய்தல்
பன்னுதமிழ்ப்புகல்பாலனை முன்னா
ளின்னருளானதியேடெதிரேற
மன்னனெழுந்துவணங்குதல் போலாம்
வேறு
138 வரம்பருறுமுழங்கொலிவாய் மருதநிலக்கிணை கறங்க
வரம்பொருதகதிரரிவாணிரைபூட்டியாங்குழவர்
பரம்பியரிந்தரிபரப்பிப்பணிலங்கடருமுத்தஞ்
சொரிந்திடவேயவைதிரட்டிச் சொன்னமலைபோற்குவித்தார்
139 மேருகிரிசாய்த்திடல்போன்மிகுசெந்நெற்போர் சரித்துக்
காரிணங்குங்கருமேதிக்கணத்தினைநன்குறப்பிணித்துப்
பாருறவேபலகாலுஞ்சூழ்ந்து பலாலந்தெரிந்து
மாருதநேருறத்தூற்றி மன்னியநென்மலை வளர்த்தார்
140 அழகியசீர்ப்புகழ் வேந்தற்காறிலொன்று கொடுத்தைந்தில்
வழிபடுதெய்வம் பிதிரர்வருவிருந்துவான்கிளைகள்
விழைவுறவேயளித்ததற்பின்மிகுமொன்றால் வியன்குடிமை
பழகிய செல்வம் பெருகும் பாண்டிவளநன்னாடே
வேறு
141 கொண்டல்சேர்பொழில்களெங்குங் குலாவுநற்பொழில்களெங்கும்
பண்டைநான்மறைகளெங்கும்பகர்ந்திடுமறைகளெங்குந்
தண்டமிழ்மணங்களெங்குந்தகுகடிமணங்களெங்கு
மண்டராலயங்களெங்குமணிகொளாலயங்களெங்கும்
142 மாதர்தம்பண்ணையெங்குமருதநீர்ப்பண்ணையெங்கு
மேதமில்செல்வமெங்குமிந்திரசெல்வமெங்கு
மோதுமஞ்சுகங்களெங்குமுரைக்குமஞ்சுகங்களெங்கு
மேதகுமுலகமெங்கும் விரும்புநல்லுலகமெங்கும்
143 வண்டமிழ்ச்சங்கமெங்கும்வார்புனற்சங்கமெங்குஞ்
சண்பகவனங்களெங்குந்தகுமடவனங்களெங்கும்
விண்படர்வேழமெங்கும் வியன்கழைவேழமெங்கும்
பண்டருபாடலெங்கும் பதமிதிப்பாடலெங்கும்
144 வேதமந்திரங்களெங்குமிக்கதந்திரங்களெங்கும்
போதலர்வாவியெங்கும் புண்ணியதீர்த்தமெங்கு
மோதுபண்ணிசைகளெங்குமுரைக்கும் யாழ்ப்பாணரெங்கு
மாதர்தம்வண்ணமெங்கும் வண்டமிழ்வண்ணமெங்கும்
145 தேமலர்பயில்வசெந்தேன் செவ்வழிபயில்வசெந்தேன்
காமநூல்பயில்வர்மாதர்கமலமாமுகமொண்மாதர்
நாமநூல்பயில்வநாவேநாவலர்பயில்வநாவே
தாமமேபயில்வவன்னந்தாமரைபயில்வவன்னம்
146 முள்ளரைநாளஞ்சேர்ந்தமுண்டகக்கையானீவி
யௌளருங்கருவிபம்பயாழ்நரம்பிசைத்தியார்த்தே
யுள்ளமிக்குவகைகூர்ந்தாங்குரைக்கும் யாழ்ப்பாணர்பாடற்
றெள்ளமுதனையதீஞ்சொற்செவியுறவாக்கின்றாரும்
147 குழலிசைபயிற்றுவாருங்குஞ்சரம்பொருத்துவாரு
மழவர்சொன்மாந்துவாருமனையறம்புரிகிற்பாரும்
விழவணிவிரும்புபவாரும் விருந்தெதிர்கொள்கிற்பாரு
முழவிசைவிரும்புவாருமுற்று மெய்த்தவஞ் செய்வாரும்
148 வாரணப்போர்சேர்ப்போருமைமறிப்போர் காண்போருந்
தேரணியூர்குவோருஞ்சிலைத் தொழில்பயிலுவோரு
மாரணந்தேர்குவோருமஞ்செழுத்தறைகுவோருங்
காரணங்கருதுவோருங்காரியந்தேர்குவோரும்
வேறு
149 கன்னலஞ்சிலைகையேந்துங்காமனூறன்னைத்தாமே
யின்னிசைபாடுவோருமிருசெவிமாந்துவோரும்
பொன்னகர்தன்னின்மன்னும்புலவரிற்பொலிந்துசூழத்
தன்னிகராகியோங்குந்தண்டமிழ்ப்பாண்டிநாடே
வேறு
150 தீதின்மாதவர்சேர்ப்பனசாலையே சிறப்பின்மல்குந்தினமன்னசாலையே
காதல்கூருங்கடிபொழின்மாலையே கருதுநீறொடுகண்டிகைமாலையே
மாதர்காதன்மிகுமந்திமாலையேவண்டுகிண்டியுறங்குவமாலையே
யாதரம்பெறுமாலெங்குமாலையே யார்வமோங்குங்கழைக்கரும்பாலையே
151 சேய்கணின்றெளவைக்கீவதுமுத்தமேசிற்றில்கோலிச்சிதைப்பதுமுத்தமே
பாய்புனற்றிரைசேர்வது பண்ணையேபாடலெங்கும்பயில்வது பண்ணையே
வாய்திறந்துவழங்குவவள்ளையேமானனார்கடம்வார்காதும்வள்ளையே
யோய்மருங்கிலுடுப்பது சேலையேயுற்றகண்களொப்பாவது சேலையே
152 கோலமாந்தரணிவதுமாரமேகுங்குமக்கொங்கைசேர்ப்பதுமாரமே
சாலவெங்குந்தவம்பயில்வாரமேதரங்கநீர்த்தரளம்புரள்வாரமே
மாலுலாவிவளருமந்தாரமேமன்னுதீஞ்சொல்வழங்குமந்தாரமே
சீலமாதவர்சிந்தையுமாரமேசேர்ந்தபண்ணைமருதமுமாரமே
153 புண்டரீகம் பொருந்துநற் சங்கமே பொங்கி யெங்கம் பொருந்துநற்சங்கமே
பண்டமாறுவபாவையராரமேபயிலுங்காமவிழாவாரவாரமே
வண்டுபாடுமலர்க்கருங்கோதையேமைந்தர் செங்கைமருவுவகோதையே
யெண்டிசாமுகமுஞ்சிவதானமேயிசைந்திடுந்தருமத்தொடுதானமே
வேறு
154 சோலையின்மறைசொல்லுவவஞ்சுகங்
கோலவேள்விருதூதுவகோகில
நீலமாடநெருங்குவமேகங்கண்
மாலைசேர்வனவண்டின்குழாமரோ
155 நீடியோங்குநிலாமுற்றமோங்குமே
மாடமூடுங்கலாபமயில்களே
பாடல்சேர்ந்திடும் பண்ணுடனோசையே
யாடுநீர்த்துறையன்னக் குழாங்களே
156 அள்ளல்வேலையகலிடமெங்கணுந்
தெள்ளுசெந்தமிழ்ச் செல்வந்திளைக்கவே
கொள்பொருள்வெமூகிக்கொள்பவரின்மையால்
வள்ளியோர்கணமண்டலத்தில்லையே
157 செம்மைநல்குறுசெந்தமிழ்சேரலால்
வெம்மைசேர்ந்தவெளிற்றுரையில்லையாம்
டுபாய்ம்மையென்றும்புகன்றறியாமையான்
மெய்ம்மையென்றும்விளம்புவதில்லையே
158 கோதின்மாமணிகுப்பைகொழிப்பன
வோதுதேன்மதுவுண்டுகளிப்பன
பாதமேபயிலும்பரதத்துடன்
மாதரோடுநடிக்குமயிற்குழாம்
159 தென்குலர்வியதேமொழியார்கடம்
பொன்குலாவியபூண்முலைதாங்கலாற்
றுன்பமேவுந்துடியிடையன்றிமற்
றின்பமேயலதேதமங்கில்லையே
160 மேவுகின்றவிலங்குவிலங்குகள்
காவலென்பகடிமதிற்காவலே
யோவில்வன்சிறையுற்றபுனற்சிறை
தேவர்கோன்புகழ்தென்னவனாடெலாம்
161 வங்கவாரிதிசூழ்கின்றவையக
மெங்கணும்பகையின்றியிருத்தலாற்
றுங்கமேவுவெஞ்சூரருந்தோன்றிலர்
பங்கமேய்பண்ணைப்பாண்டிநன்னாடெலாம்
வேறு
162 கண்டவளவான்மிகுகலைப்பொருளினாலும்
வண்டவளநாயகிவழுத்தரிடதென்றாற்
கொண்டவளவில்புகழ்குலச்செழியராளு
மண்டவளநாட்டணியையாரறையவல்லார்
திருநாட்டுச் சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 162
*****
திருநகரச் சருக்கம்
163 ஆவணத்தணிதிகழலங்கனாற்றுபூங்
காவணங்கற்பகக்காவினீழல் செய்
தீவணமிலங்குசெஞ்சடிலசேகரன்
பூவணத்தணிசிலபுகலுவாமரோ
வேறு
164 நீடுதிரைக்கடலாடைநிலவேந்தர் நேரிழையார் நெருங்க வெங்குஞ்
சூடகக்கைச்சுரர்மடவார்துணைவரொடும் விமானத்திற்றுவன்றுமூதூ
ரேடலர்தாரிட்டருச்சித்திந்திரன் வந்தனைபுரியுமெழில்கொண்மூதூர்
மாடமலிமறுகுதிகழ்வளமைசாறமிழ்ச் சங்கம் வளருமூதூர்
165 தேவர்களுந்திசை முகனுந் திருமாலுந்திசை யோருஞ் செங்கை கூப்ப
மேவுதிருநடராசர் மீனவன் றன் விழிகளிப்பவெள்ளிமன்றுட்
டாவின்மலாப்பதமாறித்தாண்டவஞ் செய்தருள்கின்றதருமமூதூர்
மூவுலகும் புகழ்மதுரைமிகவிளங்குநிலமகடன் முகமே போல
166 அன்னதிருப்பதிக்கங்கிதிக்கினில் யோசனைக்கப்பாலமர்ந்து தோன்றுஞ்
சின்மயமாஞ் சிவலிங்கஞ் செங்கதிர் வெய்யோன் பூசை செய்யவைகு
மன்னுநவமணித்தேரூர் மறுகு தொறுமாளிகை சூளிகைநெருங்கும்
பொன்மதில்சூழாலயஞ்சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்
வேறு
167 அரியயன்முநிவரயின்முகக் குலிசத்தமரர் கோனளகையம்பதியான்
பரவருமிருள்கால்சீத்திடத்தோன்றும்பல்கதிர்ப்பரிதிவானவன்சேர்
தருணநல்லமுதகிரணசந்திரனற்றானவரானவரானோர்
திருமகடினமுமருவிடத்திகழுந் தென்றிருப்பூவணநகரம்
168 மேவியசடிலம் வெண்ணிலாவெறிப்பவிடையுகந்தேறிடும்விமல
னாவலர்புகழ்நான்மாடநீள்கூடனாயகனந்திடுயெம்பெருமான்
பூவுலகேத்தும் பொன்னனையாடன்பொருவருமனைவருகமலச்
சேவடிமணமெண்டிசாமுகம்வீசுந்தென்றிருப்பூவணநகரம்
169 பகவலன்பூசைபடைத்திடுபலனோ பண்ணவர்பண்ணுநற்றவமோ
இகம்பரம்வீடுமும்மையுமுயிர்கட்கினிதருளெம்பிரானருளோ
மிகும்புகழ்சாலுமிவற்றுள் யாதென்று விரித்திடற்கரியதாய் விளங்குஞ்
சிகரகோபுரங்கடிகழ்ந்து சேணோங்குந் தென்றிருப்பூவணநகரம்
வேறு
170 தொல்லைமாபுகழ்துன்றுஞ்சுராதியர்க்
கெல்லையில்லநலின்பமளித்திடு
மல்லலோங்கிவளர்ந்திடுமந்திரஞ்
செல்வமல்கிய தென்றிருப்பூவணம்
171 குன்றமன்னநற்கொங்கைசுமந்துநேர்
மின்றயங்கிடைமின்னனையாளுடன்
