சந்திர கிரகணம்
ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்
இந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று ஏற்படும் சந்திர கிரகணம், இந்த ஆண்டின் கடைசிக் கிரகணமாகும். அத்துடன் இந்த ஆண்டில், மிக அதிக நேரம் நடைபெறும் கிரகணமும் இதுவே! இந்தியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா,நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், கிரகணத்தைப் பார்க்க இயலும். மாலை சுமார், 05.00 மணிக்கு, பௌர்ணமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் ஆரம்பிக்கும் கிரகணம், இரவு 09.48 மணிக்கு மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் முடிவடைகிறது. கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, ஹஸ்தம், சித்திரை, திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது நல்லது.
அத்துடன், கிரகண காலத்தில் சொல்லப்படும் மந்திரங்கள், அதிகப் பலனைத் தரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். எனவே இயன்ற வரை அன்று அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லலாம்.மேலும், அன்று பௌர்ணமியாகவும் இருப்பதால், சந்திரனை வழிபடுவதுடன், சந்திரனுக்கு உரிய துதியான “எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய், சந்திரா போற்றி, சற்குரு போற்றி, சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி!” என்ற துதியையையும் சொல்லி வர, அதிகப் பலன்கள் கிடைக்கும்.
சந்திரனை வழிபடுவோம், நம் சங்கடங்கள் யாவும் தீரும்!
படத்திற்கு நன்றி: http://www.blogfornoob.com/rambling/events/total-lunar-eclipse-december-10