நீதியின் மன்றத்தில்…..

புமா

ஈழத்தீவை சூழ்ந்திருப்பது
தண்ணிரல்ல…
கண்ணீர்.

எம் இரத்த சொந்தங்களின்
உயிரடங்கும் ஓசை
செவிகளில் இரைச்சலாய்..

சீதையை மீட்க
போர் அன்று
சீதைகளை சிதைக்க
உதவி இன்று.

என்ன தேசம்?
யார் ராஜ்ஜியம்?

பிள்ளையைக் கொல்ல
கள்ளிப்பால் கொடுக்கும்
அன்னை
பிள்ளைகளை கொல்ல
ஆயுதம் கொடுக்கும்
அன்னை தேசம்.

நீதியின் மன்றம்
சொல்லட்டும்
ஒரே தீர்ப்பு!

 

படத்திற்கு நன்றி : http://members.virtualtourist.com/m/3f7b2/788/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க