திருப்பூவணப் புராணம் – பகுதி – (11)
கி.காளைராசன்
முதலாவது
சூரியன் பூசனைச்சருக்கம்
231 ஓசைகொளித்தலத்துலகியாவையும்
வீசியகனையிருள்விழுங்குகின்றவான்
றேசுடைத்தினகரன்சிவலிங்கந்தனைப்
பூசனைபுரிந்ததுபுகலுவாமரோ
232 பன்னருமாதவம்படிவமாகியே
மன்னியசவுநகமகிழ்ந்துகேண்மியா
வென்னலுமன்னவனியம்பருந்தவந்
துன்னுநற்சூதனைத்துதித்தன்மேயினான்
233 உன்றனக்கிணையிலையுலகமூன்றினு
முன்றனக்கிணையிலையுரைக்குங்காலையி
லுன்றனக்கிணையுனையுரைக்குமாதலா
லுன்றனக்கொன்றுளதுரைசெய்வாமரோ
234 அங்கண்வானகத்திருளகற்றுமாரழற்
பொங்குவெங்கதிரவன்பூசையாற்றவே
சங்கரன்விரும்பியேதானிலிங்கமா
வங்கவணடைந்தவாறருளுநீர்மையால்
235 ஒன்றியகலையெலாமோதியேயுணர்
வென்றிமேவியபுகழ்வியாதன்றன்னரு
டுன்றியவருந்தவச்சூதமாதவ
வின்றெமக்குரையெனவியம்பினானரோ
வேறு
236 கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்
237 அந்தநல்வனத்தினாதிகாலத்திலரியயன்முதற்கடவுளர்கள்
வந்துபோற்றிசைக்குமாண்பினதாகிமலைமகள்வளர்க்கும்வான்றருவாய்ப்
புந்திகொள்பாரிசாதமென்றொருபேர்புனைந்துநீங்காதுபொங்கொளியா
யிந்திராதியர்சேரெண்டிசாமுகத்துமெங்கணும்பரந்துமிக்கிலகும்
238 கெழுதருநன்னீர்க்கிருதமாலையெனுங் கேழ்கிளர்வைகையங்கரைமேன்
மொழியுமத்தருவின் மூலத்தினோங்கி முளைத்தெழுசிவலிங்கவடிவாய்
வழிபடுமடியார்மனங்கொளநினைந்தவரந்தனைநினைந்தருள் புரிந்து
விழைவினெஞ்ஞான்றும் வீற்றினிதிருப்பன்விண்ணவன்கண்ணுதற்பெருமான்
239 செங்கண்மால்விடையூர்சிவபிரான்றனக்குத்தெக்கிணதிக்கதிற்றிகழந்து
மங்கலவிளைவான்மறைமுறைவழாதுமன்னியவத்தலந்தன்னி
லங்கண்மாஞாலமெங்கணும்புகழுமழகியமின்னனையாகி
யெங்கணாயகிதானிருந்தவம்புரிந்தே யியைந்திடுமியல்பினெஞ்ஞான்றும்
240 அன்னதொல்சிறப்பி னருந்தவமிழைக்குமந்தநற்பொற்கொடியான
கன்னிதன்முன்னேகருங்கடற்றோன் றுங்கதிர்க்குலம்பரப்புமாதவன்றான்
பன்னுமான்மாக்கள்பாவத்தை யொறுப்பான்பண்புறத்திருமணிகன்னி
யென்னுநற்றீர்த்தமேழுலகேத்த வெழில் பெறத் தொட்ட தொன்றுண்டால்
241 இந்தநற்றீர்த்தந்தன்னையோரொருகாலிசைப்பவருறுபவமொழிவர்
வந்ததிற்படிந்தமாத்திரையதனின்வருபிறப்பனைத்தையுமாற்றிச்
சந்ததம்பொருந்துசச்சிதாநந்தத்தடங்கடற்றடத்தினிற்படிந்தே
யந்தமாதியிலாவருளுடன்கலந்தேயார்வமாமுத்தியைச்சேர்வார்
242 சித்திரவலங்காரத்துடனுயர்வான்சேருமக்கற்பகமூலத்
துத்தமதவங்கட்குறுதவப்பலங்க ளுதவுமெம்பிரானுவந்திருந்தே
யத்தருமலரா லருச்சனைபுரியுமன்பருக்காயிடையருளால்
வித்தகமிகுநல்வேண்டுருக்கொண்டுவேண்டினார்வேண்டியதளிப்பான்
243 அன்னதொல்புட்பவனத்ததுநாப்ப ணதிமனோகரமிகவுடைத்தா
யுன்னதமொருநான்கரையதாய்ச்சுற்றும்பாதயோசனையதையுடைத்தாய்ப்
பன்னுமூவுலகும்பாரிசாதமெனப்பகர்வதாய்ப்பணைபலவுடைத்தாய்
மன்னியபறவைவிலங்குகடம்முள்வருபகையொழிந்திடவைகும்
244 அத்தருநிழற்கீழமரிலிங்கத்தினருளினாலாயிரங்கதிரோ
னித்தமாய்த்தனாதுபதம்பெறுகிற்பா னினைந்துநெஞ்சகங்கொண்டே
சித்திரைத்திங்கட்சித்திரைத்தினத்திற்றேசுறப்பூசனை புரிவான்
சுத்தநீராடித் தூயநீறணிந்து துலங்குகண்டிகைமணிபூண்டு
245 பொங்குலகேத்தும் பூர்வலிங்கத்திற் பொருந்தவாலுகங்கொடுதிரட்டி
யங்கையினொன்றினமைத்ததினிகழ்த்துமாறு போலங்கணன்றன்னைக்
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரமுங்கதிர்த்திரணிலவு கான்றொளிருந்
திங்களங்கொழுந்துஞ்செங்கண்வாளரவுந்திருமுகமண்டலமைந்தும்
246 கண்கண்மூவைந்துங் கரங்களீரைந்துங் கவின்றிகழ்படைக்கலங்களுநஞ்
சுண்டிருள்பரந்தகண்டமும்பகுவாயுற்ற நற்பன்னகாபரணங்
கொண்டதிண்டோளுங்கோலமார்பகமுங்குலவுசங்கக்குழைக்காதும்
புண்டரிகத்தினுரிபுனையரையும்பொருந்திய பொற்பதாம்புயமும்
247 சுத்தமாமிதயகமலத்தினின்றுஞ்சுழுமுனாமார்க்கத்தினாலே
சித்தநேர்நிறுவித்துவாதசாந்தத்திற்சேர்ந்துறுசிறந்தமந்திரத்தா
லத்தகுபிராணவாயுவால்வாங்கியலர்தருகரத்தினிலமைத்துச்
சத்தியோடுரியசதாசிவமூர்த்திதன்னையே நன்குறநிசித்து
248 வண்ணமேவியநன்மதுமலர்தன்னைவண்கரங்கொண்டுபின்கூப்பி
யுண்ணிகழ்சமனையுன்மனைக்கப்பாலோங்கியே நிட்களமாகித்
தண்ணிலாவெறிக்குஞ்சந்திரரநேகர்தந்தநூறாயிரவொளிசே
ரெண்ணருஞானவுருவமாஞ்சிவனையிலிங்கமத்தியத்தினிலிருத்தி
249 தாபனஞ்செய்தபின்றகுசந்நிதானஞ்சந் நிரோதனந்தந்து
மாபரன்னறக்குச்சுவாகதார்க்கியமும்வழங்கியே காளகன்னிகையுஞ்
சோபனவிலிங்கமுத்திரையுடனேதுலங்குகைகூப்புமுத்திரையுந்
தூபமுமலிங்குதீபமுங்கொடுத்துச்சுகந்தநன்மஞ்சனமாட்டி
250 திலந்தருதயிலந்தேனுவைந்துவந்து சிந்தைகொள்கின்ற வைந்தமுத
நலந்தருமான்பானண்ணிடுந்ததிநெய்நன்மதுகன்னலின்சாறு
பலங்குளிர்தெங்குசந்தனக்குழம்புபத்தியினாட்டி நீராட்டித்
துலங்கியவைகைத்துறையினீர்சுமந்தசுரிமுகச்சங்கநீராட்டி
251 மகிழ்தருதிருவொற்றாடையுஞ் சாத்திமருவுசெம்பட்டுடன் மன்னு
மகமகிழ்கலவையாரமேலணிந்தேயரவகங்கணங்கரத்தமைத்துப்
பகர்நவமணிகள்படர்வெயிற்கிரணம்பரப்புமாபரணமுமணிந்து
திகழ்மணிமகுடஞ்செங்கதிரெறிப்பத்திருமுடியிலங்குறச் சேர்த்தி
252 பரவிடுநைவேத்தியம்பலவளித்துப் பாத்தியாசமனமுங்கொடுத்துத்
திருமிகுதூபதீபமுங்காட்டித்திருவெழுத்தஞ்சையுஞ்செபித்தாங்
குரியநற்பூசைப்பலனரற்குதவியோரிருகாலமுஞ்செய்து
குருமலர்கொண்டுபணிந்தெதிர்முக்காற்கும்பிட்டுத்தட்டமுமிட்டு
253 நிருத்தனுண்மகிழநிருத்தமுஞ் செய்து நீடுநற்கனவதிலின்னுந்
திருத்தகுமயன்மாறேடியுங்காணாச்சிவலிங்கதரிசனங்காணுஉ
வருத்தியாற்கண்களருவிநீர்பொழியவாநந்தபரவசனாகித்
தரித்திடுஞ் சென்னிக்கரத்தினனாகிச்சதுர்மறைத்துதிபடித்தனனால்
வேறு
254 சுகரன்புடையானேதுதிசொல்வார்புடையானே
யிகல்சார்படையானேகுறளெழுசூழ்படையானே
திகழ்கண்படையானேயுறுசெனனம்படையானே
புகழ்மன்றுடையானேபொருபுலித்தோலுடையானே
255 அண்டங்கரியானேயரியயர்கட்கரியானே
விண்டங்கொளியானேசதுர்வேதத்தொளியானே
பண்டங்கிசையானேயுறுபவமொன்றிசையானே
கண்டங்கரியானேநுதற்கண்டங்கரியானே
256 மேவும் பொருவில்லாய்மகமேருப்பொருவில்லாய்
சேவின்றுவசத்தாயருடினமொன்றுவசத்தா
யோவில்லுயிர்க்குயிராய்திருவுருவம்பரமுயிராய்
தாவில்சிவபதத்தாய்திகழ்தருதாமரைப்பதத்தாய்
257 கதிநல்குசங்கரனேயுலகவைநீக்குசங்கரனே
விதிநல்குகங்கையனேசடைமிசைதாங்குகங்கையனே
கதநல்குமங்கணனேயுமிழ்கடுநாககங்கணனே
திதனானவங்கியனேதிகழ்திருமேனியங்கியனே
258 மனமொன்றுமெம்மானேமழுமானேந்துமெம்மானே
புனல்சேர்சடையானேபுவிபுகழ்மாசடையானே
சினமால்விடையானேயடிசேராவிடையானே
கனலேந்தினகரனேயெனத்துதித்தான்றினகரனே
வேறு
259 அன்னதோர்காலைதன்னிலவ்விலிங்கத்துநாப்பண்
கன்னியாயுலகமீன்றகௌரிமெய்கலந்துதோன்றச்
சென்னியிற்றிகழ்ந்தகற்றைச் செஞ்சடாமகுடவேணி
மன்னியமதிக்கொழுந்தும்வாளராவிலங்குமார்பும்
260 அங்கண்மாஞாலங்காக்குமபயமும்வரதமுஞ்சேர்
பொங்கொளிதிசைவிளங்கும்போர்மழுப்படையுமானும்
வங்கவாரிதியினஞ்சமருவுகந்தரமுமேனி
தங்குவெண்ணீறுமிக்குத் தயங்குகண்டிகைநற்றாரும்
261 கோடிசூரியருங்கோடிகுளிர்மதித்திரளுமொன்றாய்
நீடியவொளியும் வேங்கைநிகழ்பொறியதளுந்தோன்ற
மாடுறுமயன்மால்விண்ணோர்மாதவர்முநிவர்போற்றத்
தேடரும்பொருளையந்தத்தினகரன்றெரியக்கண்டான்
262 நித்தமாயருள்சுரக்குநிருமாலன்றன்னைக்காணுஉ
வத்திரமின்றியானேயதிபதியாகவேண்டுஞ்
சுத்தமாமென துமிக்கதொல்லிரும்பதத்திற்கென்னாப்
பத்தியாற்சததளச்செம்பங்கயபதத்தில்வீழ்ந்தான்
263 பதந்தனில்வீழ்ந்திறைஞ்சும்பரிதிவானவனைநோக்கிக்
கதங்கொடுகாமற்காய்ந்தகண்ணுதல்யாருங்கேட்ப
விதங்கொளீரேழ்பொழிற்குமிக்கிறையாயிலங்கி
வதிந்துநீவாழ்நாள்காறும்வாழ்கெனவரங்கொடுத்து
264 திக்கிலகொளிப்பரப்புந்தினகரகேளெமக்கிங்
கக்கினிகோணந்தன்னிலரும்பெருந்தீர்த்தமொன்ற
மிக்கபூமுகையவிழ்ந்து வெறிகமழ்தரவிளங்குந்
தக்கநின்னாமந்தன்னாற்சதுரமதாகத்தந்து
265 மலர்தலையுலகம் போற்றமணிகன்னியென்னுநாம
நிலையுறநிறுவிநாளுநீடொளியிலங்கக்காண்டி
குலவிடுநின்னாற்பூசைகொண்டுநல்லருளால்யாமு
மிலகினமித்தலத்திலென்று மிவ்விலிங்கந்தன்னில்
266 வீசியவிருள்கால்சீக்கும் வெஞ்சுடர்ப்பரிதிநின்றன்
பூசனைபுரிந்தமேலாம்புண்ணியபரிபாகத்தா
லாசைகூர்ந்தருளாலிந்தவணிகிளர்பாரிசாதத்
தேசுறுதிருநிழற்கீழ்ச்சேர்ந்துடன் றிகழாநின்றோம்
267 இச்சையாலுருவங்கொண்டேயிருக்கும் நம்மிலிங்கத்திற்குப்
பச்சிமதிக்கினோங்கும் பாரிசாதத்தின்மூல
நிச்சயமுறயாமென்று நிகழ்ந்தினிதிருத்தலாலே
யச்சுரதருமுன்செய்தவருந்தவம்யாதோவென்றான்
268 கருணைகூர்கனலிதெய்வகம்மியன்றனையழைத்து
விரிகடலுலகுக்கெல்லாமேதகுவிழைவுடைத்தாய்த்
திருமிகுகின்றசெம்பொற்சிகரநீள்கோயிலாக்கித்
தரைபுகழ்தீர்த்தமொன்று தன்னிகராகக்காண்டி
269 காண்டிநீயிருந்ததான கண்ணகன்ஞாலந்தன்னில்
வேண்டுபுமிகவுமேலாய்விளங்கிடவெந்தஞான்று
நீண்டகலிருவிசும்பினிறையணிகுறைபாடின்றிப்
பூண்டநின்பதத்திற்பின்னர்ப்போதியாலெனபுகன்று
270 பன்னரும்புவியின் மேலாம்பான்மைசேர்தானந்தன்னி
லுன்னருந்தவத்தின்பேற்றாலுத்தமோத்தமமித்தான
மன்னுமித்தலத்தின் யாவர்மருவியேமகிழ்வின்வாழ்வ
ரன்னவர்க்குண்டாமுத்தியென்பதற்கையமின்றால்
271 சந்ததம்விளங்கியாமித்தலந்தனிலிருத்தலாலே
வந்திவெண்வைகுவோர்க்குமருவுநம்மருளினாலே
யந்தமொன்றின்றிநாளுமறம்பொருளின்பம்வீடென்
றிந்தநால்வகையுமுண்டாமென்றனனெவர்க்கமேலோன்
272 பூதலத்திருள்விலங்கிப்பொங்குவெங்கதிர்பரப்பு
மாதவன்றனக்குநாதனருளுருவாகத்தோன்றி
மேதகுமந்திரத்துண்மிக்கமந்திரமாயுற்ற
வோதருமஞ்செழுத்தைவிதிப்படியுபதேசித்தான்
273 அவ்வுபதேசந்தன்னையங்கணனருளக்கேட்டுக் கவ்வையொன்றின்றிமிக்ககருத்தினையொருக்கிநேராய்ச்
செவ்விதினுணர்ந்து மேலாந்திருவருள்கண்ணாக்காணு
மிவ்விறையிருந்தவாறிங்கிப்பரிசெனத்தெளிந்து
274 வானந்தத்தருவின்மூலமருவிவெம்பரிதிவானோன்
ஞானந்தானிமூதென்றோதுநற்றிருவஞ்செழுத்தான்
மோனந்தானாகியன்பின்மோகித்துமுடியாவின்ப
வானந்தத்தழுந்தியொன்றாயற்புதமடைந்திருந்தான்
275 அருளுடன்கூடியொன்றாயானந்தத்தேனருந்தும்
பரிதிவானவனையெங்கோன்பங்கயச்செங்கைதன்னாற்
கருணையிற்பரிசித்தந்தக்கதிரவன்கண்டாக்காமுன்
றிருவருள்பிரகாசிக்குஞ்சிவலிங்கந்தனின் மறைந்தான்
276 தீதறப்பரிசிக்கின்றசிவகரவிசேடந்தன்னா
லாதரத்துற்ற நேயமதினின்றும்விழித்துப்பாரா
வோதுபுத்தேளிர்தம்மாலொருவராலறியவொண்ணா
நாதனைநேடிக்காணனற்றியானத்தினுற்றான்
277 நீடுமத்தியானநீங்கிநேரில்பஞ்சாக்கரத்தைப்
பீடுறவுபதேசங்கொள்பெருகொளிப்பரிதிப்புத்தேள்
வாடுநுண்ணிடைசேர்கின்றமங்கைபங்கொழித்த வெங்கோன்
கூடுமன்பினிலெடுத்துக் கூறியதகத்துக் கொண்டான்
வேறு
278 அந்தவாறருளினாலமைப்பனென வண்ணறன்றிருமுனண்ணுசீர்
சுந்தரம்பெறநிறைந் திலங்குகதிர்துன்றுதன்றனது செங்கையாற்
கந்தநீர்மருவவுந்துகாதலொடுகல்வியுற்பலசுகந்தநேர்
சந்தமேவுமரவீந்தமாகமிகுசதுரநன்கொடுசமைத்தரோ
279 நானமேவுநர்தமக்குநன்குமிக நண்ணநெஞ்சகமதெண்ணியே
யூனமில்கருணைஞானதேசிகனுரைத்தமந்திரமதுற்றசீர்
மோனஞானமுடன்மூழ்கியத்துவிதமாகியின்புடன்முயங்கியே
வானளாவிவருகங்கையாதிதிருமன்னுதீர்த்தமவையுன்னியே
280 தற்பரம்பொருளினாணையாலுரியதாபனஞ்செய்துதருக்கினான்
மற்றுமோரிணையிலாதவேதநெறிமந்திரந்தனைமொழிந்துசங்
கற்பபூருவமதாகநெஞ்சினிடைகருணைகூர்ந்துவகைகருதிநன்
குற்றதீர்த்தமடுமூழ்கினானுலகினோங்குபேரொளியினும்பரான்
281 மாதிரம்பரவுமாதிபுட்பவனவைபவத்தினதுசெய்தியாற்
சோதிகட்குமிகுசோதியாயிலகுதுங்கமேவுதிரளங்கமா
யோதுயிர்க்குமுதலோனுமாகியுயருத்தமத்துறுவரத்தையேய்ந்
தாதபக்கடவுணாதனுற்றவுலகாதிபத்தியமடைந்தனன்
282 மன்னுநல்விசுவகன்மனைக்கருதிவம்மினென்றுகொடுவல்லைகூய்ப்
பொன்னினோங்குவளர்புரிசையைந்தினொடுபொற்பினீடுமுயர்கோபுரந்
துன்னுகின்றசிகரங்களோடிலகுசோதிமாமணிகொளாலயம்
பன்னுமாடமிகுமண்டபங்கள் சிலபண்டுபோற்பரிதிகண்டனன்
283 பொற்பினீடியசதாசிவத்தின்மகிழ் பூவணத்துறைபுராதனர்க்
குற்சவந்தனைநடாத்தவெண்ணிமன்னுவகைபூத்தெழுசுவேச்சையால்
வெற்றியானைமுகனாதிவிக்கிரகம்வேறுவேறுமறைவிதியினா
லற்பின்மேதகையசெம்பொனாலுருவமைத்துநன்மணியழுத்தியே
284 கதிரவன்றனதுபெயரினானிலகுகாந்திநாயகனெனும்பெயர்
மதிவயங்கவணிமகுடசேகரநல்வானவன்றனையுமன்றினிற்
சதியினிற்றன்மிகுதாண்டவஞ்செயருடம்பிரான்றனையளித்துநூல்
விதிபதிட்டை செய்துவேதபூசையும்விழாவு மேத்திடவிளக்கினான்
285 வையகத்தின்மலமாயைகன்மமறமாற்றியேவதியுமந்தணீர்
பொய்யிலன்புகொடுபொங்கிலிங்கமதுபோற்றிசெய்துபுரிபூசையாற்
றெய்விகந்தருவிமானமீதுகொடுசெஞ்சுடர்ப்பரிதிவானவன்
வெய்யமாமணியின்மிக்கிலங்கணிவிளங்குதன்னுலகின்மேயினான்
286 பொருவில்புட்பவனவை பவத்தணிபுகழ்ந்திடும்புவனமெங்கணு
மரியவப்பதியின்மேன்மையீதெனவளந்துரைக்கவெளிதாகுமோ
பரவுமப்பதியின்வைகுநர்க்குரியபரபதம்பகர்தல்சரதமாந்
தருணமிக்கபுகழருண்மனத்திடைதருக்கிவாழ்மிகுதவத்தினீர்
287 யாதொர்புட்பவனவத்தலத்தினரனஞ் செழுத்தையருள்செய்தனன்
யாதொர்செங்கதிர்தனக்குமந்திரவெழுத்தினிற்பலமேய்ந்திடும்
யாதொர்நற்றலமதென்பதொன்னறுதற்குநேர்புகலலாவதோ
யாதொர்நற்றலமதுண்டெனப்புகறலாவதோர் தலமுமில்லையே
288 ஞாலமீதிலருண்மேனிகொண்டுவருஞானதேசிகனதருளினா
லாலநீழலறநால்வருக்கருளுமண்ணறன்றிருமுனண்ணியே
சீலமோடுதிருவஞ்செழுத்தையொருகால் விதிப்படி செபித்துளோர்க்
