ஜெ.ராஜ்குமார்

தினம் ஒரு திருக்குறள் படித்திட வேண்டும்!

திரும்பிய பக்கமெல்லாம்

அதை உணர்த்திட வேண்டும்!

மனம் அதிலே நிலைத்திட வேண்டும்!

மனிதனின் தீய குணத்தினை மாற்றிட வேண்டும்!

வள்ளுவன் வகுத்த அதிகாரமெல்லாம் –

மனிதனை ஆதிக்கம் செய்ய வேண்டும்!

இதைப் போதிக்கும் திறமையில் – அனைவரும்

சாதிக்க வேண்டும்!

 

இரண்டு வரி வேதவாக்கு – இதை

இறுதி வரைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் நல்வாழ்வு!

மறதியில் கூட மறக்கக் கூடாத

உயிர்மூச்சு இது!

 

பிறவியிலே நீ – பிறந்த பயன்

வேண்டுமென்றால்

உறுதியோடு ஒரு துறவி போல –

திருக்குறளை நீ படித்து விடு…!

படித்தபடி நீ – நடந்து கொண்டால்

நீ நினைத்தபடி வாழ்க்கை இருக்கும்!

நீ தொட்டதெல்லாம் மணமணக்கும்…!

 

இனிக்கும் திருக்குறளை –

இனியாவது படிப்போம்!

மணக்கும் வாழ்க்கையை –

மனதோடு மணந்திடுவோம்...!
 
படத்திற்கு நன்றி:
 
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408055&edition_id=20040805&format=html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருக்குறள்

  1. வள்ளுவம் வாழ்க்கையில் வந்திட வேண்டும்   
         வனப்பாய் அதையே ஆக்கிட வேண்டும்,
    உள்ளதைச் சொன்ன ராஜ குமார்க்கு   
         உள்ளம் நிறைந்த வாழ்த்துச் சொல்வேன்…!                 
                                                     -செண்பக ஜெகதீசன்…

  2. திருக்குறள் பற்றிய கவிதைக்கு ராஜ்குமார் ஜெயராமனுக்கு நன்றி!
    நா. முத்துநிலவன் கட்டுரை அருமை. திருக்குறளை ஒவ்வொரு
    சமயத்தாரும் தமக்குச் சொந்தமானது என்று கருதுவது போலவே
    நாத்திகம் பேசுவோரும் தமக்குச் சொந்தமானது என்று சொல்லுகிறார்கள்.
    எனவே எல்லாரையும் ஈர்த்த திருக்குறள் வெற்றி பெற்றுவிட்டது.
    இதில் மீதி ஆராய்சிகள் எல்லாம் தேவை இல்லை. மனித குலம்
    உய்ய வேண்டும் என்ற நோக்கோடு எழுதப்பட்டது தான்
    திருக்குறள். மனிதர்கள் அதை ஏற்றுக்கொண்டு சொந்தம்
    கொண்டாடுவது பெருமையே. அக்கருத்துக்களை தங்கள்
    வாழ்வில் கடைபிடித்தால் அது தான் திருக்குறளுக்கு
    நிலையான பெருமையையும் புகழையும் தரும்.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *