மதியழகன் 

சின்ன சின்ன

விஷயத்துக்கெல்லாம்

சந்தோஷப்படத் தெரியவில்லை

காவியம் பாடிய காலமெல்லாம்

மலையேறிப் போய்விட்டது

கவிதை வரிகளைப் போல

சன்மானமும் சுருங்கி விட்டது

வானம் பார்த்த பொழைப்பு

விவசாயிக்கு

சர்க்கார் உத்யோகஸ்தர்களுக்கு

கை நிறைய சம்பளம்

கவிஞன் காகிதம் வாங்கக் கூட

கடன் வாங்க வேண்டியிருக்கிறது

கவிதை வாசகர்களை விட

கவிஞர்கள் பெருகிப் போய்விட்டார்கள்

சந்தோஷம் தான்.

படைப்புகளில் ஜீவன்

செத்துப் போய்விட்டதே ஏன்?

ஆன்மாவை தமிழுக்கு

நேர்ந்துவிட்ட கவிஞனுக்குத்தான்

மொழியின் சானித்யம் தெரியும்

வயிறு காலியாக இருந்தாலும்

வரட்டு கெளரவத்துக்கு

குறைச்சலிருக்காது

தமிழர்கள் சாகும் போது

சும்மா இருந்தாலும்

தமிழ் சாகும் போதாவது

விழித்தெழு..

 

படத்திற்கு நன்றி: http://lizzyboo.hubpages.com/hub/Write-well-useful-tips-to-write-well-and-be-happy-about-it

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க