பாகம்பிரியாள்
தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளட்டும்

என்கிற தைரியத்தில்

தலை நிமிர்ந்து நடக்கும் அவன் 

தன்னையறியாமல் அனுப்புகிறான், விழி மூலம் செய்திகளை ! 

தேடல் இருந்தால்தான் எதுவுமே  ருசிக்கும் என்பதில் 

தெளிவாக இருக்கும் அவளும்  தேடிக் கொண்டிருக்கிறாள்

தன் இனிய வாழ்க்கைத்  துணையாக வருபவரை! 

இருவரையும் எங்கு எப்படி இணைக்க வேண்டும் 

என்பதற்காகத் தன் வியூகங்களைத்  தயார் செய்து,

அமைதியாய்க் காத்திருக்கிறது நதிக்கரையில் காதல்,

அன்பு என்னும் தூண்டிலைப் போட்டபடி!

 

படத்திற்கு நன்றி: http://romanticlovepictures.com/love-pic-Love_eyes.php

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தூண்டில்!

  1. நன்று.

    தேடியது கண்கள்,
    தூண்டிலில் மாட்டின இதயங்கள்,
    தொடரட்டும் வாழ்க்கைப் பயணம்…!

                           -செண்பக ஜெகதீசன்…

  2. கவிதையை விட, அதன் கருத்தும், கவிதையின் கடைசி இரண்டு வரிகளும் அருமை !

Leave a Reply

Your email address will not be published.