கன்றுமான்கரமேந்திய கண்ணுத
றென்றமிழ் பயிலுந்திருப்பூவணம்
172 அங்கண்வானத்தகடுகிழிபட
மங்குறோய்மணிமாடத்துங்கூடத்தும்
பொங்கரோங்கும் பொழில்களிடத்தும்வெண்
டிங்கண்மேவுறுந் தென்றிருப்பூவணம்
173 பொற்பதந்தனைப்பூசுரர்க்கீதலாற்
சொற்பதங்கடந்தோங்கியசூழ்ச்சியாற்
கற்பகத்தைவளர்த்திடுகாட்சியாற்
சிற்பரன்னிகருந்திருப்பூவணம்
174 எந்தையின்னருண்மேனிகொண்டெய்தலாற்
புந்திகொண்டதளித்திடும் பொற்பினாற்
கந்தமேவுங்கடாம்பொழியுங்கவுட்
சிந்துரந்நிகருந்திருப்பூவணம்
175 ஏய்ந்தவங்கணனங்கணியைதலால்
வாய்ந்தபொய்கையிடத்தில் வளர்தலாற்
போந்தவாறுமுகந்தருபொற்பினாற்
சேந்தன்போன்றது தென்றிருப்பூவணம்
176 பொங்குமாமலர்ப்பூங்கொடிமேவலாற்
சங்கமோங்கத்தடக்கை தரித்தலா
லெங்கணாதனிடத்திலிருத்தலாற்
செங்கண்மானிகருந்திருப்பூவணம்
177 இசையநான்மறையின்னிசை பாடலாற்
கசடறுங்கலைமங்கைகலத்தலா
னசையுடனன்னதானநணுகலாற்
றிசைமுகன்னிகருந்திருப்பூவணம்
178 புந்திகொள்ளும் பொற்பூவிற்பொருந்தலா
லந்தமற்றசெல்வங்களளித்தலால்
வந்தெஞ்ஞான்றுநன்மாலுடன் மேவலாற்
செந்திருந்நிகருந்திருப்பூவணம்
179 நல்லெழில்வளர்நான்முகனண்ணலா
லெல்லையில்கலையாவுமியம்பலா
லல்லிசேர் தவளாம்புயபீடிகைச்
செல்விபோன்றது தென்றிருப்பூவணம்
வேறு
180 ஆரணநான்கு மங்கமோராறுமளவிடற்கரியபேரொளியாய்
நாரணனவனுநாற்றிசைமுகனுங்கனவினுநண்ணுதற்கொண்ணாக்
காரணமாயக்காரணவுருவாங்கண்ணுதலன்றுகொண்டருளும்
பூரணஞானச்சுடர்ப்பிழம்பெனவேபொன்மதின் மன்னியதன்றே
181 எண்டருசரியையாதியோர் பயின்றங்கிருத்தலாலிறைபதம்போலும்
பண்டருவேதம்பாடிடுபரிவாற்பன்னுநான்மறையையும்போலுந்
தெண்டிரைக்கடற்பாற்றிசைகளோடுதலாற்றிசைமுகன்றன்னையுஞ் சிவர்ங்
கொண்டிடுமண்டகோளகைக்கப்பாற்குலவுபொற்கோபுரவாயில்
182 பல்லுயிரெல்லாம் பரிவுறவோங்கப் படைத்தலாற்பங்கயனொக்குஞ்
செல்வமோங்கிடவேதினந்தொறும் வளர்க்குந் திறத்தினாற் செங்கண்மாலொக்குந்
தொல்பவமனைத்துந்துடைத்தலான் மறைக்குஞ்சூழ்ச்சியா லருள்புரிதொடர்பாற்
சொல்லரும்புகழ்சேருருத்திரன் மகேசன் றொழிலறுசதாசிவனொக்கும்
183 வேலொடுசெறிந்தமிகுபொறிமயிற்கண் விரவலால்வேலனையொக்குங்
கோலமேவியநற்சூல மேல்கொண்டுகுலாவலாற் கொற்றவையொக்குங்
சாலவும் படைகடாங்கலான்மிக்கசமர் பொருநிருதரையொக்கு
மேலுநன்னிதியமீட்டலான்மன்னுமிருநிதிக்கிழவனை யொக்கும்
184 விரவுவானிமிர்ந்துமிக்கபொன்முடிகண்மேவலான்மேருவையொக்கும்
