வல்லமையில் புதிய பகுதி – ஜோதிடம்

6

அன்பு நண்பர்களே,

இன்று நம் வல்லமை இதழில் வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க ஜோதிடம் என்ற புதிய பகுதி ஆரம்பித்துள்ளோம். 2011 ஆம் ஆண்டிற்கான,12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்களும், தொடர்ந்து வரும் வாரங்களில் வார ராசி பலன்களும் எழுத மனமுவந்து இசைந்துள்ளார் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன். அவருக்கு நம் வல்லமை மின்னிதழின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் .

தாவரவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியன், இதழியல் துறையில் முது நிலை பட்டயம் பெற்றவர். இவற்றோடு, பாண்டிச்சேரி அட்சயா அளித்த ‘திருக்கணித மேதை’ பட்டமும், திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சித்தாந்த ரத்னம்,சித்தாந்த நன்மணி பட்டங்களும் பெற்றுள்ளார் .

ஜோதிடரின் படைப்புக்கள் : 1994 முதல் பன்னிரண்டு ஆண்டு காலம் தகப்பனாரின் வழிகாட்டுதலோடு பெற்ற ஜோதிட அனுபவம், பாண்டிச்சேரி அட்சயா 2006-2007 பஞ்சாங்கம் என்ற முதல் படைப்பாக மலர்ந்தது. 2006-07 குருப்பெயர்ச்சி மற்றும் 2007-ம் ஆங்கில ஆண்டுக்கான 12 ராசிகளுக்கான புத்தாண்டுப்பலன்களும் சென்னை கிரி டிரேடிங்க் ஏஜென்ஸி அவர்கள் மூலம் வெளியிடப்பட்டது. இலங்கையிலிருந்து வெளிவரும் ‘வீர கேசரி’ என்ற தினசரி பத்திரிக்கை ஆரம்பித்த ‘சோதிடகேசரி’ என்னும் மாத ஜோதிடப் பத்திரிக்கையின் பிரதான சோதிடராக ஒரு வருடம் பணியாற்றியவர். மூலிகை மணி பத்திரிக்கையில் பல மருத்துவம் சார்ந்த ஜோதிடக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன மற்றும் ஜோதிட அரசு பத்திரிகைகளில் இவரது பல கட்டுரைகளும், ராசி பலன் களும் வெளிவந்துள்ளன. சென்னை ஆன்லைன் .டாட்.காம் இணைய இதழில், , ஓராண்டிற்கும் மேலாக ஆங்கில தினசரி பலன் , வார பலன்கள், தமிழ் வாரபலன்கள், கிரக பெயர்ச்சி பலன்கள் மற்றும் பல ஆன்மிகக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சுலேகா .டாட்.காம் என்ற இணைய இதழிலும், சில மாதங்களுக்கு ஆங்கில வார ராசி பலன்களை எழுதியுள்ளார். நிலாச்சாரலிலும் வாராவாரம் ஜோதிடக் கேள்விக்கான பதில்களை அளித்துக்கொண்டு வருகிறார். அஸ்ட்ரோ டைமர்ஸ் டாட் காமின் பிரதான ஜோதிடராக உள்ளார்.

திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc. P.G.Dip. in journalism, சித்தாந்த ரத்னம்,சித்தாந்த நன்மணி
ஜோதிடர்,
எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com gayabala_astro@yahoo.co.in astrogayathri@rediffmail.com

ஆசிரியர்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வல்லமையில் புதிய பகுதி – ஜோதிடம்

 1.  நிலாச்சாரலிலும் வாராவாரம் ஜோதிடக் கேள்விக்கான பதில்களை அளித்துக்கொண்டு வருகிறார். 

  படித்திருக்கிறேன்..

  சிறப்பான பகிர்வுகள்..

  பயனுள்ள பகுதிகளுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

 2. நல்வரவு ஆகுக. 2012 பற்றி அறிய எல்லாரும் ஆவலாக இருப்பார்கள். நாஸ்ட்ரடாமஸ் போப்பாண்டவரின் மகிமை உயரும், இஸ்லாமியக்கவலைகள், இங்குமங்கும் புரட்சிகள் என்று புதிராரூடம் அளித்திருக்கிறார்!

 3. ராஜேஸ்வரி அவர்களும், இன்னம்பூரான் அவர்களும் வாழ்த்தியமைக்கு நன்றி.
  அன்புடன்,
  காயத்ரி பாலசுப்ரமணியன்.

 4. திருமதி காயத்ரி பாலசுரமணியன் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்

  அன்புடன்

  தமிழ்த்தேனீ

 5. திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்

  அன்புடன்

  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *