இலக்கியம்கவிதைகள்

காற்றை வாங்கு

ஜெ.ராஜ்குமார்

ஒரு மெல்லிய காற்று –

வீசுது எனை நோக்கி

அது சில்லெனப் பட்டு –

மனதும் உருகிடிச்சு…என்

உடலும் கரைந்திடுச்சு…

 

தென்றல் போகும் வழியிலே –

என் மனதும் போயிடுச்சு…

மின்னல் வந்து எங்கள் –

வழியிலே விளக்காய் ஆயிடுச்சு…!

இது நிலைக்க வேண்டும்

இனி நாளும் –

என் உடல் தென்றலுடன் கரைய வேண்டும்

என் மனம் அதை நினைத்து உருக வேண்டும்…!

 

அந்தி சாயும் நேரம்கூட ஓயவில்லை – அதன்

வேகம் குறையவேயில்லை

என்னில் முழுதாய் கலந்திட்டது –

என்னை ஏனோ தேர்ந்தெடுத்தது!

என்ன பிறவியில்

என்ன தவம் செய்தோனோ

இந்த பிறவியில்

என் மனதும் உடலும்

மகிழச் செய்கிறதே…

மாலைக் காற்றில் மனது தொலைகிறதே…!

 

சிலகாலம் வாழ்ந்து முடிப்பேன்

இனி

எந்தக் காலமும் இதுபோல் வரத் துடிப்பேன்…

மனது சிறகு இல்லாமல் பறக்கிறது…

சிறகு முளைத்தது போல் உணர்கிறது…

சிரிப்பை வாங்கும் கூட்டத்திலே

தென்றல் காற்றை வாங்கும் கவிஞன் நான்…!  

 

படத்திற்கு நன்றி: http://www.inmagine.com/sc517/sc517007-photo

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க