காயத்ரி பாலசுப்ரமணியன்          

மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கும், பக்திக்கும் உரிய மாத மாகும். இந்தப் பட்டியலில் சிறப்பான இடம் பிடிப்பது கிறிஸ்துமஸ் பண்டிகை. எளிய மாட்டுக் கொட்டிலில் பிறந்து, உலகிற்கு இரக்கத்தையும், அன்பையும் போதித்த யேசு பிரானின் பிறப்பு உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

வாழும் காலம் வரை பல அதிசயங்களைச் செய்து, மக்களிடையே நம்பிக்கை, அன்பு, பிறர் துன்பம் கண்டு இரங்குதல் ஆகிவற்றைப் போதித்த யேசுபிரான், சிலுவையில் உயிர் நீத்தார். அன்று முதல் சிலுவை கிறிஸ்துவ மதத்தில் தனி ஒரு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. நீளமான கூட்டல் குறி போன்று, விளங்கும் சிலுவை மூன்று முனைகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்றும் மனிதன், இறைவனை அடையக் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு, நம்பிக்கை மற்றும்  தியாகம் ஆகிய மூன்று அரிய குணங்களைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன. 

அன்பு- மனிதனை பிற உயிர்களோடும், இறைவனோடும் இணைக்கும் பாலமாகும். அன்பே கடவுள் அல்லவா?  இதைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. அன்பைப் பெற விரும்பும் மனிதன் அதனைப் பிறர்க்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் மனிதன் அன்பு மயமாய் விளங்கும் இறைவனை நோக்கிப் பயணம் செய்ய இயலும். அடுத்து நம்பிக்கை. இது மனிதனை வாழத் தூண்டுவதோடு, அவன் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையின் பக்கம் திருப்பும் சக்தி படைத்ததாகும்.  நம்பிக்கையே மனிதனின் உயர்வுக்கு,  அடிப்படையாக அமைகிறது.  அத்துடன் மனிதனின் எண்ண அலைகளை  ஆக்கப்பூர்வமான வழி பக்கம் திருப்புவதால், மனிதன் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு உயர்வான நிலையை அடைவான். அதுமட்டுமா? ஒவ்வொரு நாளும்,  மனிதனின் எண்ண அலைகளுக்கு உயிரும், உற்சாகமும் தருவது அவன் நம்பிக்கையே! எல்லாம் வல்ல இறைவன் மேல் மனிதன் வைக்கும் நம்பிக்கையே அவனை வழி நடத்துகிறது என்றால் அது மிகையாகாது! அதனால்தான் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற பழமொழியும் வந்தது போலும்! 

அடுத்து வருவது தியாகம். அது நாட்டு விடுதலை ஆயினும் சரி. மதமாக இருந்தாலும் சரி. தியாகத்தின் அடிப்படையில்தான் பல உன்னதமான விஷயங்கள் உருவாகி ன்றன. இறைவனை அடைய மனிதனுக்குத் தடையாக இருப்பவை பல. அவற்றை எல்லாம் மனிதன் அறுத்து விட்டு, பல தியாகங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த தியாகம் மூலம்தான்  மனிதன் பக்குவம் அடைகிறான். பக்குவம் பெற்ற மனம் இறைவனைத் தேடுகிறது. 

இந்தக் கருத்தை வலியுறுத்தும் சிலுவையையும், அதனைச் சுமந்த யேசுபிரான் பிறந்த நாளையும் மகிழ்வுடன்  கொண்டாடுவோம்!  இந்தக் கிறிஸ்துமஸ் நன்னாளில், உலகம் எங்கும், அன்பும், அமைதியும் நிலவட்டும்! 

திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc. P.G.Dip. in journalism, சித்தாந்த ரத்னம்,சித்தாந்த நன்மணி  

ஜோதிடர்,எண் 8, 2 வது குறுக்குத் தெரு,

மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,

புதுச்சேரி-605004.

செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com  gayabala_astro@yahoo.co.in  astrogayathri@rediffmail.com

 

படத்திற்கு நன்றி: http://www.freefoto.com/preview/05-08-5/Cross-on-a-Hill

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *