வந்தவாசியில் கல்விக் குறும்பட வெளியீட்டு விழா – செய்திகள்
வந்தவாசி. டிசம்பர் 04. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் யுரேகா கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கல்விக் குறும்பட வெளியீட்டு விழாவில், ஒவ்வொரு குழந்தையின் கல்வி வளர்ச்சியிலும் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்று குறும்பட இயக்குநர் எஸ். பிரதீப்குமார் பேசினார்.
விழாவிற்கு பிருதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் வே. மீனா தலைமையேற்றார். கருத்தாளர் மா. குமரன் அனைவரையும் வரவேற்றார்.
இயக்குநர் எஸ். பிரதீப்குமார் இயக்கிய ‘கனவு நிஜமாகுமா?’ குறும்படத்தை ஒன்றிய கவுன்சிலர் செ. சீ. மணி வெளியிட, பிருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா. செல்வகுமார் பெற்றுக் கொண்டார்.
நிறைவாக, ஏற்புரையாற்றிய இயக்குநர் எஸ். பிரதீப்குமார் பேசும்போது, ஒரு சமுதாயம் முன்னேற கல்வி மிகவும் அவசியம். குழந்தைகள் நன்றாக படிப்பதை பாராட்டி உற்சாகமூட்ட வேண்டும். ஆசிரியர்கள் கல்விப் பணிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நம்பிக்கையுடன் அனுகினால் எல்லாக் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் நன்றாகப் படிப்பதற்கு பெற்றோர்களின் அன்பான அரவணைப்பும், ஈடுபாடான பங்களிப்பும் அவசியம் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தெள்ளார், வந்தவாசி, சேத்துப்பட்டு ஒன்றியங்களைச் சேர்ந்த யுரேகா ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. முருகேசன் ஒருங்கிணைக்க, கருத்தாளர் சு. உமா சங்கர் நன்றி கூறினார்.