செண்பக ஜெகதீசன் 

தீர்ந்து விட்டது மழை..

தென்னங்கீற்று

இன்னும் கண்ணீர் விடுகிறதே-

மழை போதும் என்றா,

போதாது என்றா!

சின்னப்பிள்ளை

சிரித்து அழைக்கிறது-

மழையே மழையே வா..

பெருசுகள் பேசிக்கொள்கின்றன-

போன வருச மழைதான்

பெருமழை..

பள்ளிப் பிள்ளைக்கு

ஏமாற்றம்-

அடடா லீவு போச்சே..

அம்மாவின் நம்பிக்கை-

ஈரத்துணிகளை

எடுத்திடலாம் காயப் போட்டு..

அப்பாவின் கவலை-

கடன்காரன் வந்திடுவானே…! 

கவலையில்லாமல்

கலகலப்பாய்ச் சிரித்துத்

தலை காட்டுகிறான் கதிரவன்…!

 

படத்திற்கு நன்றி:  http://grace.allpurposeguru.com/2010/01/strange-instruction-from-scripture-praise-god-in-suffering/         

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மழைக்குப் பின்

  1. அவரவர் கவலை அவருக்கு. ஆனால் அனைவருக்காகவும் சேர்ந்து கவலைப்பட கவிஞனால் மட்டுமே முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *