முப்பிறப்பு!

சி. ஜெயபாரதன், கனடா 

மானுடப் பிறவிகளுக்கு
முப்பிறப்பு என்பது
புதிய கணிப்பு,
புதிய ஞானம்,
புதிய பாடம் !

ஏழு பிறப்பு என்பது
வாழும் மாந்தர்க்கு ஒவ்வாத
பழைய சுவடு !
முற்பிறப்பு, இப்பிறப்பு
பிற்பிறப்பு
முடிவில்லா தொடர்ச்சி.
பிறப்பும், இறப்பும்
இடைபுகும் நிகழ்ச்சி.

முற்பிறப்பு இல்லை எனின்
இப்பிறப்பு இல்லை,
இருக்க முடியாது !
இறப்பு மூலம் ஊழ்விதி
பிற்பிறப்புக்கு
நாத்து நடுகிறது !
இப்பிறப்பு நிகழ்வு கட்கு
முற்பிறப்பு தான்
காரணி !

பிறவிப் பெருங்கடல்
மீள் நீச்சல்
காரண-விளைவு
நிகழ்வு
ஒரு சுழல் நிகழ்ச்சி !
ஏழ் பிறப்பு
யூகிப்பு
ஒருபோக்கு முடிவு !
பிரபஞ்ச
நியதி இல்லை !

இயற்கை ஊழ்விதி
இப்பிறப்பு,
மானிடப்
பாப புண்ணிய வினைகள்
பிற்பிறப்புக்கு
வித்திடும்.
முப்பிறப்பு நியதி புதிது.

முற்பிறப்பு
இப்பிறப்பு, பிற்பிறப்பு
முற்றுப் பெறாத
சுழற்சி
ஒரு தொடர்ச்சி
துவக்கம், முடிவு இல்லா
நிகழ்ச்சி
மானிட யூகிப்பு
ஏழ்பிறப்பு என்பது ஓர்
கேள்விக் குறி !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *