இன்னம்பூரான்
01 01 2012

1.06: இன்று ஹோமர் என்ற கிரேக்கப் படைப்பாளரின் ‘ஒடிஸி’ என்ற காப்பியத்தை மறுபடியும் படிக்க நேரிட்டது. அவர் எழுதிய ‘ஒடிஸி’ &‘இலியட்’ என்ற காப்பியங்கள், நமது ராமாயணம், மகாபாரதங்கள் போன்ற இதிகாசங்கள்.

1.07: இதனுடைய காலகட்டம் கிருஸ்துவுக்கு முந்தய எட்டாவது நூற்றாண்டு என்பது புலவர்களின் ஏகோபித்த அபிப்ராயம். தொன்மை இலக்கியம்.

1.08: அதனுள் மிளிரும் இலக்கியச் சுவையைப் பற்றி சொல்லி மாளாது. பெருங்கதை; அபாரமான பின்னல்கள்; வரலாறும் கற்பனையும் இரண்டறக்கலந்த ரசவாதம்; கதை மாந்தர்களின், தெய்வங்களின் குணாதிசயங்களின் வர்ணனை சித்திரக்கூடம் போல. நிகழ்வுகளும், துணிச்சல் மிகுந்த செய்கைகளும், வீரமும், பாமரமும் அருமையாகக் கலந்த கூட்டாஞ்சோறு; போர்க்களம் சுற்றி வந்தாலும், வீடு தான் மையம்.

1.09: ஹோமரின் கதை சொல்லும் விதம் தனித்துவம் படைத்தது. சுருங்கச் சொல்லின், நிகழ்காலம் மூலம் கடந்த காலத்தை, கட்டி, இழுத்து வருகிறார். யாராவது கேட்டால், மேலும் சொல்ல ஏதுவாகும்.

1.10: வல்லமை வாசகர்களுக்கு சம்பிரதாயமாக புத்தாண்டு வாழ்த்துக்களை அளிப்பதற்கு பதிலாக, ஹோமரின் வாயிலொன்று அமைத்து, வல்லமை இதழ், ஆசிரியக்குழு, ஆலோசனைக்குழு, உதவியாளர்கள், நலம் விரும்பிகள், வாசகர்கள் யாவருக்கும், அதன் மூலம் ‘அறிவுக்கிடங்காக, செல்வக்களஞ்சியமாக, மகிழ்ச்சிக்கூடமாக 2012 அமையட்டும் என வாழ்த்துக்கள்.

http://www.mlahanas.de/Greeks/Bios/HomerIliadOdyssey.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *