பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: புதன் 8-ல். சஞ்சலங்களை விலக்கி, துணிவுடன் செயலாற்றுவீர்கள். குரு ராசியில் இருந்தாலும், நன்மை செய்யும் வீடுகளைப் பார்ப்பதால், சுப காரியங்கள் விறு விறுப்புடன் நடைபெறும். மாணவர்கள் ஆசிரியர்கள் காட்டும் ஆதரவைத் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் வளமாக இருக்கும். வெளி இடங்களில் வேலை செய்பவர்கள் வாகனங்களுக்குரிய பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம். கலைஞர்கள் தேவையற்ற பரபரப்பிற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் சிந்தனைகள் சிதறாமலிருப்பதோடு திறமையும் பிறருக்கு புலப்படும்.இந்த வாரம் பத்திரிக்கைச் செய்திகளால் நிம்மதி குறைய வாய்ப்பிருப்பதால், பொது வாழ்வில் உள்ளவர்கள் எதிலும் நடு நிலையாக செயல்படுவது அவசியம்.

இ(ந)ல்லறம்: பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பிரச்னைகளை கையா ளுவீர்கள் .உறவினர் வருகையால் இல்லத்திலும், உள்ளத்திலும், கலகலப்பும், சந்தோஷ மும் கூடினாலும், பெண்கள் உழைப்பிற்கேற்றவாறு சத்தான உணவு வகைகளை தேந்தெடுப்பது நல்லது.

ரிஷபம்: இந்த வாரம் மனதுக்கிதமான சூழலும், பிரியமானவர்களுடன் உறவாடி மகிழும் வாய்ப்பும் கிடைப்பதால், மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பணிகளில் இறங்குவார்கள். கேது 1-ல் சுய தொழில் புரிபவர்கள் வேலைகளை முழு ஆர்வத்துடன் செய்தாலும், எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு வருவதில் சற்று தொய்வு இருக்கும். பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான முடிவெடுக்கும் முன் அதில் உள்ள சாதக பாதகங்களை கவனத்தில் கொள்வது நல்லது. கலைஞர்கள் சுறுசுறுப்பாக பாடுபட்டால், வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவரும்

இ(ந)ல்லறம் : பெண்கள் அக்கம் பக்கத்தாரிடம் அளவாக பழகி வந்தால், சங்கடங்கள் அருகே வராது. கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது வரவு செலவுகளை சரி பார்த்துக் கொண்டால், வீண் சந்தேகம் வளராமலிருப்பதோடு, உறவுகளும் சீராக இருக்கும் .

மிதுனம்: செவ்வாய் 3-ல். சுய தொழில் புரிபவர்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும், லாபமும் வந்து சேரும்., வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபார போட் டிகளை சமாளிப்பார்கள். சூரியன் 7-ல். பணிபுரிபவர்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை பட்டியலிட்டுக் கொள்வது நல்லது. .பொறாமைக்காரர்களின் சகவாசத்தை ஒதுக்குவது மூலம் மாணவர்கள் சிறந்த பலனைப் பெறலாம். 8-ல் இருக்கும் சுக்ரனின் பலத்தால்,கலைஞர்களுக்கு புதிய நட்பும், இனிமையான அனுபவங்களும் கிடைக்கும். குரு பலத்தால், பொது வாழ்வில் இருப்பவர்களின் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். 12-ல் கேது. ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு முதியவர்களைத் தேடி வரும்.

இ(ந)ல்லறம்:  சுக்ரனின் சஞ்சாரத்தால், பெண்கள் விரும்பிய புதிய பொருள்கள் வீடு வந்து சேரும். கடன் தீர்வு சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். அத்துடன் இந்த வாரம் விருந்து, விசேஷம் ஆகியவற்றிற்கு மகிழ்வுடன் பணம் செலவழிக்கும் வாய்ப்பும் வந்து சேரும்.

கடகம் : இந்த வாரம், ,கலைஞர்கள் தங்கள் திறமையால் அனைவரையும் அசத்தி விடுவார்கள். புதன் 5-ல். மாணவர்கள் மறைமுகக் கவலை மனதை அரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். திறமைகள் மங்காமலிருக்கும் . செவ்வாய் 2-ல். பணிபுரிபவர்கள் சிக்கலான தருணங்களில், பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொண்டால், பாதி பிரச்னைகள்தானே அடங்கி விடும். பொது வாழ்விலிருப்பவர்கள், வழக்கு தொடர்பான விஷயங்களில், நேரடியாக கவனம் செலுத்துவது அவசியம். 6-ல் உள்ள சூரியன் ,சுய தொழில் புரிபவர்களுக்கு, அரசு பணிகளில் இருந்த தேக்கத்தினை நீக்குவார். பொறுப்பில் இருப்பவர்கள் , தங்ககளிடம் கொடுக்கப்பட்ட, அலுவலக, பணப் புழக்கத்தின் மீது கவனம் வைப்பது அவசியம்.

இ(ந)ல்லறம்: பெண்கள் காரசாரமான உணவுகளை ஒதுக்கிவிட்டால், இந்த வாரம் ஜீரணக் கோளாறு மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் தலை காட்டாது. மேலும், அலுவலக அளவில், உழைப்பிற்குத் தகுந்த பாராட்டைப் பெற, அதிக முயற்சி தேவைப்படும்.

சிம்மம்: சனி 3-ல். பணம் கொடுக்கல் வாங்கலில் இருக்கும் சரளமான போக்கால், சுய தொழில் புரிபவர்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். .செவ்வாய் 1-ல். பணியில் இருப்பவர்களுக்கு, வீண் செலவுகள் அதிகரிக்கும். 4-ல் புதன். விளம்பரத் துறையில் உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும், கணிசமான லாபம் கிட்டும் 5-ல் சூரியன்.பொது வாழ்வில் உள்ளவர்கள் , தவறான கண்ணோட்டம் உடையவரிடமிருந்து விலகி இருப்பது நலம். அதிகரிக்கும், வீண் செலவும், நெருக்கடியும் இந்த வாரம் கலைஞர்களின் பொறுமையை சோதிக்கலாம். வியாபாரிகளுக்கு தொழிலாளர்களிடையே நிலவி வந்த மோதல் நீங்கும் . மாணவர்கள் கல்வித் தொடர்பான பணிகளைச் சேர விடாமலிருந்தால், பதற்றம் இன்றி பாடங்களை பயில முடியும்.

இ(ந)ல்லறம்: உதவி செய்தவர்களே உபத்திரவம் செய்யக் கூடிய நிலை நிலவுவதால், பெண்கள் எந்த விஷயத்திலும், கவனமாக இருக்கவும். பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை சற்று ஆறப் போடுதல் நல்லது. பெற்றோர்கள் ,பிள்ளைகளின் தவறான பழக்க வழக்கங்களை இதமாகக் கண்டிப்பது விரும்பிய பலனைத் தரும் .

கன்னி: புதனுடன், ராகுவும் 3-ல். தொல்லைத் தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், சுய தொழில் புரிபவர்கள் புது தெம்புடன் வலம் வருவார்கள் மாணவர்கள் படிப்பில் விசேஷ கவனம் செலுத்தி வாருங்கள். மதிப்பெண் பெறுவது மலைப்பாய் தோன்றாது. செவ்வாய் 12-ல். பணியில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும், வார இறுதியில், கேளிக்கை விழா என்று மகிழ்ச்சியாக நேரம் செல்லும். சனி 2-.ல். வியாபாரிகள் பங்குதாரர்களின் மனப் போக்கை உணர்ந்து செயல்பட்டால், வீண் சங்கடங்களைத் தவிர்த்து விடலாம்.. கலைஞர்கள் செயல்படும் போது அடுத்தவரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து செயல்பட்டால், கருத்து வேறுபாடு தலை காட்டாமலிருக்கும்.