கேலுமுத்தியிமூதையமென்பதிலையிருபிறப்பின்வருமிருடிகாள்
289 மண்ணுகின்றமணிகன்னிகைப்புனலில்வந்துமூழ்கியருணந்துசீர்த்
தொன்மரத்தினுறுநன்னிழற்கண்மகிழ்துன்னுசோதிதிருமுன்னரே
பன்னுமன்னதுபதேசம்யாவர்சிலர்பண்ணினோரதுபரித்துளோ
ரின்னபான்மைநிகழிருவரும்பொருவிலீசனல்லுருவிசைகுவார்
290 இந்தநற்பதியிடத்தினீறணியுமெண்ணிலாருயிர்களுக்கெலா
மந்தமிக்கதிருவஞ்செழுத்தினுபதேசமெய்தலரிதரிதரோ
விந்தநற்கலியுகத்தினிந்தவுபதேசமானதுபலிக்கிலிங்
கிந்திரப்பதவியின்பமுற்றுமிகவுடையவன்கதியடைவரால்
291 வெந்தழற்பொடியையொக்குமித்தலம் விளம்பிலென்றவையுளங்கொளா
வந்துபொற்பின்மணிகன்னிகைக்கமலவாவிமூழ்குபலமேவலா
லந்தமற்றதிருவஞ்செழுத்தைவிதியடைவினிற் கொடுசெபித்தருட்
செந்தமிழ்ப்பொதியமுநிவனங்கை கொடுசிந்துவைப்பருகினானரோ
292 பன்னுகின்றவறுபதமுரன்றிசைகொள்பங்கயத்திருமடந்தைசேர்
பொன்னினீடுமுயர்புரிசைசூழ்ந்திலகுபூவணப்பதியின்மேவியே
மன்னுகங்கைமுதலாதிதீர்த்த மனமகிழ்வின்வைகுபுகழ்மாமணி
கன்னிகைப்புனலின் மூழ்குமன்னவர்கள்கயிலைவெற்பினிடைபயில்வரால்
293 மங்கலங்கொடனுமாகநற்றலை வழங்குகின்றதொருதிங்களிற்
பங்கயத்தினொடுபானல்செங்குவளைபன்மலர்கொண்மணிகன்னிகைப்
பொங்குநற்புனிததீர்த்தமாடுதல்பொருந்துமாறுகொடுபோதறான்
றங்கியங்கடையகிற்பரேலவர்கள்சங்கான்றனுருவங்கொள்வார்
294 சிவபிரான்றனதுதிருமுன்மேவுநதி தீர்த்தமன்னுமொருசார்பினி
னிவறல்சேர்தருமொரெய்யும்வெங்கணையெழுந்துசென்றுவிழுமெல்லைவாய்ப்
பவமெனும்பரலையெரிகொளுத்துமிகுபாவநாசமதெனும்பெயர்
நவையிறீர்த்தமதினாடினர்க்குலகநாடுமுத்தியதுகூடுமால்
295 சித்திரைகொள்சித்திரைமெய்திங்கள்கலைசேர்நாள்
வைத்தபுகழாதபனன்மந்திரநவிற்றி
யுய்த்தமணியோடையினினுச்சிதனின்மூழ்கி
நித்தனை வணங்குநர்கணீடுகதிசேர்வார்
296 இந்தநலிரும்பதியிருந்தகையியம்பின்
முந்தையொருநான்மறைமுடிந்தபொருடானாய்
நந்துசிவஞானமதுநன்குறுவதாகி
நிந்தையறுநின்மலமதாய்நிகழ்வதாகி
297 ஏதமிலதோர்பிரணவச்சொருபமேயாய்ப்
பாதகமறுத்திலகுபஞ்சவனமாகி
யாதிநடுவந்தமறியாதபரமாகி
யோதரியவாதிசைவசித்தாந்தவுருவாய்
298 பொருந்தியிடுமின்பமிகுபூவணமதன்கட்
டிருந்துணர்வின்யாவர்சிலர்சென்றுதரிசிக்கி
னருந்தவமிழைத்தருளினங்கிருடிகாளே
யருக்கதியவர்க்கடையுமையமிலையம்மா
299 கிட்டுபெயர்மன்னியகிரேதநலுகத்திற்
சிட்டர்தினமும்பரவுதேவிபுரமென்று
மிட்டமுறுகாமியமியாவுமருள்செய்யும்
புட்பவனமென்றுமுலகம்புகழுமாதோ
300 தேற்றமுறவேதிகழ்திரேதநலுகத்திற்
சாற்றிடுமிலக்குமிதனாதுபுரமென்றே
தோற்றமுறுமன்னியதுவாபரயுகத்தி
னாற்றலைப்பிரானகரமென்றுபெயர்நண்ணும்
301 ஈற்றின்வருகின்றதொரிருங்கலியுகத்தி
னாற்றிசைகள் போற்றிசெயுநன்குறுதவத்தோர்
மேற்றிகழும்வெஞ்சுடரின்மேதகையபேராற்
பாற்கரபுரப்பெயர்படைத்ததுபடிப்பால்
302 பூரணமெய்ஞ்ஞானமதுபுந்திகொடுவஞ்சம்
வேரறவகழ்ந்திடுநல்வேதியர்கண்மன்னோ
வேருறுமானந்தவனமென்றுமெணவொண்ணா
வாருயிர்கண்முத்திபெறுமாச்சிரமமென்றும்
303 திக்குலகெலாம்புகழ்சிதம்பரமதென்றும்
பக்கமுறுதக்கிணகாசிப்பதியதென்றுந்
தக்கசதுர்வேதபுரமென்றுமதுசார்பேர்
மிக்கபிதிர்முத்திபுரமென்றுநனிமேவும்
304 இத்தலநரர்க்குறவிருந்திருவளிக்கு
மித்தலமிரும்பவமியாவையுமொழிக்கு
மித்தலமிலங்குசிவஞானமதுநல்கு
மித்தலமநாதியுளதாயியையுமன்றே
305 தொக்கவுயிர்கட்கிலகுதொன்னகரிதன்னுட்
டக்கவரமிக்குதவுதந்திமுகவெந்தை
யிக்குலவுநற்பதியிரும்பெருமையாலே
முக்கணிமலன்றனையருச்சனைமுடித்தான்
306 வென்றிதருமித்தலநன்மேன்மையுறலாலே
யென்றனதுவாய்மையினிசைக்கவெனதன்றே
மன்றவொருநூறுவருடந்தனினுமாதோ
துன்றுகதைவல்லபடிசொல்லமுடியாதே
307 நிகழ்மறையுணர்ந்தசவுநகமுநிவநீடு
புகழுலகெலாம்பரவுபூவணமிகுஞ்சீர்
மகிழ்பிரமகைவர்த்தமாகியபுராணந்
திகழெழுபதென்னுமத்தியாயமிதுசொல்வார்
308 இந்தவகைகந்தனருணந்திபெறவின்பா
லந்தமில்பெருங்கயிலையின்கணருள்செய்தா
னந்துமறையீர்களெனநைமிசவனத்திற்
சுந்தரமிகுந்ததவசூதனுரைசெய்தான்
வேறு
309 இந்தனத்திடைசெந்தழல்வந்தபோலிந்தநற்பதிமுந்தவியந்ததோ
ரந்தநற்சிவலிங்கம்விளங்கவேயந்தரத்தவர்செங்கதிர்கண்டசீர்
தந்தவிக்கதைகண்டுபுகன்றுளோர்தங்குநற்செவிகொண்டுபுகழ்ந்துளோர்
புந்தியிற்கொடுவந்துபுகழ்ந்துளோர்பொங்குமுத்தியின்வந்து பொருந்துவார்
சூரியன் பூசனைச்சருக்கமுற்றியது
ஆகச் செய்யுள் 309
*****
இரண்டாவது
திரணாசனன் முத்திபெற்ற சருக்கம்
310 ஓதரியவுண்மையதாயோங்குபரி பூரணமாயுவமையின்றாய்ச்
சோதியதாய்ச்சுகவடிவாய்ச் சொல்லரிதாய்ச் சுருதிகளுந்தொடரொணாதாய்க்
காதலினாலனைவர்களுங்காண்பரிதாய்க்காரணகாரியங்கடந்த
வேதமறுபொருளினையாமிதயகமலத்திருத்தியிறைஞ்சுவாமே
வேறு
311 சத்தியஞானமார்சவுநகாதிப
வுத்தமராந்தவத்தோர்கள்சிங்கமே
சித்தநன்குணர்திரணாசனன்றிகழ்
முத்தியையடைந்தது மொழிகுவாமரோ
312 என்னலுமன்னுயிர்க்கிரங்கு…ன்னரு
ணன்னலந்தயங்கிய….கமுகத்தனாய்த்
தன்னிகரரு…. வச்சவுநகன்புகழ்
துன்… சூதனைத்துதித்தன்மேயினான்
(…குறியிட்டுள்ள இடங்களில் எழுத்துக்கள் அழிந்துள்ளன)
வேறு
313 எம்பிரானருளினாலேயாவையுமுணர்தலானு
மம்புவியிடத்துரோமகருடணனெனும் பேரானு
மும்பருமுணரவொண்ணாவொரு பொருளுடைமையானு
மிம்பரினுனக்குநேராமிருந்தவவாணரின்றால்
314 உலகெலாம்பணிந்து போற்று முயர்தவத்தும்பரானே
நிலவுபேரின்பநல்குநீடருட்பெற்றியானே
குலவியநண்பெஞ்ஞான்றுங்கூட்டியகொள்கையானே
கலையுடையோர்கடம்பாற்கழிபெருங்காதலானே
315 சைவமார்க்கண்டங்காந்தந்தந்தங்கியவிலிங்கங்கூர்மம்
வையகம்புகழ்வராகம்வாமனமருவுமச்சம்
பொய்யறுபிரமாண்டஞ்சீர்பொருந்துநற்பவுடிகத்தோ
டெய்தியபிரமம்பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்
316 காதல்கூர்நாரதீயங்காருடம்வயிணவஞ்சூழ்
மாதிரம்புகழும்பாகவதத்துடன்மருவுமேத
பேதமிலாக்கிநேயம்பிரமகைவர்த்தமியாவு
மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்
317 ஆங்கவைதன்னின்மேலாயறைந்தனையலர்ந்தசெம்பொற்
பூங்கொடிபடர்ந்துநீடும்பூவணமதனைப்பின்னு
மோங்கியகாதைநாப்பணுரைத்தனைபூருவத்திற்
பாங்கினாற்கும்பகோணமென்றொரு பதியதன்றே
318 மக்களுக்கிழைத்தநீதிமாதவம்பலிப்பதாகித்
தொக்கவெம்பிறப்பிற்சூழுந்தொல்பவந்துடைப்பதாகித்
தக்கசெல்வங்களெல்லாந்தானருள்புரிவதாகித்
திக்குடையுல்கம்போற்றுந் தீர்த்தங்கள் பலவுமாகி
319 கலிவலிதொலைப்பதாகிக்கண்ணகன்ஞாலந்தன்னி
னலகிலாவுயிர்கட்கெல்லாமாநந்தமளிப்பதாகிப்
பலமுநிகணங்களோடுபண்ணவர்பணிவதாகிக்
குலவுமாச்சரியமாகிக்கோதிலாச்சிரமமாகி
320 சோதியாயுலகமெல்லாஞ்சுத்தமாக்குவதாய்மேலா
யாதிதெய்விகத்தினோடுபவுதிகமான்மிகத்தைப்
போதல்செய்பெற்றித்தாயபூவணந்தன்னின்மன்னு
மேதகுதானமுண்டேல்விரித்திவண்விளம்புகென்றான்
321 விளம்புவனென்றுவேதவியாதன்மாணக்கன்சொல்வா
னுளங்கொளுந்தவத்தோரேறேயுற்றநின்பாக்கியத்தாற்
களங்கமின்றாயதோர்நற்காரணந்தன்னான்மாதோ
வளந்தறிவொண்ணாப்புந்தியடைந்தனையன்றோவென்றான்
322 மண்ணிலாயிரம்பிறப்பின்மனமொழிகாயந்தம்மாற்
பண்ணிடுங்கருமத்தாலேபல்பெரும்பதியினென்று
மெண்ணும்யாகாதிகன்மமியற்றியேதீர்த்தமாடி
நண்ணுபுண்ணியதானத்தினற்றவம்புரிந்துமாதோ
323 சொல்லருமின்பமுற்றுச்சுவர்க்காதிபோகந்துய்த்துப்
பல்பயனருந்திப்பின்னர்ப்பாரிடைநரர்களாகி
யல்லலொன்றின்றிநாளுமரியநற்றருமந்தன்னி
னல்லதொல்குலமுற்றோற்குநண்ணிடும்புந்திதானே
324 புந்திதானுடையதாகப் பொருவிடைப்பாகன்மேவு
மந்தணமானதானமான்மியந்தனைவினாவுஞ்
சிந்தனையுண்டாமீதுதீமையோர்க்கடையலாகா
திந்தநீர்முறைமைநீசெயிருந்தவப்பேறேயன்றோ
325 அந்தணர்தமக்குமேலோயானுநன்கடைந்தேனாக
நந்துநின்னளியென்றோதுநாரினாற்பிணிக்கப்பட்டேன்
முந்துசெல்வத்துச் செல்வமுழுதொருங்குடையோய்நின்னாற்
புந்திகொள்செல்வம்பெற்றோனாதலாற்புகல்வன்கேண்மோ
326 உலகெலாமொடுங்கும்போதினுததிகளேழுமொன்றாய்த்
தலைதடுமாற்றந்தந்துதாபரசங்கமங்க
ளிலயமதடைந்தகாலையிருந்தரைதனக்குநாளு
மலகில்காரணத்தினோடங்கமைந்தகாரியமுமாகி
327 பெற்றிடுமமுதகும்பம்பிரளயசமுத்திரத்தி
னுற்றதனாப்பணின்றுமுலாவுபுவதியுங்காலை
மற்றையததனைவிண்டுவந்துமுக்கூறுதந்து
சிற்சிலகாலஞ்செல்லத்தெருண்டவானணுகிமாதோ
328 பூவுறைதிருவின்மேலாம்பூவணந்தன்னின்முன்னுந்
தாவில்சீர்க்கும்பகோணந்தன்னிலாங்கதற்குப்பின்னு
மேவியததன்பினாமம்விளங்குநற்றலங்கடோறு
மூவுலகங்கள் போற்றுமுக்கணனருளின்வைத்தான்
329 நாமநீர்வையம்போற்றுநல்லமிர்தாம்மிசத்தொன்
றேமமாம்புட்பமாகியின்னமுதுருவமன்னிப்
பூமகள் பொருந்திவாழும் பொழிறிகழ்பூவணத்தின்
மாமணிகன்னிகைக்கண்வந்ததுவீழ்ந்ததன்றே
330 நிகழ்தருமருளினாலேநிறைந்தநன்னேயத்தோடு
மகிழ்சிறந்தோங்குமாதிவருணகேண்மருவுதீர்த்தந்
திகழ்மாயாதீர்த்தமென்றுஞ்செங்கண்மால்விடையின்பாகன்
புகழ்மணிகன்னியென்றும் பொருந்தியதிரண்டுநாமம்
331 தருமமாம்பொருடனக்குத்தங்கியவங்கிதிக்கிற்
றிருந்தழகியமின்னன்னைதிகழ்திருமுன்னர்ப்பாங்காற்