பரவமேற்கண்கள்படைத்தலாலணிசேர்பாகசாதனன்றனையொக்கும்
பொருவிகந்தோங்கிப்பூந்தனம்பொருந்துபொற்பினாற் பூமகளொக்கும்
கருதியேகாண்டற்கருமையான்ஞானக்கண்ணுதலண்ணலையொக்கும்
185 நாடுறயார்க்குநனிசிறந்தோங்கு நற்பொறியுடுத்தபொற்புரிசை
மாடுறுசீரார்வாரி சேர்கின்றவண்மையையாதெனவகுப்பா
நீடுபல்லுலகைநிரப்பியுன்னதமாய் நேமிமால்வரையதன்பாங்கர்ப்
பீடுறமன்னும் பெரும்புறக் கடல்போற்பிறங்கு பேரகழிசூழ்ந்திலகும்
186 தண்டரளங்கள்வெண்டிரைகொழிக்குந்தடங்கரைமருங்கினிலுடுத்த
மண்டியசெல்வப்பெரும்புனற் சீரார்வாரியின் வானவருலகங்
கண்டவருள்ளங்களிமிகத்தூங்கக்காண்டகு மாட்சியின்மிகுமா
லண்டர்நாடதனினண்டர்நாடடைந்ததென்பதுமற்புதமாமோ
187 பள்ளமார்பயத்தாற் பயந்தரும்பரிகப் பாங்குறுபித்திகைப்பளிக்கு
வெள்ளிவான்றகட்டின்விளங்கும் வெண்டாளம் விரிசுடர் வெண்ணிலாவெறிப்பத்
தள்ளருபெருஞ்சீர்த்தபநியப்புரிசைதன்னிறந்தான்றணந்ததனால்
வள்ளல்சேர்கயிலைமால்வரையென வே மன்னிய தென்னலாமாதோ
188 கோலமாரகழிற்குளித்திடுகுன்றக்குஞ் சரந்தனைத்திமிங்கலந்தான்
சாலும் வெம்பசிதான்றணிந்திடவிழுங்கித் தன்னகட்டடக்கிடுந்தன்மை
வேலைகளேழும்விரவியொன்றாகிமேவிடுமந்தநான்முகுந்தன்
சேலுருவாகிச்செறிந்தபல்லண்டஞ்சிறுசெலுவடக்கியபோலும்
189 தக்கசீர்க்கப்பறரங்கமாங்கரத்தாற்றண்டரளஞ்சொரிந்தளப்பத்
தொக்கபொற்புரிசைசூழ்ந்திடுஞாயில் சுற்றியபித்திகைதனக்குப்
பக்கமோடிடுநற்பாரெலாமடங்கப்பதித்திடும் பளிங்கின்மேற்பதித்த
மிக்கநல்வயிரவெண்ணிலாக்கற்றை வெண்படாம்போர்த்தது போலும்
190 அன்னபேரகழிகன்னழகொழுகு மங்கண்வானத்துயர்ந்தோங்கு
மன்னியதேரூர் மணிமறுகின்பால்வயிரவான்றூணிரைநிறுவித்
துன்னுசெம்பவளப்போதிகை தாங்குஞ்சுடர் மரகதத்துலாஞ்சேர்த்திப்
பொன்மதிலமைத்துப்புலமணியழுத்திப்பொற்புறச்சித்திரம் பொறித்து
191 தகுமொளிபரப்புஞ்சந்திரகாந்தந்தரையெலாஞ்சீர்பெறச் சமைத்துப்
புகழ்பெறமிகு செம்பொன்னினால்வேய்ந்துபொற்சிகரம்பலவமைத்துத்
திகழ்பெறுகமலபீடிகைமருவுதிருமணிவாயில்கடோறு
மகிழ்தருமாடகூடமண்டபங்கண்மாளிகைசூளிகை நெருங்கும்
192 அன்னமென்னடையா ராடுமாடரங்குமணிமணிக்கோபுரநிரையு
மன்னவர்திறைகளளக்குமண்டபமும் வண்டமிழ்க்கழகமண்டபமு
முன்னையாரணங்கண்முழங்கு மண்டபமும் முரசதிருமண்டபமுந்
தன்னிகர்தருநற்றான மண்டபமுஞ் சார்ந்தபல்வீதியு நெருங்கும்
193 மந்திரமொடுநற்றந்திரம்பயிலும் வைதிகசைவநன்மடமுஞ்