இ(ந)ல்லறம்: குடும்ப வட்டத்தில் பெண்கள் , தங்கள் வேலைக்கு முட்டுக் கட்டை போட நினைப்பவர்களை பக்குவமாய் அப்புறப் படுத்தினால், பணிகளை செம்மையாய் செய்ய இயலும்.. மேலும், வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருப்பதோடு எதனையும் சீர்த்துக்கிப்பார்த்து செயல்பட்டால், பொருளாதாரம் சறுக்காமல் இருக்கும்.

துலாம்: சுக்ரன் 4-ல். கலைஞர்களுக்கு ,லாபம் நல்கும் பெரிய நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். சூரியன் 3 ல். வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும் பியவர்களின் எண்ணம் பலிக்கும். சனி 1-ல் வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்சனைகளை பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள், உங்களை அதிகம் புகழ்பவர்களிடம் கவனமாக இருக்கவும். 2-ல் ராகு. புதன். சுய தொழிலில் காலத்திற்கேற்ப மாறுதல்களை மேற் கொண்டால், போட்டிகளை முறியடிப்பது சிரமமாய் இராது. மாணவர்கள் பாடுபட்டு தேடிய நல்ல பெயரை பழுதாக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது.

இ(ந)ல்லறம்: பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லாவேலைகளும் சீராக நடக்கும். அத்துடன் உறவு வட்ட த்தில், பெண்கள் கடுஞ் சொற்களை தவிர்த்தால்,எல்லா உறவுகளும் சுமூகமாய் இருக்கும்.

விருச்சிகம்: செவ்வாய் 10-ல் இருந்தாலும், குருவின் பார்வை பெறுவதால், . பணியில் இருப்பவர்கள் பழைய வண்டியை விற்று, புதிய வண்டி வாங்கும் வாய்ப்பு கூடி வரும் . 1-ல் ராகு. புதன். பொது வாழ்வில் இருப்பவர்கள், பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். குரு 6-ல். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்பட வேண்டாம். . முதிய வர்கள் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவதுடன் எளிமையான உடற் பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்து வந்தால் மருத்துவச் செலவுகள் குறைந்து விடும். பணி சுமை கூடுவதால், கலைஞர்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது.

இ(ந)ல்லறம்: பெண்கள் இல்லத்திற்கு வேண்டிய புதிய பொருட்களை வாங்கும் முன் அவற்றின் பயன்பாடு மற்றும் விதிமுறைகளை தெரிந்து வாங்கினால், பணம் விரையமாகாமலிருக்கும். அத்துடன் யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது.

தனுசு: குரு 5-ல். படிப்பு விஷயங்களில் இருந்த மந்த நிலை மாறி, மாணவர்கள் சுறுசு றுப்பாக செயல்படுவார்கள். .6-ல் இருக்கும் கேது, வழக்குகளில் நிலவிய மந்த கதியை மாற்றுவார். 11-ல் இருக்கும் சனி ,கலைஞர்களின் திறமையை பிறர் அறியும்படியான சந்தர்ப்பங்களை உருவாக்குவார். வியாபார உயர்வுக்கு சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சூரியன் 1-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள், அதிக அலைச்சல் , அறி முகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். ராகு 12-ல். வியாபாரிகள், செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும். செவ்வாய் 9-ல். பணியில் இருப்பவர்கள், தங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகை களை முறையாக பயன்படுத்திக் கொள்வதே நல்லது. .