பொருந்துதெய்வீகமாமப்புநிததீர்த்தம்படிந்தோர்க்
கரும்பிரமகத்தியாதியாம்பவமனைத்துநீங்கும்
332 பொழிறிகழ்புராதனத்தெம்பூவணங்கோயில்கொண்ட
குழகனைத்தொழுமுன்செம்பொற்கொடிதனைக்கும்பிட்டோர்க
டொழுதிடுமக்கணத்திற்றொடர்புறுந்தோடந்தன்னால்
விழுவர்களகோரமென்னும்வெங்கொடுநிரயந்தன்னுள்
333 ஆதலினன்புகூர்ந்தேயரும்பெருங்கலைதெரிந்த
மூதறிவுடையோர்முக்கண்மூர்த்தியைத்தொழுகமுன்ன
மாதலினீதியாலேமங்கையையங்கைகூப்பிப்
பாததாமரையிற்பின்னர்ப்பணிந்திடக்கடவரன்றே
334 மெய்முநிகணங்கட்கெல்லாம்விழைவுறுந்தவத்தின்வேந்தே
யெய்தியதெனதுசிந்தையையமொன்றிதனையின்னே
பொய்யறுகேள்வியோய்நீபோக்குவதன்றியிந்த
வையகந்தன்னில்வைகுமாதவரில்லைமாதோ
335 என்னெனிலியம்பக்கேண்மோவிறைவியையிறைஞ்சுமுன்னர்த்
தொன்னெறிசிவலிங்கத்தைத் தொழார்க்குறுந்தோடமென்றி
யன்னதுதான்வந்தெவ்வாறடைந்திடுமீதுபூர்வந்
தன்னில்யான்கேட்டதின்றாற்சாற்றுதிதவத்தோயென்றான்
336 சாற்றுகேன்சநற்குமாரன்றானுமீதையமுற்றே
நாற்றலைப்பெருமான்றன்னைநணுகுமுன்னயந்துகேட்ப
வேற்றமாமிதிகாசத்திலெடுத்தவனிசைத்ததொல்சீர்
மாற்றமில்காதையொன்றுமாதவத்தலைவகேண்மோ
வேறு
337 முன்னாதியுகந்தனின்மோதுதிரைத்
தென்னார்ந்தகௌதமிதீரமுறு
மந்நான்மறையோர்குலமாதவனாம்
பன்னாசனன்றன்பரிவின்வருவோன்
338 திருவின்மகிழுந்திரணாசனனென்
றருமந்தபெயரதுதந்துடையோன்
றருமந்திகழ்வைதிகசைவனுளங்
குருவின்சரணங்குடிகொண்டிடுவோன்
339 வழுவாதருளின்வழிநின்றிடுவோன்
பழுதானவையொன்றுபகர்ந்தறியான்
முழுமாதவமென்றுமுடித்திடுவான்
செழுநான்மறைசேர்திருவாயுடையான்
340 மிகுமேதகுநல்விரதந்தருவோன்
றொகுமாதருமத்துறைநின்றிடுவான்
புகல்வேள்விகணன்குபுரிந்திடுவான்
சகவாழ்வுதணந்திடுதன்மையினான்
341 வேதங்கரைகண்டருள்வித்தகனீ
டேதந்தருசெய்கையிசைந்தறியா
னோதும்புவனத்துயிருக்குயிரா
நாதன்புகழன்றிநவின்றறியான்
342 செவ்வான்மதிபோற்றிகழ்நன்னுதலா
ரவ்வாழ்வெனுநீடலையாழியிடைக்
கவ்வாதுயருங்கதிதன்னையினி
யெவ்வாறடைவோமெனவெண்ணினனால்
343 பொய்வாழ்வினையேபொருளென்றுதின
மெய்வாழ்வினையேவிடுகின்றனமா
லைவாய்வருபொருளினவாவினைநீத்
துய்வான்வழியாமுணர்கின்றிலமால்
344 பேராதுறுநற்பொண்ணாசையினா
லாராதுலகத்தடையக்கடவே
னேராருமிலாநிமலன்னருளாற்
சீரார்கதியெவ்வழிசேர்குவனால்
345 விண்ணாடர்களும்மேலானவரும்
பெண்ணாசையினாற்பிழைபெற்றனராற்
பெண்ணாசைவிடப்பெறுகின்றவரே
கண்ணார்நுதலான்கழல்சேர்குவரால்
346 சிறைசேருடலின்செயன்மாண்டிடவோர்
குறிதானருளுங்குருதேசிகனா
லறிவாலறியுமருளாலறியப்
பெறுபேறினியான்பெறுமாறெவனோ
347 கைம்மான்மழுவுங்கனல்சேர்விழியு
நம்மாதரவானனிநாடரிதா
லிம்மானுடர்போலிம்மாநிலமேற்
பெம்மானருளப்பெறுமாறெவனோ
348 என்னாவிவைபன்னியிரங்கியெழா
முன்னான்மறையோதியமூதறிவாற்
றன்னாசிரியன்றனை யெய்திடுவா
னன்னாமநவிற்றிநடந்தனனால்
வேறு
349 கோடிவான்மதியமுங்கோடிபாநுவு
நீடியபேரொளிநிறைந்தமெய்யனை
வீடருந்தவத்தினான்மிகச் சொலித்திடும்
பீடுறுதேசினாற்பிறங்குவான்றனை
350 படர்புவியிடத்துயிர்க்கருளும்பான்மைசேர்
நடையனைநான்மறைநவிற்றுவான்றனைத்
தடைபடாதருளினாற்சார்ந்தநெஞ்சனை
யிடருறுமில்லறமிறப்பிப்பான்றனை
351 புண்டரநீற்றணிபொலிந்தமுண்டனை
வெண்டிருநீறதுவிளங்குமெய்னைக்
கண்டிகைகொண்டிடுகவின்கொண்மார்பனைக்
குண்டிகைதாங்கியேகுலவுங்கையனை
352 முருகவிழ்தாமரைமுகத்தினான்றனைப்
புரிமணமிசையினிற் பொருந்துவான்றனைத்
திரிபுரமெரிசெய்தசிவபிரான்றனின்
மருவியதிருவுருவயங்குவான்றனை
353 விட்டிடும்வேணவாவேட்கையான்றனைச்
சிட்டர்கள்பரவிடுந்தேசிகன்றனைக்
கட்டுவார்சடையனைக்கருதருந்தவ
முட்டறுரோமசமுநியைக்கண்டனன்
354 மூண்டெழுகாதலான்முடுகிக்கண்ணுறீஇப்
பூண்டபேரன்பின்மெய்புளகம்போர்த்தனன்
மாண்டகுசிந்தையன்வரம்பின்மாதவங்
காண்டகுமுநிவரன்கழலிறைஞ்சினான்
355 அருள்பெறுமாசையாலடியற்றேவிழு
மரமதுவென்னவேவல்லைவீழ்ந்தெழீஇக்
கருணையங்கடலதாங்கடவுள்கேளெனாக்
குருபரனோடிவைகூறன்மேயினான்
வேறு
356 மங்கையர்மைந்தரென்னும்வங்கவாரிதியின்மூழ்கிப்
பங்கமதுற்றியான்செய்பவத்தினாலழுந்துகின்றே
னங்கதினழுந்தலாலேயறம்பொருளின்பம்வீடென்
றிங்கிவையொன்றுந்தேறேனியம்பிடினிவற்றினென்னாம்
357 இல்லிடையிருந்தலாலேயில்லதேயுண்டாம்பின்னர்ச்
செல்வம்வந்தடையுமந்தச் செல்வமுந்தேயும்பின்ன
ரல்லல்வந்தடையும்பின்னரகமகிழ்வுண்டாம்பின்னர்ப்
புல்லுதற்கரியமேலாம்புத்திரராவரன்றே
358 புத்திரராயகாலைப்பொருந்திடுங்கீர்த்திமிக்கா
மத்தகுமதனானிந்தையடைந்திடுமடைதலாலே
மெய்த்தகுவியாதிவந்துமேவிடுமேவலாலே
நித்தமும்வருத்தநீடுநீடநித்திரையுண்டாகும்
359 நித்திரையான்மூதேவிநிகழுமங்கதனால்வேறோர்
மெய்த்தனம்விருப்புமத்தான்மிக்கிடுந்துன்பமுற்றுச்
சித்தநன்னிலைதிரிந்துதிபங்கிநாடொறுமயங்கி
யத்தமாஞ்சுழியிலாழ்ந்தேயறவுமெய்வருந்துமன்றே
360 வருந்தவேநாளும்பாந்தள்வல்விடவடிவதாகி
யிருந்திடருழக்குமிந்தவில்லிடையியைந்துநாளும்
பெருந்துயர்கொடுகீழ்மேலாய்ப்பிறந்திறந்துழன்றேனானே
யருந்தவமியற்றினெவ்வாறடைந்திடுமின்பமுத்தி
361 குருபரவெனக்குநீயேகூறிடுகதிவேறின்றான்
மருவும்யாகாதிகன்மமாவிரதங்கள்சாந்தி
யரியநற்றவந்தானங்களன்றியேயெளிதிற்சேரு
முரியதோர்கதிக்குபாயமுண்டெனினுரைத்தல்வேண்டும்
362 சுந்தரத்தவத்தாலங்கஞ்சொலித்திடுஞ்சோதியானே
சிந்தையினுணர்ந்துவல்லேதிருவருள்புரிதியென்ன
வுந்துகாதலின்மிக்கோங்குமுரோமசமுநியுவந்தே
யிந்தவாறுரைப்பக்கேட்டியெனத்திருவாய்மலர்ந்தான்
363 நந்துநான்மறைதெரிந்தநற்றிரணாசனப்பேர்
மைந்தனேமதிவயங்குமாட்சிமையுடைமையானே
யிந்தமாநிலத்தெஞ்ஞான்றுமெண்ணிடினரர்களாலே
வந்திடுமுபாயந்தன்னான்மருவியதருமமெல்லாம்
364 மெய்ம்மையதாகியிந்தமேதகுமுலக்குக்கெல்லாஞ்
சம்மதமாகிமுன்னஞ்சாற்றிடுமுபாயமின்றி
யம்மநிற்கறைதல்வேண்டியன்பினேமாய்ப்புகுந்தே
மிம்முறைமையினாற்சேருமென்பதுமதித்தாமன்றே
365 நற்பதிபலவுஞ்சென்றுநான்மறைவிதிவழாம
லற்புதமருவுதீர்த்தமாதடிநீயாங்காங்குற்ற
சிற்பரமாகியோங்குஞ்சிவலிங்கங்கண்டுசூழ்ந்தே
யுற்றபேரன்பினோடுமுவகையினுறப்பணிந்து
366 மதிவலோய்வாரிசூழுமலர்தலையுலகம்போற்ற
விதிமுறைவிசேடித்தன்பின்மிக்கதானங்கணல்கித்
துதிகொடிம்முறையினாற்றிற்றொல்பவமொல்லைநீங்குங்
கதிபெறலாகுமின்றேற்காணலாந்தகையதன்றே
367 எனமுநிகழறியன்போடின்னருள்விடையுந்தந்தே
முநிவனன்றுரைக்குமந்தமுதிர்பழச்சுவையின்சொல்லா
லினிதுடல்புளகம்போர்த்தாங்கில்லறந்துறந்துவல்லே
புனிததீர்த்தங்களாடிப்புந்தியிற்கொண்டுபோந்தான்
வேறு
368 நயிமிசங்கெயைநற்பிரயாகையே
யயர்வில்புட்கரம்ரோமகருடணம்
பயிறருஞ்சுரபாண்டம்பைசாசமே
யியல்கன்மோதகேச்சுரமிராக்கதம்
369 கோதில்கோகன்னங்கோமுகைகட்கமே
நாதனன்குறுஞானகுண்டங்கதை
காதல்கூர்பிரபாசங்கபிலையே
பாதகந்தவிர்க்கும்பாபமோசனம்
370 கோபருப்பதங்கோவர்த்தனம்புகழ்
சீபருப்பதந்தீர்த்தந்தினந்தரு
மாபுகழ்க்காமசாரமாசற்றசீர்த்
தூபமிக்கெழுந்தூயசோணாசலம்
371 கேடிலாதகிருட்டிணவேணிநல்
வீடுநல்கிடும்வேகவதிம்மிகும்
பீடிலங்குசொற்பேசுப்ரயாணமாஞ்
சேடதீர்த்தந்திகழுந்திருநகர்
372 மிக்ககாஞ்சிகாவேரிவிலாளமே
தக்கசம்புதலமயறீர்த்தங்கள்
பக்கமோடுபடிந்துவிதிமுறை
தொக்கலிங்கங்கள்யாவுந்தொழுதரோ
373 பன்னுசெந்தமிழ்ப்பாண்டிநன்னாட்டினின்
மன்னும்வைகையின்வந்துபடிந்தபி
னன்னமென்னடையங்கயற்கண்ணியோ
டென்னையாளுடையானையிறைஞ்சியே
374 முன்பகர்ந்ததோர்யோசனைமூண்டிடும்
பொன்பயின்றதென்பூவணமேவியே
யின்பமாமணிகன்னிகையிற்படிந்
தன்பினன்னையையஞ்சலிசெய்தரோ
375 மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்
376 சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே
377 இருளறவுலகத்திருங்கதிபெறுவானெழில்பெறுபுனிதநீராடி
விரவுநல்லந்தவேதியன்றனக்குவிபரீதமாகவேமேவுங்
கருதருகிரமங்கடந்ததோடத்தாற்கதுமெனக்கலங்கியேயுள்ளம்
பரவழன்றினும்பைசாசமெய்கொடுவெம்பசியினாற்பரிதபித்திருந்தான்
378 ஆனதோர்காலையருவினைப்பயத்தாலங்கணனற்பதங்காண்பான்
றேனிவர்வாசந்தினங்கமழ்பொழில்சூழ்தென்றிருப்பூவணந்தன்னிற்
பான்மைசேரிரண்டாம்பரிதிகண்டாங்குப்படர்ந்தபேரொளிநிழற்படிவ
நான்மறைபயிலுநல்லிசைவீணைநாரதமுநிவனண்ணினனால்
379 ஆயவன்றன்னையந்தமாமுநிகண்டையவென்றமுதமாமொழியாற்
பேயினதங்கம்பெற்றனையாரேபெரும்பசியுற்றனைபோலா
நீயுரைவிளம்புகென்னலுமவன்பினீடுபேருவகையிற்கூடித்
தூயமாதவனைத்தொழுதுகாண்கையினாற்றொல்லுணர்வடைந்திவைசொல்வான்
380 காதல்கூருலகிற்கனைகதிர்ப்பரிதிக்கடவுளையனையநாரதனே
யோதுமில்வாழ்வாமுததியினடர்ப்பட்டுறுகதிபெறுகுவான்விரும்பித்
தீதறுதீர்த்தம்யாவையும்படிந்தித்திருநகர்மருவுதீர்த்தந்தோய்ந்
தேதமாகியமின்னெனுமனைவாழ்வையெறிந்திடவெண்ணியானியைந்தேன்
வேறு
381 காதலுடன்மேவுவடுகக்கடவுடன்னைப்
பாதகமலங்கண்மிசைசென்றுபணிவுற்றே
கோதறுநன்னீர்கொண்மணிகுண்டமதின்மூழ்கி
யாதரவினேறினனகன்கரையினம்மா
382 அந்தவமையந்தனினல்லந்தணர்தமன்னா
சிந்தனைகலங்கிமெய்திரிந்தனனியானே
முந்தைவினையோவலதுமூண்டபவமேயோ
விந்தவிதிவந்ததெதுவென்றறிகிலேனே
383 நெருக்கியுதரத்தினுறுநீடுபசியாலே
யிரக்கமறமுன்பினியையாதனபிதற்றி
யரக்கவுருவாயிவணலக்கண்மிகவுற்றேன்
விரிக்கினிதுமுன்விதிவிலக்கிடவொணாதே
384 பரம்புபணைகொண்டெழுபராரைமரநீழல்
விரும்புமொருவன்றலைவிழுங்கனியையொக்கு
மிரும்புனலியாத்திரையினெண்ணமுறுமென்முன்
புரிந்ததவநீமகிழ்பொருந்திவரலாலே
385 உன்னையலதோர்கதியுரைத்திடவுமுண்டோ
வன்னதினின்முன்னிகழுமாயிரசென்மத்தின்
மன்னுபவநின்னடிவணங்கிடவகன்ற
தின்னினிமகிழ்ந்திவணிரங்கியருளெந்தாய்
386 என்னலுமிரங்கிமிகுமின்னருள்சுரந்தே
யன்னவனைநின்னிலெனவங்கையினமைத்தே
மன்னியசெழுங்கமலவள்ளல்பெறவந்த
நன்மகதிவீணைபயினாரதனிசைப்பான்
387 அந்தணர்குலத்தலைவவஞ்சலினியஞ்சல்
வந்துளதொர்காரணம்வகுத்திடுவனின்னே
புந்திகொண்மெய்பூவணபுரத்தினினிதாக
முந்தியுரைதந்தபரமுத்தியதுவுண்டே
388 நீவிதிவசத்தினவணேர்ந்துமணிநீடும்
பூவணபுரேசனிருபொன்னடிதொழாதே
தேவியிருபாதமலர்சென்றுதரிசித்தே
மேவினைபின்வேறொர்பதிவென்றியுடனன்றே
389 வேதியர்குலாதிபவிளம்பிடுவனீயிப்
போதுமலர்மாதுதிகழ்பூவணபுரஞ்சேர்
நாதனைவணங்கியபினாயகிசெழும்பொற்
பாதமலரன்பொடுபணிந்துபவநீப்பாய்
390 காசிகெயையீசனடிகாமர்புனன்மூழ்கி
நேசமொடிறைஞ்சினர்கணேர்ந்தபலனெல்லாம்
பூசுரர்களாசைதருபூவணமெனும்பே
ராசில்பதிவந்தடையுமையமிலையம்மா
391 ஓர்கவினுமோதிடுவமுண்மையிமூதுண்மை
பூர்வமதுவாகியதொர்பூவணமதன்க
ணேர்தருமெம்மானைமுனிறைஞ்சுதல்செயாரே
லூர்கிருமியார்நிரயமுற்றிடருழப்பார்
392 அவ்வளவதன்றுலகிலாய்வருவர்நாயா
யிவ்வுரைநன்மந்தணமியம்பிடுவதன்றால்
வெவ்வினைகடிந்துதவமேன்மைபெறலாலே
செவ்விதினினக்கிதுசெப்பினமியாமே
393 பன்னுதுமியாமுனதுபாவமறவீடு
முன்னினுலகம்புகழுமோர்புனிததீர்த்த
மின்னதெனவேயறிவதெம்மிறைவனன்றி
யன்னதனின்மேன்மைதனையாரறியகிற்பார்
394 பூர்வமுறுமீசனதுமுன்னமுறுபூர்வத்
தோர்தருமைஞ்ஞூறுவரிவிற்கிடையினுற்ற
தேர்கொள்கடிவாசநனியியற்றியததற்குப்
பேர்பிரமதீர்த்தமெனவேயுலகுபேசும்
395 புத்தியொடபுத்திதருபூர்வகருமங்க
ளித்துயர்வருங்கிரமபங்ககருமங்க
ளுத்தமகுலோத்தமவிமூதுண்மைபடிவுற்றாற்
சித்தமகிழப்பிரமதீர்த்தமதகற்றும்
396 அருந்தவரைநிந்தனையறைந்தவதிதோட
மிருங்குலவொழுக்கமதிகந்தகனதோடம்
பரந்திடுமந்நீர்விழிபரப்புவதனாலே
பொருந்துமரனாணையதனாலிவைகள்போக்கும்
397 கார்த்திகைநன்மாதமுறுகார்த்திகைநன்னாளிற்
றீர்த்தர்தினமும்படிசெழும்பிரமதீர்த்தங்
கூர்த்தவறிவோயதுகுளித்திடுகளித்தே
யார்த்திடுமரக்கவுருவக்கணம்விடுப்பாய்
398 நாடிநவில்கின்றமறைநாலுமுகனன்னீ
ராடியிடினன்றியிவரக்கவுருவந்தான்
வீடலரிதாகுமுயர்மேதினியின்மீதோர்
கோடிசனனங்களவைகூடினும்விடாதே
399 இன்னதொருதீர்த்தமதிளின்னலமியம்பின்
முன்னுரிமைசேருமுகமுற்றுமதினின்றாம்
பின்னுறுமுகத்தில்வருபெற்றியினுமின்றா
மன்னதனின்மூழ்கினெவரும்மதிகராவர்
400 ஆதலினரும்பவமகன்றிடுமதன்க
ணீதகைமையோடமர்திநீடுகதிகூடும்
பூதலமெலாம்பரவுபுட்பவனமேமுன்
னோதுபலநற்பதியினுத்தமமதாகும்
401 பூர்வமதின்மேவிவளர்பூவணமதன்கட்
டேர்வருமருட்குறிச்சேவையதனாலே
பார்மிசைபடர்ந்துவருபாவமவையாவும்
நேர்படுதலாவதொருநிமிடமதினீங்கும்
402 காசிநகரிற் செய்தகடுங்கொடியபாவம்
பூசுரர்தினம்பரவுபூவணமதிற்போ
மோசைதருபூவணமுஞற்றியிடுபாவ
மாசரியபூவணமதன்கணதுதீரும்
403 ஈதுசரதம்மெனவியம்பியருளாலே
போதுவமெனாவினிதினாசிகள்புகன்றே
நாதமுறுவீணைபயினாரதனலங்கூர்
கோதிறிருமாலதுவைகுண்டமதடைந்தான்
404 பொற்சுவருடுத்துலகுபூவணமமர்ந்த
தற்பரனொடுற்றபரைதன்னையடிபேணிப்
பற்பகலுமன்பொடுபணிந்தருளின்வாழ்ந்து
நற்பரமமுத்திதிரணாசனனடைந்தான்
405 காதன்மிகுபிரமகைவர்த்தம்தினொன்று
போதவெழுபமூதெனப்புகலத்தியாயத்
தோதுமிக்காதைசவுநகவுணர்தியென்றான்
சூதனெனும்பேர்பரவுதொல்லுணர்வின்மேலோன்
வேறு
406 மருவுமிந்தநன்மந்தணமானதோர்மிகழ்பெருங்கதைவன்பவமானகா
னெரிபொருந்திடுமென்பர்கண்மேலையோரிணையிகந்துறுமிங்கிதன்மேன்மைதான்
பரவுகின்றவர்கள்பண்கொடுபாடினோர்பகரிரும்பொருடந்துசொல்பான்மையோர்
திரமுடன்செவிகொண்டிதுதேர்குவோர்சிவபெரும்பதிசேர்வதுதிண்ணமே
திரணாசனன்முத்திபெற்றசருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 406
*****