சந்ததம் பயிலுஞ்சதுர்மறைமுனிவோர் சதுக்கமும் வணிகர்சந்திகளுஞ்
சிந்தையின் மகிழ்ச்சி யோங்குபல்பண்டஞ்சேர்ந்திடுங்கோலமார்தெருவு
மந்தமில்குடிகளமர்ந்து வாழ்கின்ற வாவணமெங்கணுநெருங்கும்
வேறு
194 ஆனவைதிகசைவமுமண்ணறன்
பான்மைசேர்ந்தபஞ்சாக்கரமும்பயின்
ஞானமாதவர்நற்கரத்தேந்திய
தானமுந்தவமுந்தழைத்தோங்குமால்
195 நல்லதும்புருநாரதரின்னிசை
வல்லவீணையினோசையுமைம்பலன்
வெல்லுமாதவர்வேதத்தினோசையுஞ்
சொல்லுமாதர்தந்துந்துபியோசையும்
196 வம்பறாநன்மணிமுழவோசையும்
பம்பியேயெழும்பல்லியவோசையுஞ்
செம்பொன்மாமணித்தேரினதோசையுங்
கம்பமேவுகடாக்களிறோசையும்
197 விந்துநாதம்விளங்கியவோசையுஞ்
சந்தநான்மறைதாமுழங்கோசையு
மிந்திராதியரேத்திடுமோசையு
மந்தவார்கலியோசையடக்குமால்
198 ஓங்குபூங்கமுகும்முயர்வாழையுந்
தூங்குபைங்குலைத்தெங்குந்துருக்கமுங்
கோங்குமாரமுங்குக்குலுவும் மனந்
தாங்குசெஞ்சந்தனமுஞ் சரணமும்
199 புன்னை சம்பகம்பூதவம்பூங்கழை
மன்னுசூதமந்தாரம் வருக்கைமேற்
பன்னுகின்றபராரை மரங்களுந்
துன்னுதண்டலைசூழ்ந்திடுமெங்கணும்
200 பற்பகறொறும்பாங்கினிலோங்கிய
நற்பொழிறிகழ்நண்ணியபூவணன்
பொற்பதத்திற் புரந்தரன்போற்றிடுங்
கற்பகச் செழுங்காவுமணக்குமால்
201 கோடரங்கள் குயில்விளையாடலே
நீடரங்கினிலாவிளையாடுவ
மாடமேல்விளையாடுவமஞ்ஞைக
ளாடுநீர்விளையாடுவவன்னங்கள்
202 வாவிநீர்விளையாடுவர்மாதர்கள்
காவிமேல்விளையாடுங்கயற்கண்கள்
பாவின்மேல்விளையாடிடும்பண்ணெலாம்
பூவின் மேல்விளையாடுவள்பூமகள்
வேறு
203 துறுமலர்பொதுளுஞ்சீர்ச்சோலைகண்மேலெங்கு
நிறைபுனலுறுசங்கநீணிலவொளிதங்கு
மறுவறுபுகழ்மன்னும் வாவிகடொறுமேவு
மறுபதமிசைபாடுமாயிதழரவிந்தம்
204 பங்கமதறநாளும் பாயுறைவாய்நீத்தந்
தங்கியபுதுவாசச்சததளமதுமாந்திப்
பொங்களின்பண்பாடும் புண்டரிகக்கோயின்
மங்கையை நிகர்மாதர்மங்கலமிடமெங்கும்
205 பிறைநுதலதுவொக்கும் பிடிநடையதுவொக்குஞ்
சிறுகிடைதுடியொக்குந்திரண்முலைமலையொக்கும்
வெறிமுலைமுகையொக்கு மென்னகையதுநீண்ட
கறைகெழுவேலொக்குங் கண்ணிணையது மாதோ
206 முயலுறுமுதயஞ்சேர்முழுமதிமுகமொக்குங்
குயில்குழலதுவொக்குங் கோகிலமொழியொக்கு
மயிலியலதுவொக்கும் வாய்பவளமதொக்கும்
பயிலரவது வொக்கும் பரவரூமகலல்குல்
207 தங்கியதிருமால்கைச்சங்கதுகளமொக்கும்
பைங்கழையதுவொக்கும்பரவுறுபசுந்தோள்க
ளங்கைகள் செங்காந்தளம்மலரதுவொக்குஞ்
செங்கமலமதொக்குஞ் சேவடியதுதானே
வேறு
208 செல்வந்தான்விளையாடுமனைகளேசேய்கடாம்விளையாடம்மனைகளே
மல்குமம்மனைவாயினற்கோலமேமாதர்வாயின்மணக்குந்தக்கோலமே
பல்பெருங்கதைபன்னுந்தமிழ்களேபயிலிடங்களும் பன்னுந்தமிழ்களே
நல்லசெல்வங்கணாடொறுநந்துமேநல்லதல்லது நாடொறுநந்துமே
209 தலமலிந்துவிளங்குந்தடங்களே தங்குவாசந்தரும்பூந்தடங்களே
யலகில்வாசமுநிவர்மடங்களேயடைந்தவர்க்ககருளன்னமடங்களே
கொலைபுரிந்திடுங்கும்பகடங்களேகுலாவுமெங்குநிலாவுகடங்களே
முலைமுகந்தருமுத்தின்படங்களே மொழியுமும்பன்முகமும்படங்களே
வேறு
210 அங்கண்மிகவோங்குபுகழந்நகரிதன்னுட்
டுங்கநெடுமாலைநிகர்சொல்லுமிளைஞோருஞ்
செங்கமலமங்கைநிகர்திங்கணுதலாரு
மங்கலவிதத்துடன்மணத்தொழின்முடிப்பார்
211 மோகமிகுமாடமணிமுன்றின்முகமெங்கும்
பூகமொடுபூங்கதலிபொற்பினடுகிற்பார்
நாகரிகமாலிகைகணாலவணிசெய்வார்
மாகமுயர்மாமகரதோரணநிறுப்பார்
212 மேலுறவிதானமணிமேவுறவிரிப்பார்
கோலமணிமன்னுநிறைகும்பநடுவைப்பார்
மாலிலகுமட்டமணமங்கலநிரைப்பார்
பாலிகைகளெண்டிசைமுகத்திடைபதிப்பார்
213 கண்டவர்மனங்களிகொள்காமனனையாருங்
கெண்டைதனையுண்டுவளர்கேழ்கிளர்கண்ணாருங்
கொண்டசதியோடுமகிழ்கூர்ந்துகுலவிச்சேர்
பண்டருவிபஞ்சியிசைபாடிநடமேய்வார்
214 குழையிடறுகன்னியர்கள் கோலமதனன்னார்
மழையகடுகிழியவெழுமாமணிபதித்த
வெழுநிலைநன்மாடமிசையின்புறவிருந்தே
கெழுமிமிகுகின்னரநலொழுகுமிசைகேட்பார்
215 பண்களினொடின்னிசைபயிற்றியிடுகிற்பார்
மண்கணெரியச்சகடவையமதுகைப்பார்
விண்கணுறுகோபுரநல்வீதிகள் விளங்கக்
கண்களிகள்கூரவிடுகாவணநிரைப்பார்
216 திங்கணுதலிற்றிலகமும்புனைதல்செய்வார்
பொங்குதலிணங்கவணிபொற்பினணிகிற்பார்
தங்குகலவைத்தொகுதிதன்னொடுகுழைத்துக்
குங்குமசுகந்தமுலைகொண்டணிதல்செய்வார்
217 மற்றுநிகரற்றிலகுமாடமிசைமுன்றிற்
சிற்றில்களிழைத்துவிளையாடியிடுசேய்க
ளற்றதிருமாமணியனைத்தினையும்வாரிக்
குற்றமெனமுச்சிகொடுகுப்பைகள் கொழிப்பார்
218 கோதைகொடுகோலமிகுகோதையணிசெய்வார்
காதைகளளந்துசெவிகாதலினிறைப்பார்
போதுநியமஞ்செய்துபோதுகள்கழிப்பார்
மாதர்களுமைந்தர்களுமாதருடன்வாழ்வார்
219 விழைவுறுநன்மாடமதின்மிக்கிலகுதீபம்
பழகியசெல்வத்தினுயர்பரிசனநிரைப்பா
ரிழையிழைகொழுகுபுகழிட்டிடையினார்தங்
குழலின்மிகவகிலிடுகொழும்புகைநிறைப்பார்
220 மைக்கரியெனப்பிளிறுமால்களிறிணைப்பார்
தக்கதகரைப்பொருசமர்த்தொழில்விளைப்பார்
மிக்கமணிகுண்டலம்விளங்குகதிர்வீசக்
குக்குடமிசைத்துமிகுகுரவையிடுகிற்பார்
221 விஞ்சியவிண்முகடுதொடுமேருமுலைகண்டே
யஞ்சுமிடைசேர்ந்தமடவன்னநடைமின்னார்
மஞ்சரியின்வண்டுமதுவுண்டினிசைபாடக்
கொஞ்சுகிளிமழலையொடுகுயிலின்மொழிபயில்வார்
222 மருவுமணிமன்றுதொறுமன்னவர்கள் சேர்வர்
தரியலர்கள்வாயிலிடைதகுதிறையளப்ப
ரரிவையாரங்குதொறுமாடல்பயில்கிற்பார்
திருமறுகுதொறுமினியசிலதியர்கடிரிவார்
223 மங்குலைநிகர்க்குமிவர்வார்குழல்களென்பார்
வெங்கடுவிடத்தைநிகர்மேவும்விழியென்பார்
செங்கிடையையொக்குமிவர்செய்யவிதழென்பார்
பங்கயமதொக்குமிவர்பாதமலரென்பார்
224 வெய்யமணிமேவுமுலைமேருமலையென்பார்
கைகளிவையல்லதிகழ்காந்தண்மலரென்பார்
நையுமிடையன்றிமூதுநற்றுடியதென்பார்
பொய்யில்புறவடிபுதியபுத்தகமிதென்பார்
225 இன்னபரிசெங்கணுமியைந்தமுறையாலே
பொன்னகருநாணமிகுபொற்புடனிலங்குந்
துன்னுபொழில்வைகைநதிசூழ்தரவிளங்கு
மந்நகரிதன்னணியையாரறையவல்லாார்
226 சுந்தரமிகுந்திடுசுராதியர்விரும்பு
மந்தமில்சிறப்பினளகாபுரியிதென்னச்
சந்ததமுமிம்முறைதயங்குகவின்மூதூ
ரிந்திரசெல்வத்துடனியைந்திடுமெஞான்றும்
வேறு
227 பங்கமற்றமறைவழுத்துபானுகம்பனாயிரஞ்
சங்கவாயினாலுமித்தலத்துமேன்மைதானுரைத்
தங்கையாயிரத்திரட்டிகொண்டுதீட்டவமைகிலா
திங்கொர்நாவில்யான்விரித்தெடுத்தியம்பலாகுமோ
திருநகரச்சருக்க முற்றியது
ஆகச்செய்யுள் 228
*****
பாயிரம்
228 செங்கதிர்வெய்யோன்பூசைசெய்தவாறுந் திகழ்திரணாசனன்வீடுசேர்ந்தவாறும்
பொங்குமணிகன்னிகைநீர்பொருந்துமாறும்புகலருந்துன்மனன்கதியிற்புக்கவாறுந்
தங்குதருமஞ்ஞன் முத்திசார்ந்தவாறுந் தன்னிகருற்பலாங்கிபதிசார்ந்தவாறும்
பங்கமில்பாற்கரபுரப்பேர்படைத்தவாறும் பன்னுமெலாப்பவங்களையும்பாற்றுமாறும்
229 செங்கமலன்சாபமுற்றுந்தணந்தவாறுந் திருமகடன்சாபந்தான்றீர்ந்தவாறு
மங்கையவதாரஞ்செய்தமர்ந்தவாறும்வார்சடையோனவளைமணம்புணர்ந்தவாறுந்
தங்கியதக்கன்வேள்விதகர்த்தவாறுஞ் சங்கரிபூவணத்தில்வந்தவாறுந்தீர்த்தங்
கொங்கணிசுச்சோதிதானாடுமாறுங் கோதில்பிதிர்களைமுத்திசேர்த்தவாறும்
230 அருளுடனே தீர்த்தங்களாடுமாறுமருங்கலியின்வலியை நளனகற்றுமாறுந்
திருவிழாவணிபெறச்செய்வித்தவாறுஞ் சிதம்பரநல்லுபதேசஞ்செய்தவாறுந்
தருமுலகிற்சகாத்தமாயிரத்தைஞ்ஞூறு தங்குநாற்பான்மூன்றுதந்தவாண்டிற்
பொருவருநற்புலவோர் சொற்புலமைகாட்டப் புட்பவனபுராணமெனப் புகலலுற்றேன்
பாயிரமுற்றியது
ஆகச் செய்யுள் 230
*****