இ(ந)ல்லறம்: பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு: குடும்பத்தில் இதற்கு முன்பு இருந்த பின்தங்கிய நிலை மாறுவதால் வீட்டில் நிலவிய குழப்பங்கள் மறைவதோடு, வீட்டுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். உறவினர்கள் வகையில் நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம்:சுக்ரன் 1-ல். கலைஞர்கள் தங்கள் பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வார்கள். 11-ல் ராகு. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உயர்வான இடத்திலிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். குரு 4-ல். மாணவர்கள் தங்களின் திறமையை பிறர் அறியும்படியான சந்தர்ப்பங்களை நல்ல முறையில், பயன்படுத்திக் கொள்ளவும். 5-ல் கேது. புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அனுகூல தகவல் வந்து சேர்வதில் சற்று சுணக்கம் இருக்கும் செவ்வாய் 8-ல். பணியில் இருப்பவர்கள், முக்கியமான பொறுப்புகளை ஏற்கும்படியான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் . புதிய வீடு மாற்றமோ அல்லது கட்டுவதற்கோ, சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம்.

இ(ந)ல்லறம்: பெண்கள், குடும்ப அமைதிக்காக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும். .எனவே பிறர்க்கு வாக்கு கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவதோடு, பண விஷயத்திலும் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சீரான நிலையில் இருந்து வரும்.

கும்பம்: 11-ல் உள்ள சூரியன், பணியில் இருப்பவர்களுக்கு, அலுவலகத்தில் ஒற்றுமை, புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை ஆகியவற்றை அளிப்பார் .3-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பதில் காலதாமதம், உண்டாகும். 10-ல் புதன். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமையும், புதிய தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றியும் கிட்டும். 4-ல் கேது. கலைஞர்களுக்கு போட்டி-பொறாமைகளால் தொழில் பாதிப்பு, வரவேண்டிய தொகை வந்து சேருவதில் காலதாமதம் உண்டாகும். 7-ல் செவ்வாய். மாணவர்கள், கவனக் குறைவைத் தவிர்த்து செயல்பட்டால், தேர்வுகளை பயமின்றி எழுத இயலும். 9-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள், தங்கள் சுறுசுறுப்பு மங்காமல் பார்த்துக்கொண்டால், எடுத்த காரியங்கள் விறு விறுவென்று நடைபெறும்

இ(ந)ல்லறம் : பெண்கள், வெளி வட்டாரங்களிலிருந்து வரும் வம்பு, தும்பு ஆகியவற்றில் ஈடுபடாமலிருங்கள். அமைதியாக வேலைகளைச் செய்ய இயலும். பிள்ளைகளின் பல் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், அவர்கள் படிப்பில்
எந்த பாதிப்பும் இராது

மீனம்: 2-ல் குரு. முன்பிருந்த கவலை மாறி மாணவர்களின் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். 3-ல் கேது. பணியில் இருப்பவர்களுக்கு இதுநாள் வரை வராமலிருந்த பதவி உயர்வு ஆகியவை வந்து சேரும். 6-ல் செவ்வாய். எப்படி முடியுமோ என்று மலைப்பாய்த் தோன்றிய வீடு கட்டும் பணி மளமளவென்று நடைபெறும். சனி 8-ல். கலைஞர்கள் கௌரவத்தைக் கெடுக்க நினைப்பவர்களை அருகில் அண்ட விடாமலிருப்பது புத்திசாலித் தனம். புதன் 9-ல். மாணவர்கள் ஒவ்வாத பழக்கவழக்கங்களுக்கு தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கையில் கலக்கம் இராது. 10-ல் சூரியன். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் அறிவுக் கூர்மையால், முடியாது என்றிருந்த விஷயங்கள் முடிந்து, தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொள்வார்கள்.

இ(ந)ல்லறம்: பெண்கள் படபடவென்று பேசுவதைக் குறைத்தால்தான், பிறரின் கருத்துக்களை ஊன்றி கவனிக்க இயலும்.மேலும், பண விவகாரங்களில் அலட்சியமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களிடையே அதிருப்தியும், முணுமுணுப்பும் தோன்றி மறையும்.

Leave a Reply

Your email address will not be published.