பெருவை பார்த்தசாரதி 

‘டேய் சூரி என்னடா இன்னும் வெங்கியக் (வெங்கட்) காணும்.’ 

‘அவன் எப்போதுமே இப்படித்தான் கடசீ நேரத்துலே வந்து கழுத்தறுப்பான்’. 

‘ஷார்ப்பா ட்ரெய்ன் வந்துரும். டிக்கெட்டு வேறே அவங்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்குது’ 

‘ஜரா(ஜெராமன்) ஓடிப்போய் ஏறு, அவன் வந்துட்டான் மூடி டைப் வெங்கி. போன வாட்டியும் இதேமாறி ஓடுற வண்டியிலதான் ஏறினான். எந்த நேரத்தில எத செய்வான்னு யாருக்கும் புரியாது’ 

‘ட்ரெய்ன விட்டு இறங்கினதும், ஆறு மணிக்கு சதுரகிரி மல ஏற ஆரம்பிச்சா இரண்டு மணிக்கு மேலே போயிடலாமா?’ 

‘ஏண்டா வெங்கி, ஆரம்பத்துலயே மூட் அவுட்டா?. இது ஜாலி டிரிப். இங்கயாவது ஓ சுபாவத்த மாத்திக்க?’ 

‘ஜரா என்னடா ஆச்சு வெங்கிக்கு?. நேத்திலேர்ந்து யாரு கிட்டேயும் பேச மாட்டேங்கிறாங்?’ 

‘தேச்சு வைச்ச வெளக்கு மாதிரி பிரகாசமா இருக்கிற அவன் காதலி யாரோடயாவது ஓடிப் போயிருப்பா?’. இந்த உம்மணாமூஞ்சியோட எப்டிக் குடித்தனம் பண்ணறதுன்னு?’ 

‘அது இல்ல’, நேத்து பூரா, ஆபீஸ்ல சொட்டத் தல ஆபிஸரோட லடாய் நடந்திச்சு அதா இருக்குமோ?’ 

‘ஒரு நாள் நல்லாப் பேசுவான், ஒருவாரம் மூஞ்சியத் தூக்குவான் மூடி ஃபெலோ’ 

‘கால்ல செருப்புக் கூட போடல. வெறித்தனத்தோட நாலு கிலோ மீட்டர் மலையேறிட்டான், நம்ம கூட சேர்ந்தும் வரல. ஒரு வார்த்தை கூட வாயும் திறக்கலே, போற வேகத்தப் பாத்தா, மல மேல, சாமி கும்பிடப் போறானா? இல்ல எதாச்சும் சாதிக்கப் போறானா? ஒண்ணும் வெளங்கலடா சூரி’ 

‘ஏய் வெங்கி நாங்க எதச்சொன்னாலும் வெறிக்க வெறிக்க முழிக்கிறே, சாமி கும்பிடற இடத்தில பிரச்ன எதுவும் பண்ணாத, எதாவது இருந்தாச் சொல்லித் தொலை?. வழில கோரக்கர் குக உள்ள போன நீ அங்கிருந்து வெளிய வர மாட்டேன்னு அடம்புடிச்ச. இப்ப மேல வந்து எப்டி கழுத்த அறுக்கப் போறியோ தெரியல!’ 

‘அப்பாடா! ஒரு வழியா மல முகட்டுக்கு வந்துட்டோம், அரை மணில சாமி தரிசனம் செஞ்சுட்டு, சட்டு புட்டுனா இறங்க ஆரம்பிச்சாதான் இருட்டுறதுக்குள்ளே அடிவாரம் போய்ச் சேரலாம்.’ 

‘ஜரா,.. எங்கடா வெங்கி?’ 

‘உனக்கு முன்னாலே அவன் சாமி கும்பிட்டுட்டு அந்த வழுக்குப் பாற மேலே தவம் பண்றாம் பாரு’ 

‘ஏய் சூரி அவனுக்கு ஏதோ பிராப்ளம் போலருக்கு, அவன் மூஞ்சியே சரியில்ல, ஏடா கூடாம எத்தயாவது பண்ணி வைக்கப் போறான். எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கோ, ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிட்டான்னா? அவன் அம்மாவுக்குப் பதில் சொல்லியாகணும்.’ 

‘ஏற முடியாத எட்டடி உயர வழுக்குப் பாறல எப்டிடா ஏறுன வெங்கி?, கீழ இருக்கற சாமியக் கும்பிடாம, உச்சில ஏறி உரங்குட்டானா உக்காந்துட்ட, உனக்கு ஏண்டா இந்த விபரீத வேல?’ 

‘ஏய் சூரி, பதினெண் சித்தர்ல, அழுகணிச் சித்தரோட அருள் கிடச்சிருக்கும் போல!’ 

‘ஆ.. ஆமாண்டா. நீ சொல்றது நிஜந்தான். அவன் கண்ணுல தண்ணி வருது பாரு’ 

வெல்டிங் ராட் விளிம்பில தெறிப்பது போல வெங்கி கண்ணுலேர்ந்து தீப்பொறி பறக்க ஜராவ வெறிக்கிறான். 

‘வெங்கி நீ இறங்கி வர வழி இல்ல, அப்படியே குதிச்சு வாடா டைம் இல்ல. மூணு மணிக்கு இறங்க ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும். வெளிச்சம் மறயறதுக்குள்ள அடிவாரம் இறங்கிடலாம்’. 

‘என்னடா இவ்ள வெறுப்பேத்தியும், அவங்கிட்ட ஒரு சலனமும் இல்ல. நமக்கு நேரம் சரியில்லன்னு நினக்கிறேன் ஜரா, வழுக்குப் பாறக்கு அந்தப் பக்கம் 3000 அடிப் பள்ளம், அவன் விழுந்தா கருமாதிக்குக் கூட எலும்பு கிடைக்காது’ 

‘அய்யோ!. . . ‘ஏண்ட இவன இழுத்துக்கிட்டு வந்தோம்னு இருக்கு, நேத்திக்கு அவன் அம்மா கூட சொன்னாங்க, ரொம்ப நாழி யாரோடயோ செல்போன்ல தகராறாம். அச்சு பிச்சுன்னு எதாவது பண்ணான்னா நாமதான் எல்லாத்துக்கும் பொறுப்பு’ 

‘நீ ஒரு சரியான மாங்கா மடயண்டா ஜரா, இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் அவனக் கூப்பிடாதேன்னு சொன்னேன், நீ கேக்கல. அவன் எந்த நேரத்திலே என்ன செய்வான்னு யாருக்கும் தெரியாது’ 

‘ஏய் அங்க பாரு சூரி.!’ அவன் சடார்னு கைய விரிச்சிக்கிட்டு எந்திரிக்கிறான்டா!’. 

இருவருக்கும் வயிற்றில் ஒரு இனம் புரியாத சங்கடம். சட்டென்று பாறயிலிருந்து குதிக்கிறான்! வெங்கி. 

‘பேசிப் பேசியே வீணாப் போன வெட்டிப் பசங்களா. ஒரே ஒரு நாள் மெளனவிரதம் இருந்து மலயேற விடறீங்களாடா பாவிங்களா? அர நாள்ல பேசக்கூடாத எல்லாத்தயுமே பேசிட்டீங்களே?. உங்க தொந்தரவு தாங்காம அந்தப் பக்கத்திலே குதிக்கப் பாத்தேன்டா, பரதேசிங்களா.’ 

குமாருக்கும், செந்திலுக்கும் ஆத்திரத்துல அவன அங்கேர்ந்து அதல பாதாளத்திலே தள்ளியிருக்கலாம்ன்னு தோணுது. 

வெங்கி சட்டென்று  மெளனவிரதத்தை முடித்து, விருட்டென்று தொடருகிறான் பாதயாத்திரயை மீண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on "பாத யாத்திரை விரதம்"

  1. நாட்டிலே நடக்கும் உண்ணாவிரத்தைப் பற்றி ஏதேனும் தொட்டுவிட்டிருப்பாரோ என்கிற ஐயம் பற்றிக் கொண்டது.
    எனினும் எந்த ஒரு பிரச்சினையிலும் காரணங்கள் பல இருக்கும் என்பதை பகிரங்கமாய் சொல்லும் கதை!

  2. Delicately sarcastic social comment.Narration absorbing. Of course one could guess the end through the title.

  3. Dear Sarathi sir,

    It is nice, short and sweet strory. A great theme naratted in very a simple way. Pls keep writing many more such stories.

  4. Dear Sir,
    It is nice,  Adikadi ippadi eluthungo, Good Day 
    HAVE A NICE AND WONDERFUL NEW YEAR 2012.
    WISHING U A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2012

  5. மிக அருமையான முடிவு! சிறு கதைகள் நெடுந்தொடராக வாழ்த்துகள்!

  6. யப்பா பேசாம இருக்கிறதெங்கிறது என்னால முடியாது. ஆனா இந்த மௌன விரதம் ஒரு யோகா. 

    ரொம்ப அருமையா சொல்லி இருக்கே 

    நன்னா இருக்கு நான் கூட வேற ஏதோன்னு நினைச்சுட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.