சி. ஜெயபாரதன், கனடா
இந்திய மோனா லிசா
மொட்டு முறுவல் பூக்கும் மோனா லிசா
மேல் வைத்த விழிகள் மீளா காவியம்.
காந்த முகம் ஈர்க்கும் ஆயிரம் இதயம்
இந்திய மோனா லிசா உயிர் ஓவியம்.
மொட்டு முறுவல் பூத்த குஷ்பூ
கட்டான மேனி வாலிப வனப்பூ
காந்த விழிகள் பூத்த களிப்பு
ஊர்வசி, மேனகா ஓவியப் படைப்பு
பாரத மோனா லிசா ஓவியம் வரைய
பூரண ரவி வர்மா பிறப்பார் ஒருநாள்
மைக்கேல் ஆஞ்சலோ கையால் வரைய
பாரத பன்னிறத் தூரிகை தேவை
****************
உலக மோனா லிசா
உலக மோனா லிசா உதட்டில்
புன்னகை பூக்க வில்லை மெய்யாய்,
நளினம் இல்லை, மலர்ச்சி இல்லை.
களிப்பு இல்லா, கடுமை ஓவியம் !



Leave a Reply