ஜெ.ராஜ்குமார் 

புல்வெளிக் கூட்டங்கள்

புதியதோர் சட்டம் அமைத்தது…!

நெல் விளைவிக்காமல்

நெஞ்சம் சாய்வதில்லையாம்…!

உழவனை உழச் செய்து…

பழமை மறந்தவனைத் திருந்தச் செய்து…

பசி போக்கும் உயிர் நாடி இது – என்று

பலதை ருசிப்போர்க்கும் சொல்லி உணர்த்தும் இது!

கடமை உணர்ந்தவர்களாய்க்

கட்டாந்தரையில் 

படர்ந்த நாள்களை ஒழித்து…

கண்காட்சிப் பொருளாய் 

கண்டவர் பார்த்து, மிதித்து, அமர்ந்து, படுத்து

விளையாடியதை நிறுத்தி…

வறுமை வழக்கமான – மனித வாழ்க்கையில்

சிறுமை தந்திடும் புல்காடுகளாய்ப் பிறக்காமல் –

வறுமை ஒழித்தோங்கும் – வளமிக்க

நெல் பயிரின் சுவாசங்களாய் –

மனித உழைப்பில் – மலர்ந்திட

முடிவை எடுத்தது…!

 

படத்திற்கு நன்றி: http://www.dowagro.com/usag/rice

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *