ஜெ. ராஜ்குமார் 

பத்தினிய மணக்க

பணம் ஏன் கேக்கற?

உத்தமியே இல்லாத

பொண்ணு கிட்ட

பணம் ஏன் கொடுக்கற?

ஓர் இரவோடு இல்லை வாழ்க்கை

அதையும் தாண்டி

இதயம் பார்த்து இணைவது வாழ்க்கை

 

உன் உறவோடு வருவாளே

உன் சுமையெல்லாம் ஏற்பாளே

உனக்காகக் கிடப்பாளே…

துளிர் நெஞ்சம் அவள்தான் –

துள்ளிக் குதித்தோடுவாள் உன்னோடு

பள்ளியறை வாசலில் இருந்து – உன்

வாழ்வு இறுதி வரைக்கும் –

குறையேதும் இல்லாமல் பார்த்துக் கொள்வாள்…!

உன் குழந்தையெல்லாம் – அவள்

குறைகூறாது பெற்றுக் கொள்வாள்

உனக்கே பெருமை சேர்த்திடுவாள்…!

 

சரியான மனிதனாக நீ இருந்தால் – தினம்

அவளோடு முறையாகத் துணை புரிந்தால் – உன்

இல்வாழ்க்கை இனித்திடும்

இனியேனும் பணம் கேட்டு – உனக்காக வாழ்ந்திடும்

அந்த உறவை விலை பேசாதே…! – இருமனம் இணையும்

திருமணத்தைக் கொச்சைப் படுத்தாதே!

 

படத்திற்கு நன்றி: http://www.citysharing.ch/?goto=invited-projects&id=0

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க