தமிழ் நாட்டில் டேம் 999 வெளியீடு இல்லை – தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கம்
’டேம் 999’ பற்றி தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி:
25 நவம்பர் 2011 அன்று வெளி வரவிருக்கும் ஆங்கிலப் படமான ‘டேம் 999’ என்ற திரைப்படத்தினை ‘அணை 999’ என்று தமிழில் மொழி மாற்றம் செய்து வெளி வரவிருக்கும் திரைப்படத்தில் தமிழக மற்றும் கேரள அரசிற்குமிடையே தற்போது நிலவி வரும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை பற்றியும் மற்றும் திரைப்படத்தில் அந்த அணை உடைந்து விடுவது போலவும் தமிழகத்திற்கு எதிரான காட்சிகளைக் கொண்டுள்ளதால் அந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று பல அமைப்புகள் நமது சங்கத்திற்கு கோரிக்கை வைத்திருப்பதால் மேற்படி ‘அணை 999’ என்ற மொழிமாற்று திரைப்படத்தை தமிழ் நாடு முழுவதும் திரையிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
